என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் உள்பட 1500 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்21 July 2023 3:10 PM IST
- கடலூரில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- புதுநகர் போலீசார், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் உட்பட 1500 பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, அனைத்து துறைகளிலும் ஊழல் தலையீட்டை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து கடலூரில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் சொரத்தூர் ராஜேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் அருண்மொழி தேவன், பாண்டியன், அமைப்பு செயலாளர் முருகுமாறன் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினார்கள். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் உட்பட 1500 பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
Next Story
×
X