search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kayathar"

    • நிகழ்ச்சியில் கல்வித்துறையில் முன்னேற்றம், இலவச சட்ட முகாம்கள் உள்ளிட்ட அம்சம்கள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
    • இதில் சிறப்பு அழைப்பாளராக கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

    கயத்தாறு:

    கயத்தாறில் அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் கோவில் தேரடி வீதியில் இந்து முக்குலத்தோர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இளைஞர்கள் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    மாநிலத் தலைவரும், நிறுவன தலைவருமான மணக்கரை பேச்சிமுத்து தலைமை தாங்கினார்.

    மாநில இளைஞரணி செயலாளர் கல்லூர் கார்த்திக் பாண்டியன், வக்கீல் பிரிவு செயலாளர் முத்து, மாநில கொள்கை பரப்பு செயலாளர் கென்னடி, தென் மண்டல செயலாளர் முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பூல்பாண்டியன் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் இளைஞ ர்களுக்கு எவ்வாறு படிக்க வேண்டும்?. கல்வித்துறையில் முன்னேற்றம், இலவச சட்ட முகாம்கள் உள்ளிட்ட அம்சம்கள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் நெல்லை மாவட்ட செயலாளர் வக்கீல் மகேஷ், கவுரவ சட்ட ஆலோசகரும், மதுரை உயர்நீதிமன்ற வக்கீலுமான ஆனந்த முருகன், மாநில மகளிர் அணி செயலாளர் ரேணுகா தேவி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஈஸ்வரி, நெல்லை மாவட்ட இளைஞரணி செயலாளர் விக்கி, மாவட்ட துணைச் செயலாளர் காசிபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் நெல்லை சட்ட ஆலோசகர் முருகன், தூத்துக்குடி இளைஞர் அணி செயலாளர் கருப்பசாமி, மாவட்ட செயலாளர்கள் முத்துராமலிங்கம் (மதுரை), கோபிநாத் (சிவகங்கை), நெல்லை வக்கீல் அணி செயலாளர் அருணாச்சலம், இளைஞர் அணி துணைச் செயலாளர் ஐகோர்ட் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இந்து முக்குலத்தோர் பாதுகாப்பு இயக்கத்தினர் செய்திருந்தனர்.

    • நேற்று நடந்த மதிய பூஜையில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
    • இரவு 7 மணிக்கு பூலுடையார் சாஸ்தா சப்பர வீதிஉலா நடைபெற்றது.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி கிராமத்தில் பூலுடையார் சாஸ்தா, கொம்பு மாடசாமி கோவில் கொடைவிழா நடைபெற்றது. இதனையொட்டி நேற்று நடந்த மதிய பூஜையில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    அவருடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வக்குமார், மாவட்ட மாணவரணி நவநீதகிருஷ்ணன், கிளை செயலாளர் முருகன், ஆசூர் காளிப்பாண்டியன், இலக்கிய அணி பாலகணேசன், முன்னாள் வார்டு கவுன்சிலர் இருளப்ப பாண்டியன், கடம்பூர் துரை உட்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளரும், கயத்தாறு ஒன்றிய சேர்மனுமான எஸ்.பி.எஸ்.பி. மாணிக்கராஜா சாமி தரிசனம் செய்தார். அவருடன் கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் கணபதி பாண்டியன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் உடையார் பாண்டியன், சவலாப்பேரி பஞ்சாயத்து தலைவர் பூல்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருவிழாவில் கிடாவெட்டு, பால்குடம், முடிகாணிக்கை, அன்னதான நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு பூலுடையார் சாஸ்தா சப்பர வீதிஉலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • நீதிமன்ற விசாரணையில் இருந்த சுமார் 75 வழக்குகளை முடிக்க உதவியாக இருந்த கயத்தாறு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி உள்ளிட்ட பலரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.
    • நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய ஒரு இன்ஸ்பெக்டர் உட்பட 37 போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டுச் சான்றிதழ், வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

