search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "litigation"

    • 14 வயது சிறுமி கர்ப்பமடைந்தார்.
    • போலீசார் குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பிரவீனை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி நாரணாபுரம் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அதே தெருவை சேர்ந்த பிரவீன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மே மாதம் பிரவீன் வீட்டிற்கு சிறுமி சென்றார். அப்போது சிறுமிக்கு தாலி கட்டி உள்ளார். பின்னர் பிரவீன் வீட்டிலும், சிறுமியின் வீட்டிலும் பலமுறை இருவரும் தனிமையில் சந்தித்தனர்.

    இந்த நிலையில் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிறுமியை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது அவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஆஸ்பத்திரி நிர்வாகம் தகவல் கொடுத்தது. போலீசார் சிவகாசி பஞ்சாயத்து யூனியன் அலுவலர் இதயகுமாரியிடம் தெரிவித்தனர். அவர் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று சிறுமியிடம் விசாரித்தபோது மேற்கண்ட விபரங்கள் தெரியவந்தது.

    இதையடுத்து சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இதயகுமாரி புகார் கொடுத்தார். போலீசார் குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பிரவீனை தேடி வருகின்றனர்.

    • கிராமமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் நடவடிக்கை எடுக்க வில்லை.
    • தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள்ளாறை அடுத்த செல்லூர் கிராமத்தில், கடந்த பல ஆண்டுகளாக சாலைகள் சேதம் அடைந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மேற்கண்ட சாலையை சரிசெய்ய வலியுறுத்தி, கிராமமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்நிலையில், 25-க்கும் மேற்பட்டோர் காரைக்கால்- கும்பகோணம் சாலையில் முன் அறிவிப்பு இன்றி, திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விபரம் அறிந்த போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் எடுத்து கூறுவதாக உறுதியளித்தும் சாலை மறியலை தொடர்ந்ததால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

    இது குறித்து, அப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மாதவன் கொடுத்த புகாரின் பேரில், போக்குவரத்து மற்றும் பாதசாரிகளுக்கு இடை யூறாக நின்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, செல்லூர் தமிழ்மணி (வயது20), சுபாஷ் (20), பாலசந்தர் (53), ஜான்மதியழகன் (28), யோகேஷ் (21), நிரஞ்சன் (19), மணிகண்டன் (20), வீ.மணிகண்டன் (20) சந்துரு (20), மனோகர் (20), ஐஸ்வரியா (40), சசி (41), ஜோதி (43), மர்லீஸ் (41), சுதா (41), வனிதா (41) உள்ளிட்ட 10 ஆண்கள், 6 பெண்கள் என மொத்தம் 16 பேர் பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • இரு தரப்பினருக்கும் இடையே பேனர்கள் வைப்பதில் மோதல் ஏற்பட்டது.
    • போலீசார் அடிதடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி: 

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்த நாள் வருகிற 4-ந் தேதி கொண்டா டப்படுகிறது. இந்நிலையில், காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி மெயின் ரோட்டில், ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் சந்திர பிரி யங்கா மற்றும் எம்.எல்.ஏ. திருமுருகன் ஆதர வாளர்கள் பல்வேறு இடங் களில் டிஜிட்டல் பேனர் வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே பேனர்கள் வைப்பதில் மோதல் ஏற்பட்டு, பேனர் களை கிழித்தெறிந்தனர். தொடர்ந்து, சாலை மறி யலில் ஈடுபட்டனர். இத னால், அன்று இரவு சுமார் 2 மணி நேரம், காரைக்கால்- சென்னை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, அமைச்சரின் தனி அலுவலர் லக்ஷ்மணபதி, கோட்டு ச்சேரி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், திருமுருகன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் ராஜ்கு மார், பாலாஜி, கணபதி, சிவராமன், வேல்பாண்டி, சுகுமாரன் ஆகிய 6 பேர் மீது போலீசார் அடிதடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல், திருமுருகன் எம்.எல்.ஏ. ஆதரவாளர் பிரதீப் கொடுத்த புகாரின் பேரில், ஜெயக்குமார், புருணோ தேவா, தவசு முத்து, சரவணன், அய்யப்பன், கார்த்தி, நிதின், ஈஸ்வர் ஆகியோர் 8 மீது அடிதடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோடுச் சேரி பகுதியில் போட்டி பேனர் வைப்பது தொடர்வ தால், மோதல் ஏற்படாமல் இருக்க, கோடுச்சேரி போலீ சார், 24 மணி நேரமும் பாது காப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர். போலீ சார் பேனர்களுக்கு காவல் நிற்கும் படங்கள், சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது.

