கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல்

4 பேர் பலத்த காயம் போலீசார் விசாரணை
கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல்
Published on

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிந்து மாதவ பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவில் திருவிழா நேற்று நடந்தது.

இதனையொட்டி இன்று அதிகாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமி ஊர்வலம் நடந்தது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அந்த பகுதி மக்கள் மீட்டு, சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com