

கயத்தாறு:
கயத்தாறு அருகே அரசன்குளம் கிராமத்தில் நாற்கரச்சாலை அருகில் உள்ள தோட்டத்தில் திடீரென தீ பிடித்தது. தற்போது பருவக்காற்று அதிகமாக வீசுவதால் தீயின் வேகம் அதிகரித்து மளமளவென அருகில் உள்ள தோட்டங்களில் 5 ஏக்கருக்கு மேல் பரவியதால் அப்பகுதி தனியார் நிறுவன காவலாளி சங்கர்ராஜ் கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் கங்கைகொண்டான் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அருகில் உள்ள தோட்டங்களில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.