    அதன்படி கயத்தாறு போலீஸ் நிலையத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 52 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல், 23 வழக்குகள் விசாரணையை முடித்தும், 59 வழக்குகளை நீதிமன்ற கோப்புக்கு எடுத்தும் மற்றும் நீதிமன்ற விசாரணையில் இருந்த சுமார் 75 வழக்குகளை முடிக்க உதவியாக இருந்த கயத்தாறு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி, தலைமை காவலர்கள் கந்தசாமி, சண்முகநாதன், முதல் நிலை காவலர்கள் அழகுமுத்து பாண்டியன், முத்துராஜ், செல்லப்பாண்டி, காவலர்கள் காளிராஜ் மற்றும் முருகேஷ்வரி ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு கார்த்திகேயன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு கோடிலிங்கம், சைபர் குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு உன்னிகிருஷ்ணன் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    • கிராம குடிநீர் மற்றும் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கான குடிநீர் மேலாண்மை பயிற்சி முகாம் கயத்தாறு யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது
    • கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தண்ணீர் தரம் பாதுகாப்பு, வேதியியல் பாக்டீரியாக்கள் சம்மந்தப்பட்ட ரசாயனங்கள் குறித்து பயிற்சி மற்றும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    கயத்தாறு:

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மற்றும் தகவல் தொடர்பு மற்றும் திறன்மேம்பாட்டு பிரிவு மூலம் ஜல்ஜீவன் மிஷின் சார்பில் கிராம குடிநீர் மற்றும் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கான குடிநீர் மேலாண்மை பயிற்சி முகாம் கயத்தாறு யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமை வட்டார வளர்ச்சி ஆனையாளர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் ஐகோர்ட்ராஜா, தூத்துக்குடி மாவட்ட கிராம குடிநீர் திட்ட நிர்வாக பொறியாளர் ராஜா, உதவி நிர்வாக பொறியாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மேலாளர்கள் சுப்பையா, சிங்கராஜ், இளநிலை பகுப்பாய்வின் வினோத்குமார், 45ப ஞ்சாயத்து செயலாளர்கள். மகளிர் குழு பற்றாளர்கள் என 200 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தண்ணீர் தரம் பாதுகாப்பு, தண்ணீர் சேகரிப்பு, சுத்தமான குடிநீர் மற்றும் வேதியியல் பாக்டீரியாக்கள் சம்மந்தப்பட்ட ரசாயனங்கள் குறித்து பயிற்சி மற்றும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர்கள் வெங்கட்ராமன், வசந்தி, விமலா, பூர்ணிமா செய்திருந்தனர். விஜய்முத்து, முகுந்தன், முத்தமிழ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    • வேளாண்மை அறிவியல் மையத்தின் தலைவர் அழகுகண்ணன் உட்பட பலர் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
    • பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் அனைவருக்கும் அங்கக பண்ணைகள் குறித்து தொழில்நுட்ப கையேடு வழங்கப்பட்டது.

    கயத்தாறு:

    கயத்தாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுப்புலட்சுமி அறிவுறுத்தலின் பேரில் ஆத்மா மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் கயத்தாறு வட்டார விவசாயிகள் 40 பேருக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயிற்சியின் போது வேளாண்மை அறிவியல் மையத்தின் தலைவர் அழகுகண்ணன், ராஜகலா, கவுதீஸ் புனிதா மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் ராஜ ஜோஸ்வின், திருமலைவாசன், பிரபு, அசோக்குமார், அறிவுச்செல்வி ஆகியோர் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் , இயற்கை இடுபொருள் தயாரிப்பது , தோட்டக்கலை பயிர்களில் இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்கள் , இயற்கை காய்கறி பயிர்கள் சாகுபடி செய்வது, தொழில் நுட்ப மூலமாக எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

    மேலும் இயற்கை பூச்சி நோய்களை எவ்வாறு கையாள்வது, இயற்கை மேலாண்மை மண் பரிசோதனை மற்றும் உயிர் உரங்கள் பயன்பாடுத்துதல் , பண்ணை கால்நடை பராமரிப்பு , பஞ்சகவி தயாரித்தல், பயோதிகம்போஸ்டர் தயாரித்தல், தென்னங்கன்றுகள் தேர்வு செய்தல், அதனை எவ்வாறு நடவு செய்தல் நோய்களில் இருந்து எப்படி காப்பாற்றுவது, பராமரித்தல் குறித்து செயல் விளக்க பயிற்சியும் அளிக்கப்பட்டது.

    பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் அனைவருக்கும் அங்கக பண்ணைகள் குறித்து தொழில்நுட்ப கையேடு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் மணிகண்டன், துணை வேளாண்மை அலுவலர் முத்துக்குமார், காளிராஜ் ,உதவி வேளாண்மை அலுவலர்கள் முத்துராஜ், முத்துமாரி, அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாலமோன் நவராஜ் பொற்செல்வன், ரத்தினம்பால், ஜெயலட்சுமி ஆகியோர் செய்து இருந்தனர்.