    • வசந்தகுமார் என்பவர் சிலிண்டர் போடும் வேலை செய்துவந்தார்.
    • அங்கிருந்த வினோத்தை தாக்கிவிட்டு, மோட்டார் சைக்கிளுடன் சென்றுவிட்டனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு மேலகாசாகுடி பகுதியைச்சேர்ந்தவர் வினோத் (வயது43). இவரிடம், மேலகாசாகு டியைச்சேர்ந்த வசந்தகுமார் (30) என்பவர் சிலிண்டர் போடும் வேலை செய்துவந்தார். வசந்தகுமார், காரைக்கால் தனியார் ஆஸ்பத்திரி கேண்டீனுக்கு சிலிண்டர் போடுவதில், ரூ.2 லட்சம் வினோத்துக்கு கொடுக்க வேண்டியு ள்ளதாக கூறப்படு கிறது. பலமுறை கேட்டும் வசந்த குமார் பணம் தராததால், தனது கம்பெனியில் வேலை செய்யும் ராஜசேகர் என்பவர் மூலம், வசந்தகுமாரின் மோட்டர் சைக்கிளை வினோத் எடுத்து சென்றார்.

    இதனால், ஆத்திரம் அடைந்த வசந்தகுமார், அவரது அண்ணன் வசந்தராஜா (38), அண்ணி இலக்கியா (30) ஆகிய 3 பேரும், வினோத் வீட்டுக்கு சென்று, வினோத்தை ஆபாசமாக திட்டி, அங்கிருந்த வினோத்தை தாக்கிவிட்டு, மோட்டார் சைக்கிளுடன் சென்றுவிட்டனர். இதில் காயம் அடைந்த வினோத், நெடுங்காடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அரசு ஆஸ்பத்திரியில் வினோத் போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அதேபோல், இலக்கியா என்பவர் நெடுங்காடு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது வீட்டில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை, வினோத் என்பவர் எங்களை கேட்காமல் எடுத்து சென்றதால், நான், எனது கணவர் வசந்தராஜா, அவரது தம்பி வசந்தகுமார் ஆகியோர் வினோத் வீட்டுக்கு சென்று கேட்ட போது, வினோத் வசந்த ராஜாவை தாக்கினார். தடுக்கசென்ற வசந்தகுமாரையும் தாக்கினார். என்னை சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்துவிட்டார். மேலும், கொலைமிரட்டலும் விடுத்துள்ளதால், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். போலீசார் இலக்கிய புகார்மீது வழக்கு பதிவு செய்து வினோத்தை விசாரித்து வருகின்றனர்.

