search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில்  நகை வாங்குவது போல் நடித்து தங்க நகை திருடிய 2 பெண்கள் கைது
    X

    கைது செய்யபட்ட பெண்களை படத்தில் காணலாம்.

    பண்ருட்டியில் நகை வாங்குவது போல் நடித்து தங்க நகை திருடிய 2 பெண்கள் கைது

    • பண்ருட்டி ராஜாஜி சாலையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு பர்தா அணிந்து 2 பெண்கள் வந்தனர்.
    • திடீரென ஊழியரின் கவனத்தை திசை திருப்பினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ராஜாஜி சாலையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு பர்தா அணிந்து 2 பெண்கள் வந்தனர். அவர்கள் நகை வாங்குவது போல் கடை ஊழியர்களிடம் பேச்சு கொடுத்தார்,தோடு வேண்டும் என்று கூறவே ஊழியர்களும் ஒவ்வொரு நகையாக எடுத்து மேஜையில் வைத்து காண்பித்தனர். அப்போது திடீரென ஊழியரின் கவனத்தை திசை திருப்பிய அவர்கள் 6 கிராம் தோடை திருடி பேக்கில் வைத்து கொண்டு அதற்கு பதிலாக தாங்கள் கொண்டு வந்திருந்த கவரிங் தோட்டைடேபிளில் வைத்து விட்டு அங்கிருந்து வேகம் வேகமாக வெளியேறினர்.

    இதையடுத்து ஊழியர் அவர்களை கூப்பிட்டு பார்த்தும் பயன் இல்லை. அதற்குள் அந்த பெண்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர் தோடை பரிசோதித்தபோது அது கவரிங் என்றும், ஏமாற்றி விட்டு தங்க நகையை பெண்கள் திருடி சென்றதும் தெரியவந்தது.

    இந்த சம்பவம் பண் ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் இதேபோல நெய்வேலி இந்திரா நகரில் உள்ள நகைக்கடை மற்றும் விருத்தாச்சலத்தில் உள்ள நகைகளை ஒன்றில் நகை திருடியது தெரிய வந்தது.

    இது குறித்து கடை மேலாளர் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தங்க வேலுஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டார். டி.எஸ்.பி. தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் தங்கேவல் தனிப்படை போலீ சார் ஆனந்த், ராஜி, கணேச மூர்த்தி, ஹலீமாபீவி ஆகியோர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    கைது

    தனி படை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கடை யில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 2 பெண்கள் பர்தா அணிந்து முகத்தை முழுமையாக மூடி இருந்ததால் அவர்களின் முக அடையாளங்கள் பதிவாக வில்லை. இருந்தா லும் அந்த காட்சிகளை அடிப்படையாக கொண்டு அவர்கள் யார்? இதற்கு முன்னர் வேறு ஏதாவது கடையில் திருட்டு செயலில் ஈடுபட்டிருந்தனரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம் ஆகிய இடங்களில் உள்ள நகைகடைகளில் பர்தா அணிந்து கொண்டு 10 கிராம் தோடை திருடிச் சென்றது மயிலாடுதுறை மாவட்டம் கொரநாடு மேல ஒத்த சரகு தெரு கவிதா (வயது 50), மயிலாடுதுறை கொர்க்கை மாரியம்மன் கோவில் தெருஷீலா தேவி (37 ) என தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார் வேறு ஒரு நகைக்கடையில் கொள்ளை அடிக்க திட்டம் போட்டுக் கொண்டிருந்த 2 பெண்களையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து திரு டிய நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர் நகை திருட்டு வழக்கில் சிறப்பாக செயல்பட்ட பண்ருட்டி போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டு தெரிவித்தார்.

    Next Story
    ×