search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிவர் ராப்டிங்"

    • சம்பவத்தன்று சுற்றுலா பயணிகள் சிலர் ரிவர் ராப்டிங் செய்யும் போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறி உள்ளது.
    • தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேசில் சுற்றுலா பயணிகள் சிலர் கங்கை ஆற்றின் நடுவே ரிவர் ராப்டிங் சென்றுள்ளனர். ரிவர் ராப்டிங் என்பது நீர் நிலைகளில் மிதக்கும் பலூன் போன்ற படகுகளில் சென்று விளையாடும் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி ஆகும்.

    இதில் ஆபத்து அதிகம் என்றாலும் சுற்றுலா பயணிகள் இந்த விளையாட்டை அதிகம் விரும்புவார்கள். சம்பவத்தன்று சுற்றுலா பயணிகள் சிலர் ரிவர் ராப்டிங் செய்யும் போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறி உள்ளது. படகுகளில் அமர்ந்திருந்த 2 அணிகளை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் ராப்டிங் துடுப்பால் தாக்கி உள்ளனர்.

    அப்போது 3 பேர் படகில் இருந்து ஆற்றில் குதித்துள்ளனர். அவர்கள் லைப் ஜாக்கெட் அணிந்திருந்ததால் உயிர் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஆற்றில் வைத்து சுற்றுலா பயணிகள் சண்டை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

    வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள், இது வெட்கக்கேடான சம்பவம், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க உரிய முறையில் விசாரித்து தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

    ×