    • கடலூரில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • புதுநகர் போலீசார், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் உட்பட 1500 பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, அனைத்து துறைகளிலும் ஊழல் தலையீட்டை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து கடலூரில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் சொரத்தூர் ராஜேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் அருண்மொழி தேவன், பாண்டியன், அமைப்பு செயலாளர் முருகுமாறன் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினார்கள். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் உட்பட 1500 பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    • 3 சென்ட் நிலத்தை சகாதேவன் செல்விக்கு இன்னும் அளந்து தரவில்லை
    • புகார் அளிக்கப்பட்டு அதுவும் விசாரணையில் இருந்து வருகிறது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நாகக்குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்த இருசன் மனைவி செல்வி (வயது 41), இவர் அதே நாகக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சகாதேவனிடம் 10 சென்ட் நிலம் கிரையம் பெற்றதாக கூறப்படுகிறது. இதில் 3 சென்ட் நிலத்தை சகாதேவன் செல்விக்கு இன்னும் அளந்து தரவில்லை என்று கூறப்படுகிறது. இது சம்பந்தமாக செல்வி, சகாதேவன் குடும்பத்தினரிடம் தனக்கு சேர வேண்டிய நிலத்தை கொடுக்கவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    இதனால் எழுந்த பிரச்சனையில் சின்ன சேலம்போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அதுவும் விசாரணையில் இருந்து வருகிறது. இதற்கிடையில் செல்விக்கு சேர வேண்டிய இடத்தில் சகாதேவன் குடும்பத்தினர் கல், மண் கொட்டி உள்ளனர். அதைப் பார்த்து செல்வி ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டபோது கோபம் அடைந்த சகாதேவன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சகாதேவன் மகன் மணிகண்டன் இவரது மனைவி கலையரசி சகாதேவனின் மனைவி அங்கம்மாள் மற்றும் உறவினர்கள் ராஜேந்திரன், விண்ணம்மாள், மணிவேல், செல்வம், மணிமாறன், சகாதேவன், பார்த்தசாரதி, வெங்கடேசன், பாஞ்சாலை, சங்கர், உள்ளிட்ட 13 பேர் செல்வியிடம் தகராறு செய்து அசிங்கமாக திட்டி அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து செல்வி சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சின்ன சேலம் போலீசார் செல்வியை தாக்கிய 13 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போலீஸ்காரர்களை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்துள்ளனர்.
    • கூடாண்டி, சரவணன், தர்மலிங்கம், வேல்முருகன், ராஜ் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்துள்ள பரளச்சி போலீஸ் சரகத்திற்குபட்ட தொப்பலாக்கரை கிராமத்தில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பி னருக்கும் இடையே பிரச்சினை உள்ளது. இது தொடர்பாக கோட்டாட்சியர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அப்போது இருதரப்பினர் ஒப்புதலின்படி கோவிலை சுற்றி முள்வேலி அமைக்க கூடாது என முடிவு செய்யப்பட்டது.

    சம்பவத்தன்று தொப்ப லாக்கரை கிராமத்தில் உள்ள கோவிலில் பரளச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு தரப்பினர் கோவிலை சுற்றி முள்வேலி அமைக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஆத்திரமடைந்த அவர்கள் டிராக்டரரை வைத்து போலீஸ் காரர்களை மோத முயன்றதாகவும், மேலும் பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்த தாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து போலீஸ்கா ரர் பாண்டித்துரை கொடுத்த புகாரின் பேரில்அந்த கிரா மத்தை சேர்ந்த கூடாண்டி, சரவணன், தர்மலிங்கம், வேல்முருகன், ராஜ் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • திருவிழாவில் மோதலில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் எஸ்.ராமலிங்கபுரம், சிவகாமிபுரம் வடக்கு தெரு வடக்கத்தி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த சாரதாதேவி(29), அவரது கணவர் ஜெயபிரகாஷ்(35) உள்ளிட்ட பலர் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது சிவக்குமார் என்பவர் குடிபோதையில் பெண்கள் நிற்கும் பகுதிக்கு தள்ளாடிக்கொண்டு வந்தார். இதை கண்ட ஜெயபிரகாஷ் பெண்கள் நிற்கும் பகுதிக்கு ஏன் மதுபோதையில் வந்தார்? என கேட்டதற்கு, அவர் மற்றும் அவரது மனைவியை சிவக்குமார் தாக்கியுள்ளார். மேலும் சாரதா தேவியின் சேலையை பிடித்து இழுத்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த சாரதா உறவினர்கள் சிவக்குமாரை தாக்கினர். இதுகுறித்து இருதரப்பினரும் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெகட்ர் சார்லஸ் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • முன்விரோத தகராறு காரணமாக திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது .
    • 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த கிழக்கு ராமாபுரம் சேர்ந்தவர் அன்பழகன்.இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவருக்கும் முன்விரோத தகராறு இருந்து வருகின்றது. இந்த நிலையில் சம்பவத்தன்று 2 தரப்பினருக்கும் முன்விரோத தகராறு காரணமாக திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது . இந்த மோதலில் அன்பழகன், புனிதா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் புனிதா, சிவா, நாகராஜ் ஆகியோர் மீதும், புனிதா கொடுத்த புகாரின் பேரில் அன்பழகன், ஆகாஷ் என தனித்தனியாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சிவா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • சிலம்பு வீட்டின் மாடியில் கார்த்தி உட்பட 5 பேர் வாடகைக்கு தங்கி வருகின்றனர்.
    • மோதலில் சிலம்பு மற்றும் வேளாங்கண்ணி ஆகியோர் காயம் அடைந்தனர்.

