என் மலர்
நீங்கள் தேடியது "Party Conflict"
- பிளஸ்-2 படித்து வரும் மாணவர்கள் இரு கோஷ்டிகளாக பள்ளியில் படித்து வருகின்றனர்.
- ஊர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து பள்ளி மைதானத்தில் இன்று காலையில் மோதி கொண்டனர்.
கடலூர்:
புதுப்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவர்கள் இரு கோஷ்டிகளாக பள்ளியில் படித்து வருகின்றனர். அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. அந்த சமயத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களை கண்டித்து அனுப்பி விடுவார். இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் மாணவர்களுக்குள் பள்ளி வளாகத்தில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவர்கள் அவரவர்களின் ஊர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து பள்ளி மைதானத்தில் இன்று காலையில் மோதி கொண்டனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர் உடனடியாக புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்றனர். மோதலில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து கண்டித்தனர். பள்ளி மாணவர்களுக்குள் கருத்து வேறுபாடு வரும் போது ஆசிரியர்களிடம் கூறி தீர்த்துக் கொள்ள வேண்டும். வெளியில் இருந்து ஆட்களை அழைத்து வந்து சண்டையிடக் கூடாது என்று அறிவுரை கூறினர். பின்னர் மாணவர்களை வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் புதுப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தென்பெண்ணையாற்றில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் இவர்கள் தனித்தனியே ராட்டினம் அமைத்தனர். விழா முடிந்ததும் ராட்டினத்தை கழட்டும் பணியில் 2 தரப்பினரும் ஈடுபட்டனர்.,
- வாக்குவாதம் வந்தது. இதில் இருவர் மற்ற இருவரை தடியால் அடித்த தாக்கினர்,
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே ஆண்டிமடம் பூக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன் (வயது 26). இவரது சகோதரர் சத்தியமூர்த்தி (24). இவர்கள் திருவிழாக்களில் ராட்டினம் அமைத்து தொழில் செய்து வருகின்றனர். இதேபோல விருத்தாசலம் புதாமூர் கிராமத்தைச் சேர்ந்த சதிஷ் (30), இவரது சகோதரர் தினேஷ் (23). இவர்களும் அதே தொழில் செய்து வருகின்றனர் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள பேரங்கியூர் தென்பெண்ணையாற்றில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் இவர்கள் தனித்தனியே ராட்டினம் அமைத்தனர். ஆற்றுத் திருவிழா முடிந்து ராட்டினத்தை கழட்டும் பணியில் 2 தரப்பினரும் ஈடுபட்டனர். தொழில் போட்டி காரணமாக இவர்களிடையே வாக்குவாதம் வந்தது. இதில் சதிஷ், தினேஷ் ஆகியோர் சரவணன், சத்தியமூர்த்தி ஆகியோரை தடியால் தாக்கினர். இதில் காயமடைந்த சத்தியமூர்த்தி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்
. திருவெண்ணைநல்லூர் அருகே டி.கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 63). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மோகன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஆற்றுத் திருவிழா முடிந்து சாமி விதியுலா நடந்தது. இதில் சுப்பிரமணியன் மகன் சந்தோஷ் சாமிக்கு தீபாராதனை காட்டினார். அப்போது அங்கு வந்த மோகன், மஞ்சு, மனோஜ், நாராயணன் ஆகியோர் சந்தோஷை ஆபாசமாக திட்டி கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த சந்தோஷ் திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் இவ்விரு சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- போலீசார் எச்சரிக்கை
- இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு
வேலூர்:
வேலூர் தெற்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஓல்டு டவுன் பகுதியில் கடந்த 23-ந் தேதி பிற்பகல் சுமார் 2 மணியளவில், ஊர் நாட்டாண்மை தேர்ந்தெடுத்தது தொடர்பாக ஏற்கனவே இருந்த பிரச்சினையில் இருதரப்பினருக்கு இடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி கற்கள் மற்றும் பாட்டில்கள் வீசி தாக்கிக்கொண்டனர்.
இதில் அவர்களுக்கு லேசான காயங்கள் மட்டும் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் இருதரப்பினர் மீதும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், வழக்கில் தொடர்புடைய நபர்கள் குறித்து சம்பவ இடத்தில் பதிவாகியுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அவர்கள் அனைவரையும் கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து தகவல்கள் யாருக்கேனும் கிடைத்தால் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கலாம். அப்பகுதியில் மேற்கொண்டு எவ்விதபிரச்சினை ஏற்படாமல் தவிர்க்க போலீசார் பணிய மர்த்தப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வீண் வதந்திகளை நம்பி மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்று கேட்டு க்கொள்ளப்படுகின்றது.
- கடலூர் அருகே 2 கோஷ்டியினர் மோதல்- 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
- தந்தை கார்த்தி , சிவமூர்த்தி என்பவரிடம் சென்று கேட்டபோது கார்த்தியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே நெல்லிக்குப்பம் தமிழ் குச்சிபாளையம் சேர்ந்தவர் கார்த்தி. இவரது மகன் புகழேந்தி மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் இருசக்கர வாகனத்தில் வான் பக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மாட்டுவண்டி சென்று கொண்டிருந்தபோது அதிலிருந்து நபர் மாடுகளை குச்சியால் அடித்துக் கொண்டிருந்த போது புகழேந்தி மீது பட்டது. இதனைப் புகழேந்தி கேட்டபோது மாட்டு வண்டியில் சென்றவர் திடீரென்று தாக்கினார். இதனை அறிந்த தந்தை கார்த்தி , சிவமூர்த்தி என்பவரிடம் சென்று கேட்டபோது கார்த்தியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
மேலும் இந்த தகராறில் சிவமூர்த்தியை, கார்த்தி தரப்பினர் தாக்கியதாக தெரிகிறது. இதில் கார்த்தி, புகழேந்தி மற்றும் சிவமூர்த்தி ஆகிய 3 பேர் காயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கார்த்தி கொடுத்த புகாரின் பேரில் பெரிய சோழவள்ளியை சேர்ந்த சிவமூர்த்தி, சத்தியமூர்த்தி, பக்கிரி, ரவிவர்மா ஆகிய 4 பேர் மீதும், சிவமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் டி.குச்சிப்பாளையம் சேர்ந்த ஜீவா, வினோத், புகழ், கார்த்தி என 8 பேர் மீது போலீசார் தனித்தனி புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.