என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Long time"

    • தொலைதூர பயணம் மனதை இதப்படுத்தி பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்கும்!
    • பயணம், மகிழ்ச்சியான உணர்ச்சிகளை அதிகப்படுத்தி, படைப்பாற்றால் திறனை அதிகரிக்கும்.

    நண்பர்கள், உறவினர்கள் அல்லது தெரிந்தவர்களிடம் சென்று மனது கொஞ்சம் கவலையாக இருக்கிறது எனக்கூறினால், பலரின் அறிவுரை "வெளியே சென்று வாருங்கள். எல்லாம் சரியாகிவிடும்" என்பதுதான். பலரும் இவ்வாறு கூறுவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? நீண்ட தொலைவு பயணம் செய்வது மனதுக்கும், உடலுக்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அந்தவகையில், ஆண்களைவிட அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் பெண்கள் அடிக்கடி பயணம் செல்வது அவர்களுக்கு நல்ல ஆறுதலையும், ஆரோக்கியத்தையும் தருமாம். தொலைதூர பயணம் மனதை இதப்படுத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குமாம். தொலைதூர பயணத்தால் நாம் பெறும் பலன்கள் குறித்து பார்ப்போம். 

    குறையும் மன அழுத்தம்

    வேலைக்கு செல்வோர் அல்லது குடும்பத்தை விட்டு வெளியூர்களில் இருப்போர், நகரத்தில் வாழ்பவர்களுக்கு அதிகளவு மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. காரணம் அவர்களின் வாழ்க்கைச்சூழல்... ஒரே இடத்தில் அதிக நேரம் இருப்பது, வெளியில் அதிகம் செல்லாதது, வேலையைவிட்டு வந்தால் வீடு, வீட்டைவிட்டால் அலுவலகம், மற்ற வேலைகளை பார்ப்பது, சாப்பிடுவது இதற்கே நேரம் சரியாக இருக்கும். மனிதர்களிடம் அதிகம் பேச நேரம் இருக்காது. ஒருவரிடம் பேசும்போது நம் மனதில் இருக்கும் எண்ணங்களை, உணர்ச்சிகளை வெளிப்படுத்துவோம். பேசாதபோது அந்த உணர்ச்சிகள் உள்ளுக்குள்ளே இருக்கும். மேலும் சோகமான நிகழ்வு என்றால் அதை மீண்டும் மீண்டும் நினைத்து நம்மை நாமே அழுத்தத்திற்கு உள்ளாக்கி கொள்வோம். உணர்ச்சி ரீதியான அதிகப்படியான சுமையை சுமப்போம். இதன் விளைவாக பதற்றம் மற்றும் மன சோர்வு ஏற்படலாம்.

    மேலும் அதிகப்படியான தனிமை ஒருவித வெறுப்பு உணர்வை ஏற்படுத்தும். எதன்மீதும் ஆர்வம் இருக்காது. இந்த மனநிலையில் இருந்து மாற்றம் தேவை என்றால், இந்த அழுத்தத்திலிருந்து வெளிவர வேண்டுமென்றால் ஒரு பயணம் அவசியம். அது சொந்த ஊர்களுக்கு செல்வதாக இருக்கலாம், செல்லாத ஊர்களுக்கு செல்வதாக இருக்கலாம் அல்லது நீண்ட தொலைவு பயணம் மேற்கொள்வதாகவும் இருக்கலாம். பயணத்தில் மனிதர்கள் இல்லையென்றாலும் நாம் இயற்கையில் இருக்கும் எதையாவது வேடிக்கை பார்த்துக்கொண்டே செல்வோம். இயற்கை சூழலில் நமது மனமும், உடலும் ஓய்வெடுக்கின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் மன அழுத்தம் குறையும். மேலும் பயணம் மகிழ்ச்சியான உணர்ச்சிகளை அதிகரிக்கும். இது வேலையில் கவனம் செலுத்த உதவும். 

    படைப்பாற்றல் திறன் அதிகரிக்கும்

    அனுபவங்களைப் போலவே இயற்கையும் நிறைய பாடங்களை கற்றுக்கொடுக்கும். நீங்கள் கவனித்திருப்பீர்களா? என தெரியவில்லை. பூங்காவிற்கோ அல்லது பசுமையான, பசுமை நிறைந்த இடத்திற்கோ நாம் சென்றால் மனதில் என்ன கவலைகள் இருந்தாலும் அது நினைவில் வராது. அதாவது எந்த எண்ண ஓட்டமும் மனதில் இருக்காது. வெற்றிடமாக எதுவும் தோன்றாது. அமைதியாக உட்கார்ந்திருப்போம். வெளியில் இருப்பது நம் மனதில் நிம்மதியான விளைவுகளை ஏற்படுத்தும். அன்றாட வாழ்க்கையின் தேவைகளிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க இயற்கை நமக்கு மன அமைதியை அளிக்கும். ஒரு தெளிவு கிடைக்கும். மனம் தெளிவாக, அமைதியாக இருக்கும்போது பிரச்சனைகளுக்கான தீர்வு எளிதில் கிடைக்கும். நிறைய தோன்றும். படைப்பாற்றால் அதிகரிக்கும். எழுத்தாளர்கள் பலரும் அமைதியான, பசுமையான சூழலைத்தான் விரும்புவார்கள். 