    • காற்றின் வேகத்தால் தீ மளமளவென அருகில் உள்ள தோட்டங்களுக்கும் பரவியது.
    • தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே அரசன்குளம் கிராமத்தில் நாற்கரச்சாலை அருகில் உள்ள தோட்டத்தில் திடீரென தீ பிடித்தது. தற்போது பருவக்காற்று அதிகமாக வீசுவதால் தீயின் வேகம் அதிகரித்து மளமளவென அருகில் உள்ள தோட்டங்களில் 5 ஏக்கருக்கு மேல் பரவியதால் அப்பகுதி தனியார் நிறுவன காவலாளி சங்கர்ராஜ் கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் கங்கைகொண்டான் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அருகில் உள்ள தோட்டங்களில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

    • சுப்பிரமணியன் நேற்று அவரது சொந்த ஊரான கண்ணாடிகுளம் கிராமத்தில் உறவினரின் துக்க வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் கயத்தாருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • அய்யனார் ஊத்து கிராமத்தின் அருகே வரும் போது எதிரே வந்த வேனும், மோட்டார் சைக்கிளும் மோதியது.

    கயத்தாறு:

    தென்காசி மாவட்டம் கண்ணாடிகுளம் கிராமம் வடக்கு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55), இளநீர் வியாபாரி. இவர் தற்போது கயத்தாறில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி பாக்கியம். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் சுப்பிரமணியன் நேற்று அவரது சொந்த ஊரான கண்ணாடி குளம் கிராமத்தில் உறவினரின் துக்க வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் கயத்தாருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அய்யனார் ஊத்து கிராமத்தின் அருகே வரும் போது எதிரே வந்த வேனும், மோட்டார் சைக்கிளும் மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு கயத்தாறு போலீசார் சென்று சுப்பிரமணி யின் உமலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிதனர். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிகழ்ச்சியை கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார்.
    • இந்த வானியல் தொலைநோக்குப் பார்வையை பல்நோக்கு கருவிகள் மூலம் மாணவ-மாணவிகள் கண்டுகளித்தனர்.

    கயத்தாறு:

    கயத்தாறில் மதர் தெரசா மெட்ரிகுலேஷன் ஆங்கிலப்பள்ளியில் கற்றல் தினத்தை முன்னிட்டு வானியல் மன்றம் புதியதாக தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் சார்லஸ் அடிகளார் தலைமை தாங்கினார். இதனை கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகி கிறிஸ்டோபிரகாசம், பள்ளி முதல்வர் சகாயரெஜினாபவுலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட டாஸ் ரீஜினல் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் முத்துசாமி அதிதூர லென்ஸ் கேமராக்கள் மூலம் பல கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அனைத்து மரம், செடி, கொடி மற்றும் வானில் தோன்றும் மாற்றங்கள் குறித்து இந்த அதிநவீன காமிராக்கள் மூலம் பார்ப்பது குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கிக் கூறி செய்முறை பயிற்சியாக செய்து காட்டினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த வானியல் தொலைநோக்குப் பார்வையை பல்நோக்கு கருவிகள் மூலம் மாணவ-மாணவிகள் கண்டுகளித்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி நிர்வாகம் செய்திருந்தனர்.

    • சிதம்பரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் கிளாஸ் கணினி பலகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று விரைவில் பள்ளிக்கு ஒரு பொது அரங்கம் அமைத்து தருவதாக மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் உறுதி கூறினார்.

    கயத்தாறு:

    கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளுக்கு மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து 18 தொடக்க பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் கணினி பலகை வழங்கப்பட்டு வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக கயத்தாறு அருகே உள்ள சிதம்பரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் கிளாஸ் கணினி பலகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து வழங்கப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட் கிளாஸ் தொடுதிரை கணினி பலகையை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு எழுது பொருட்களையும் வழங்கினார். மேலும் ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று விரைவில் பள்ளிக்கு ஒரு பொது அரங்கம் அமைத்து தருவதாக உறுதி கூறினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் குருராஜ், தலைமை ஆசிரியர் ராஜ குருவம்மாள், உதவி ஆசிரியை சுதா, மேற்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் மகாராஜன், கிளைச் செயலாளர் மாரியப்பன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், ராஜாபுதுக்குடி பால்ராஜ், ஒன்றிய மகளிர் அணி துணை அமைப்பாளர் காளியம்மாள், ஒன்றிய மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் மஞ்சுளா, ஆசிரியர்கள் கற்பகம், சுபத்ரா, ஜான் ஆபிரகாம், சத்துணவு அமைப்பாளர் சண்முகையா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை கிராமத்தின் வழியாக 100-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் தினமும் சென்று வருவதால் புழுதி மண்டலமாக மாறி உள்ளது.
    • தற்போது தென்மேற்கு பருவக்காற்று வீசுவதால் காற்றின் வேகத்தால் இந்த புழுதிகள் இங்கு பயிரிடப்பட்டுள்ள பருத்தி உள்பட பயிர்கள் மீது மணல்கள் பட்டதால் பூ கருகி நாசமாகும் நிலை உள்ளது.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தின் வழியாக காற்றாலை கனரக வாகனங்கள் சென்று வருதவால் பாதிக்கப்படுவதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் ெதாடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் புதுக்கோட்டை பகுதி வழியாக சென்ற கனரக வாகனங்களை அப்பகுதியினர் சிறைபிடித்து இன்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறும்போது, எங்களது ஊரின் வழியாகவும், விவசாயம், வாகன தடங்கள் வழியாகவும் 100-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் தினமும் சென்று வருவதால் புழுதி மண்டலமாக மாறி உள்ளது. தற்போது தென்மேற்கு பருவக்காற்று வீசுவதால் காற்றின் வேகத்தாலும் இந்த புழுதிகள் இங்கு பயிரிடப்பட்டுள்ள பருத்தி, மக்காச்சோளம், வெண்டை, கத்தரி உள்பட பயிர்கள் மீது மணல்கள் பட்டதால் பூ கருகி நாசமாகும் நிலை உள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

    • விழாவில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு தி.மு.க. வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
    • தொடர்ந்து தி.மு.க. சார்பில் பேரூராட்சி மன்றத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் உட்பட 100 பேருக்கு அரிசி ,பருப்பு வகைகள் வழங்கினார்.

    கயத்தாறு:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழா கயத்தாறு பேரூராட்சி அலுவலகம் முன்பு கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன் தலை மையில் நடைபெற்றது. விழாவில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி னர்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சுப்பு லட்சுமி ராஜதுரை, கட்சி பிரமுகர் லயன்ஸ் பேட்டை மாரியப்பன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு பேரூராட்சி துணைத் தலைவர் சபுராசலீமா, நயினார்பாண்டியன், மாரியம்மாள், ஆதிலட்சுமி, கோகிலா, தேவி, முன்னாள் நகர செயலாளர் இஸ்மாயில் மற்றும் கட்சி நிர்வாகிகள், முன்னாள் கவுன்சிலர்கள் சந்தானம், பரமசிவம், சேக்தாவூது, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அனை வருக்கும் லட்டு வழங்கினர். பின்னர் சர்க்கரை பொங்கல் வழங்கினார்.

    இதனை தொடர்ந்து தி.மு.க. சார்பில் பேரூராட்சி மன்றத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், சுகாதார சிப்பந்திகள், பிளம்பர்கள், சுகாதார மருந்தாளுனர்கள் 100 பேருக்கு அரிசி ,பருப்பு வகைகள் வழங்கினார்.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன் செய்திருந்தார்.

    • போட்டியில் எட்டையாபுரம்,கோவில்பட்டி உள்ளிட்ட 16 கிராமங்களில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.
    • விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் வழங்கினார்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள குருமலை கிராமத்தில் பைரைட்ஸ் கிரிக்கெட் டீம் மற்றும் கிருஷ்ணா வித்தியாலயம் இனைந்து நடத்தும் கிரிக்கெட் போட்டி கயத்தாறு அருகே உள்ள குருமலை குராமத்தில் நடைபெற்றது. போட்டியினை தூத்துக்குடி மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் தொடங்கி வைத்தார். போட்டியில் எட்டையாபுரம், தோனுகால், சங்கரலிங்கபுரம், கோவில்பட்டி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட 16 கிராமங்களில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

    முதல் பரிசை மேட்டுப்பட்டி அணியும், 2-வது பரிசை குருமலை அணியும், 3-வது பரிசை கோவில்பட்டி சிக்சாக் அணி பெற்றது. பின்னர் அங்கு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் வழங்கினார். நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் பால்ராஜ், குருமலை கிளைச் செயலாளர் கருப்பசாமி, ஊர் நாட்டாண்மை சேகர், பஞ்சாயத்து தலைவர் விஜயகுமார் மற்றும் அருள் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×