    கடலூர்: 

    கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 28). இவரது வீட்டின் மாடியில் கார்த்தி உட்பட 5 பேர் வாடகைக்கு தங்கி வருகின்றனர். இந்நிலையில் சிலம்பு வீட்டின் மாடியில் தங்கி இருக்கும் 5 பேரை காலி செய்யுமாறு கூறி வந்தார். சம்பவத்தன்று கார்த்திக்கும், சிலம்பிற்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. 

    அப்போது இந்த தகராறு மோதலாக மாறியது. இந்த மோதலில் சிலம்பு மற்றும் வேளாங்கண்ணி ஆகியோர் காயம் அடைந்தனர். பின்னர் இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் சிலம்பு கொடுத்த புகாரின் பேரில் கார்த்தி உட்பட 5 பேர் மீதும், வேளாங்கண்ணி கொடுத்த புகாரின்பேரில் சத்தியமூர்த்தி உட்பட 4 பேர் என மொத்தம் 9 பேர் மீது போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் திருமணமண்டபத்தில் உணவு சாப்பிட்டு விட்டு கைகழுவி உள்ளார்.
    • பெண் வக்கீலை பின்புறம் தட்டி அநாகரீகமாக நடந்துள்ளார்.

    புதுச்சேரி: 

    புதுச்சேரி மாநிலம் அப்பாவு நகரைச்சேர்ந்த பெண் வக்கீல் ஒருவர் காரைக்கால் மேடு ஸ்ரீ ரேனுகாதேவி அம்மன் கோவிலில் நடைபெற்ற உறவினர் திருமணத்தில் கலந்துகொண்டுவிட்டு அன்று பகல், காரைக்கால் காமராஜர் சாைலைய ஒட்டிய தனியார் திருமணமண்டபத்தில் உணவு சாப்பிட்டு விட்டு கைகழுவிய போது, பின்னால் நின்றிருந்த, காரைக்கால் நகர் பகுதியைச்சேர்ந்த மோகன்(52) பெண் வக்கீலை பின்புறம் தட்டி அநாகரீகமாக நடந்துள்ளார். இது குறித்து, பெண் வக்கீல் காரைக்கால் நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் மோகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கடனாக வாங்கிய ரூ.20 ஆயிரம் பணத்தை கேட்டு வற்புறுத்தியதால் மனமுடைந்த சுந்தரமூர்த்தி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (40). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த கணபதி (36), கார்த்திகேயன் (35), விக்னேஷ் ஆகியோரிடம் கடனாக மொத்தம் ரூ.20 ஆயிரம் வரை பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் சுந்தரமூர்த்தியிடம் கணபதி, கார்த்திகேயன், விக்னேஷ் மூவரும் பணத்தை கேட்டு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த சுந்தரமூர்த்தி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டர். இதுதொடர்பாக அவரது மனைவி கமலி திருவெண்காடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கந்து வட்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கணபதி, கார்த்திகேயன் ஆகிய இருவரையும் கைது செய்ததுடன் தலைறைவான விக்னேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

    ×