    உடல்நலன் மேம்படும்

    இயற்கை சூழலில் இருக்கும்போது கார்டிசோல் அளவு குறைகிறது. கார்டிசோல் அளவு குறைந்தால் மனஅழுத்தம் குறையும். அடிக்கடி வெளியே இருப்பது இதய நோய் விகிதங்களைக் குறைக்க வழிவகுக்கும். மேலும் எலும்புகள், இரத்த அணுக்கள் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புக்கு முக்கியமான வைட்டமின் டி அளவு சூரிய ஒளியால் அதிகரிக்கும். 

    மன ஆரோக்கியம்

    இயற்கை, மன அழுத்தம் மற்றும் கோப உணர்வுகளைக் குறைக்க உதவும். உடற்பயிற்சியும் இதற்கு உதவும், ஆனால் நீங்கள் வெளியில் இருக்கும்போது இது இன்னும் சிறந்தது. பசுமையான இடங்களுக்குத் தொடர்ந்து செல்வது மனச்சோர்வு அபாயத்தைக் குறைப்பதோடு, செறிவு மற்றும் கவனத்தை மேம்படுத்துகிறது. வெளியில் இருப்பது சமூகத்தோடு இணங்கச்செய்யும். எடுத்துக்காட்டாக கூறவேண்டுமென்றால், ஒரு பூங்காவுக்கு செல்கிறோம் என்றால் அங்கு நமக்கு தெரியாதவர்கள் சிலரை பார்ப்போம். இரண்டு, மூன்று நாட்கள் பூங்காவிற்கு சென்றால் அவர்களுடன் ஒன்றிணைவோம். வெளியூர்களுக்கு செல்லும்போது முகம் தெரியாதவர்களோடு பேசுவோம்.


    பல கவலைகளுக்கு ஒரேமருந்து பயணம்

    இது மனிதர்களிடம் எளிதில் ஒன்றாக உதவும். கூடுதலாக, நீங்கள் தொடர்ந்து வெளியே இருக்கும்போது நன்றாக தூங்குவதைக் காணலாம். இயற்கை ஒளியில் தினமும் படுவது தூக்கம்/விழிப்பு சுழற்சிகளை சீராக்க உதவுகிறது. ஒவ்வொரு நாளும் சூரிய ஒளியில் வெளியே செல்வதை உறுதி செய்வதன் மூலம், இரவில் தூங்கும் திறனை மேம்படுத்தலாம். பூங்காக்கள் மற்றும் பசுமையான இடங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் குறைவான மன உளைச்சலைக் கொண்டுள்ளனர். அதிக சுறுசுறுப்புடன் செயல்படுகின்றனர்.  மேலும் நீண்ட ஆயுட்காலத்தை கொண்டுள்ளனர். இயற்கையின் மீதான வெளிப்பாடு நாள்பட்ட நோயால் ஏற்படும் இறப்பைக் குறைக்கும்.

    பயணம் செல்லவில்லையென்றால், என்ன செய்யலாம்?

    ஒருநாளைக்கு குறைந்தது 5 நிமிடமாவது சூரிய ஒளியில்படுங்கள். காலில் இருக்கும் செருப்பை கழற்றிவிட்டு கொஞ்சநேரம் புல்வெளியில் நடந்து செல்லுங்கள். பூங்காக்கள் அல்லது வெளியில் மதிய உணவை சாப்பிடுங்கள். தொலைபேசியில் பேசினால் வெளியே நின்று பேசுங்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல முடியாவிட்டாலும், பூங்காவிற்கு செல்லுங்கள். உங்கள் சைக்கிளில் தூசியைத் தட்டிவிட்டு, அக்கம் பக்கத்தைச் சுற்றி வாருங்கள். ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு, ஒரு நிழல் தரும் மரத்தடியில் உட்காருங்கள். வீட்டு முற்றத்திலோ, முன்புறமோ செடி, கொடிகளை நடுங்கள். வாரத்திற்கு ஒருமுறையாவது மனதுக்கு நெருக்கமானவரிடம், யாராக இருந்தாலும் சரி மனம்விட்டு பேசுங்கள். 

    • இளவேனில் புவனகிரியில் உள்ள ஒரு தனியார் ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார்.
    • பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    புவனகிரி அருகே கீரப்பாளையம் அடுத்த மேல வன்னியர் மேலத்தெரு இளங்கோவன். விவசாயி. இவரது மகள் இளவேனில் (வயது 23) கல்லூரி முடித்து விட்டு புவனகிரியில் உள்ள ஒரு தனியார் ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் காலை வயலில் வேலை செய்த அவருடைய தந்தைக்கு உணவு எடுத்துச் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாயார் சித்ரா கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன இளவேனிலை தேடி வருகின்றனர்.

    ×