search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரியில் மாவட்ட கிரிக்கெட் போட்டி: காயல்பட்டினம் கொம்புத்துறை அணி முதலிடம் - கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணன் பரிசுகள் வழங்கினார்
    X

    போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பா.ஜ.க பிரமுகர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் பரிசு கோப்பையை வழங்கிய போது எடுத்த படம்.


    ஆறுமுகநேரியில் மாவட்ட கிரிக்கெட் போட்டி: காயல்பட்டினம் கொம்புத்துறை அணி முதலிடம் - கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணன் பரிசுகள் வழங்கினார்

    • தூத்துக்குடி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி ஆறுமுகநேரி தருவை மைதானத்தில் நடைபெற்றது.
    • 44 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 32 அணிகள் பங்கேற்றன.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி ஆறுமுகநேரி தருவை மைதானத்தில் நடைபெற்றது. ட்ரூ ஸ்பார்டன்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் நடந்த இந்த சுற்று போட்டியை பா.ஜ.க பிரமுகரான கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து 44 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 32 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் காயல்பட்டினம் கொம்புத்துறை சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்று பரிசு கோப்பையை தட்டி சென்றது. அத்துடன் ரூ.20 ஆயிரம் பரிசு தொகையையும் வென்றது. ஆறுமுகநேரி யங் சூப்பர் கிங்ஸ் அணி 2-வது பரிசாக ரூ.15 ஆயிரம் மற்றும் கோப்பையை வென்றது.

    தூத்துக்குடி நைட் ரைடர்ஸ் அணி 3-வது பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பையையும், ஆறுமுகநேரி தருவை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது பரிசாக ரூ.5 ஆயிரமும் பெற்றன. கொம்புத்துறை அணி வீரர் வினோத் தொடர் நாயகன் விருது மற்றும் சிறப்பு பரிசை பெற்றார். வெற்றி பெற்ற அணிகளுக்கு கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் பரிசுகளை வழங்கினார். போட்டியில் பங்கேற்ற வீரர்கள் அனைவருக்கும் டி-சர்ட்டுகளையும் அவர் வழங்கினார்.

    பரிசளிப்பு நிகழ்ச்சியில் கானம் பேரூராட்சி முன்னாள் தலைவர் செந்தமிழ் சேகர், மேல புதுக்குடி தொழிலதிபர் ஜெயராஜ், குமரேசன், குமரன், ஆறுமுகநேரி அரிமா சங்க நிர்வாகி சண்முக வெங்கடேசன், சமத்துவ மக்கள் கட்சி திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் சீமான், கீரனூர் முத்துகிருஷ்ணன், காயல்பட்டினம் அ.ம.மு.க நகரச் செயலாளர் யாசின், முகமது பிலால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை ட்ரூ ஸ்பார்ட்டன்ஸ் கிரிக்கெட் கிளப் ஒருங்கிணைப் பாளர்கள் அருண், தேரடி முத்து மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×