search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கயத்தாறு அருகே அரசு தொடக்க பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை
    X

    ஸ்மார்ட் கிளாஸ் கணினி பலகையை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த காட்சி.

    கயத்தாறு அருகே அரசு தொடக்க பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை

    • சிதம்பரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் கிளாஸ் கணினி பலகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று விரைவில் பள்ளிக்கு ஒரு பொது அரங்கம் அமைத்து தருவதாக மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் உறுதி கூறினார்.

    கயத்தாறு:

    கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளுக்கு மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து 18 தொடக்க பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் கணினி பலகை வழங்கப்பட்டு வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக கயத்தாறு அருகே உள்ள சிதம்பரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் கிளாஸ் கணினி பலகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து வழங்கப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட் கிளாஸ் தொடுதிரை கணினி பலகையை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு எழுது பொருட்களையும் வழங்கினார். மேலும் ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று விரைவில் பள்ளிக்கு ஒரு பொது அரங்கம் அமைத்து தருவதாக உறுதி கூறினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் குருராஜ், தலைமை ஆசிரியர் ராஜ குருவம்மாள், உதவி ஆசிரியை சுதா, மேற்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் மகாராஜன், கிளைச் செயலாளர் மாரியப்பன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், ராஜாபுதுக்குடி பால்ராஜ், ஒன்றிய மகளிர் அணி துணை அமைப்பாளர் காளியம்மாள், ஒன்றிய மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் மஞ்சுளா, ஆசிரியர்கள் கற்பகம், சுபத்ரா, ஜான் ஆபிரகாம், சத்துணவு அமைப்பாளர் சண்முகையா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×