இருதரப்பினர் மோதல்; பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட 15 பேர் மீது வழக்கு

இருதரப்பினர் மோதல்; பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட 15 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இருதரப்பினர் மோதல்; பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட 15 பேர் மீது வழக்கு
Published on

விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி தாவீது நகரை சேர்ந்தவர் ஜோஸ்வா கண்ணன். பாதிரியாரான இவர் செம்பட்டி என்.ஜி.ஓ. காலனியில் உள்ள விஜயலட்சுமி என்பவர் வீட்டில் ஜெபகூட்டத்தை நடத்தினார். அப்போது அங்கு வந்த அருப்புக்கோட்டை ஒன்றிய பா.ஜ.க. நிர்வாகிகள் சுரேஷ்குமார், பூலோகராஜா மற்றும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாக சுரேஷ்குமார் மற்றும் ஜோஸ்வா கண்ணன் ஆகிய இரு தரப்பினர் தாலுகா போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் அருகே உள்ள பெரியபாளையத்தை சேர்ந்த திருமணமான 27 வயது பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துபாண்டி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பெண் அடிக்கடி பண உதவி செய்து வந்தார். இதனை அவரது கணவர் கண்டித்ததால் முத்துபாண்டி உடனான பழக்கத்தை அந்த பெண் தவிர்த்தார். இதனால் ஆத்திரமடைந்த முத்துபாண்டி சம்பவத்தன்று அந்த பெண்ணிடம் முகத்தில் ஆசிட் வீசுவேன் என மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com