என் மலர்
நீங்கள் தேடியது "cricket match"
திருப்பூர்:
இந்திய வீரர்கள் பங்கேற்கும், கிரிக்கெட் தொடர், நேபாளம் நாட்டில் அடுத்த மாதம் 10, 11, 12-ந் தேதிகளில் நடக்கிறது. தொடரில் விளையாட தமிழக மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் இந்திய அணியில் தேர்வாகியுள்ளனர்.
இதில் திருப்பூர், மங்கலம் அக்ஹாரப்புத்துாரை சேர்ந்த ஷாகுல் ஹமீது, ஈரோடு-மணிவண்ணன், அரியலுார் - சந்தோஷ் குமார் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
இதுகுறித்து ஷாகுல் ஹமீது கூறியதாவது:-
மங்கலம் அரசு பள்ளியில், 10ம் வகுப்பு வரை படித்தேன். வலது கை பாதித்திருந்தாலும், தன்னம்பிக்கையுடன் விளையாடி வருகிறேன். தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியில் சேர்ந்து, கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன்.
கிராமத்தில் இருந்து பயிற்சி பெற்ற நான் முதன்முறையாக வெளிநாட்டுக்கு சென்று விளையாட இருக்கிறேன். நேபாள கிரிக்கெட் தொடரில், முழு திறமையையும் வெளிப்படுத்தி இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், சாதனை படைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
- தூத்துக்குடி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி ஆறுமுகநேரி தருவை மைதானத்தில் நடைபெற்றது.
- 44 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 32 அணிகள் பங்கேற்றன.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி ஆறுமுகநேரி தருவை மைதானத்தில் நடைபெற்றது. ட்ரூ ஸ்பார்டன்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் நடந்த இந்த சுற்று போட்டியை பா.ஜ.க பிரமுகரான கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து 44 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 32 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் காயல்பட்டினம் கொம்புத்துறை சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்று பரிசு கோப்பையை தட்டி சென்றது. அத்துடன் ரூ.20 ஆயிரம் பரிசு தொகையையும் வென்றது. ஆறுமுகநேரி யங் சூப்பர் கிங்ஸ் அணி 2-வது பரிசாக ரூ.15 ஆயிரம் மற்றும் கோப்பையை வென்றது.
தூத்துக்குடி நைட் ரைடர்ஸ் அணி 3-வது பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பையையும், ஆறுமுகநேரி தருவை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது பரிசாக ரூ.5 ஆயிரமும் பெற்றன. கொம்புத்துறை அணி வீரர் வினோத் தொடர் நாயகன் விருது மற்றும் சிறப்பு பரிசை பெற்றார். வெற்றி பெற்ற அணிகளுக்கு கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் பரிசுகளை வழங்கினார். போட்டியில் பங்கேற்ற வீரர்கள் அனைவருக்கும் டி-சர்ட்டுகளையும் அவர் வழங்கினார்.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் கானம் பேரூராட்சி முன்னாள் தலைவர் செந்தமிழ் சேகர், மேல புதுக்குடி தொழிலதிபர் ஜெயராஜ், குமரேசன், குமரன், ஆறுமுகநேரி அரிமா சங்க நிர்வாகி சண்முக வெங்கடேசன், சமத்துவ மக்கள் கட்சி திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் சீமான், கீரனூர் முத்துகிருஷ்ணன், காயல்பட்டினம் அ.ம.மு.க நகரச் செயலாளர் யாசின், முகமது பிலால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை ட்ரூ ஸ்பார்ட்டன்ஸ் கிரிக்கெட் கிளப் ஒருங்கிணைப் பாளர்கள் அருண், தேரடி முத்து மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- சாயர்புரம் அருகே உள்ள சேர்வைகாரன்மடம் பஞ்சாயத்து காமராஜ் நகரில் இளைஞர் மன்றத்தினர் நடத்தும் 4-ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
- காமராஜ் நகர் இளைஞர் மன்றத்தினர் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள சேர்வைகாரன்மடம் பஞ்சாயத்து காமராஜ் நகரில் இளைஞர் மன்றத்தினர் நடத்தும் 4-ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற அணியினருக்கு சேர்வைக் காரன்மடம் பஞ்சாயத்து தலைவர் ஜெபக்கனி ஞானசேகர் தலைமை தாங்கி கோப்பைகளையும் பரிசுகளையும் வழங்கினார்.
தூத்துக்குடி மாதாநகர் அணிக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், காமராஜ் நகர் அணிக்கு 2-வது பரிசு ரூ. 8 ஆயிரமும், பண்டாரவிளை அணிக்கு 3-வது பரிசு ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்ப ட்டது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஞானசேகர் முன்னி லை வகித்தார். காமராஜ் நகர் இளைஞர் மன்றத்தினர் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
- போட்டியில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம், கோவை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
- போட்டியில் அதிக ரன்கள், விக்கெட்டுகள் எடுத்தவர்களுக்கும் பரிசு தொகையும், கோப்பையும் வழங்கப்பட்டன
பெரம்பலூர் நரிக்குறவர் சமுதாய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட் போட்டி பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை ஊராட்சிக்குட்பட்ட மலையப்ப நகரில் நடந்தது.
இந்த போட்டியில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம், கோவை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
இதையடுத்து, போட்டியில் முதலிடத்தை பிடித்த கள்ளக்குறிச்சி மாவட்டம், மாடம்பூண்டி அணிக்கு ரூ.10 ஆயிரமும், 2-ம் இடத்தை பிடித்த பெரம்பலூர் மாவட்டம், எறையூர் அணிக்கு ரூ.5 ஆயிரமும், 3-ம் இடத்தை பிடித்த கோவை மாவட்டம், காரமடை அணிக்கு ரூ.2 ஆயிரத்து 500-ம் மற்றும் பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டன.
மேலும் போட்டியில் அதிக ரன்கள், விக்கெட்டுகள் எடுத்தவர்களுக்கும் பரிசு தொகையும், கோப்பையும் வழங்கப்பட்டன.







