என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

போலீஸ்காரர்களை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு

- போலீஸ்காரர்களை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்துள்ளனர்.
- கூடாண்டி, சரவணன், தர்மலிங்கம், வேல்முருகன், ராஜ் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்துள்ள பரளச்சி போலீஸ் சரகத்திற்குபட்ட தொப்பலாக்கரை கிராமத்தில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பி னருக்கும் இடையே பிரச்சினை உள்ளது. இது தொடர்பாக கோட்டாட்சியர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அப்போது இருதரப்பினர் ஒப்புதலின்படி கோவிலை சுற்றி முள்வேலி அமைக்க கூடாது என முடிவு செய்யப்பட்டது.
சம்பவத்தன்று தொப்ப லாக்கரை கிராமத்தில் உள்ள கோவிலில் பரளச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு தரப்பினர் கோவிலை சுற்றி முள்வேலி அமைக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஆத்திரமடைந்த அவர்கள் டிராக்டரரை வைத்து போலீஸ் காரர்களை மோத முயன்றதாகவும், மேலும் பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்த தாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸ்கா ரர் பாண்டித்துரை கொடுத்த புகாரின் பேரில்அந்த கிரா மத்தை சேர்ந்த கூடாண்டி, சரவணன், தர்மலிங்கம், வேல்முருகன், ராஜ் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.