search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karti Chidambaram"

    • இருவரும் திரவ நிலையில் எதையோ வீசியதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
    • பாராளுமன்ற சபை வளாகத்துக்குள் பாதுகாவலர்கள் யாரும் இல்லை என ஆதிரஞ்சன் சவுத்ரி எம்.பி. கூறினார்.

    பாராளுமன்றத்தில் 2 பேர் நுழைந்த சம்பவம் குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறுகையில், "பாராளுமன்றத்தில் உள்ள பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 பேர் குதித்தனர். அவர்கள் இருவரும் திரவ நிலையில் எதையோ வீசினார்கள். அது விழுந்து மஞ்சள் நிற புகையாக வெளிப்பட்டது. அப்போது கண்களில் எரிச்சல் ஏற்பட்டது" என்றார்.

    ஆதிரஞ்சன் சவுத்ரி எம்.பி. கூறுகையில், "பாராளுமன்ற சபை வளாகத்துக்குள் பாதுகாவலர்கள் யாரும் இல்லை. இதனால் எம்.பி.க்களே மர்ம மனிதர்கள் இருவரையும் பிடித்தனர். பின்னர் அவர்கள் சபை காவலர்களை வரவழைத்து அவர்களிடம் 2 பேரையும் ஒப்படைத்தனர்" என்றார்.

    • தன் மீதான குற்றச்சாட்டுகளை கார்த்தி சிதம்பரம் மறுத்தார்.
    • என் மீது 3 வகையான வழக்குகள் உள்ளன. அவை மிகவும் போலியானது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய மந்திரியாக இருந்தபோது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்ட விரோதமாக 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாகவும், இதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து இருந்தது.

    பஞ்சாப்பில் டி.எஸ்.பி.எல். எனும் நிறுவனத்தின் சார்பில் மின் நிலைய பணிகளில் ஈடுபடுவதற்காக 263 சீனர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்றுதர அந்த நிறுவனம் கார்த்தி சிதம்பரத்திற்கும், அவரது ஆடிட்டர் பாஸ்கர் ராமன் என்பவரும் லஞ்சம் கொடுத்ததாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனையும் நடத்தப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டுகளை கார்த்தி சிதம்பரம் மறுத்தார்.

    இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

    இந்த நிலையில் பண மோசடி வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும் என்று அவருக்கு அனுப்பியுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் அவர் இன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜராகவில்லை. தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடரில் தான் பங்கேற்று இருப்பதாக அவர் அமலாக்கத்துறையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் கார்த்தி சிதம்பரம் கூறும்போது, "என்மீது 3 வகையான வழக்குகள் உள்ளன. அவை மிகவும் போலியானது. எனது வக்கீல்கள் குழுவால் இது கையாளப்படும்" என்றார்.

    • 5 மாநில தேர்தல் நடந்ததால் சற்று தொய்வாக இருந்த நிலையில் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
    • தலைவர் பதவிக்காக முயற்சிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் டெல்லியில் காய் நகர்த்தி வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் தலைவர் பதவியை பிடிக்க பலர் முயற்சி செய்தும் மேலிடம் இன்னும் எந்த சிக்னலும் காட்டவில்லை.

    ஆனால் அனைவரையும் அரவணைத்து இணக்கமாக செல்லும் உணர்வு படைத்தவரை தலைவராக நியமிக்க மேலிடம் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

    முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கார்த்தி சிதம்பரம், விஷ்ணுபிரசாத், ஜோதி மணி ஆகிய நால்வரில் ஒரு வரை நியமிக்கலாம் என்றார். 5 மாநில தேர்தல் நடந்ததால் சற்று தொய்வாக இருந்த நிலையில் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.


    தலைவர் பதவிக்காக முயற்சிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் டெல்லியில் காய் நகர்த்தி வருகிறார்கள். தலைவர் பதவி மீது தனக்கு ஆசையாக இருப்பதாக வெளிப்படையாகவே கார்த்தி ப.சிதம்பரம் கூறினார்.

    நேற்று முன்தினம் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்தித்து பேசினார். அப்போது தனக்கு தலைவர் பதவி தந்தால் சிறப்பாக செய்வேன் என்று தெரிவித்துள்ளார். கர்நாட காவில் டி.கே.சிவகுமாரும், தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டியும் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கட்சி நடத்தியதால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. அதேபோல் தமிழ்நாட்டின் தலைமை பதவி எனக்கு வழங்கினால் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காங்கிரஸ் ஆட்சிக்கு வர உழைக்க தயாராக இருப்பதாக கார்கேவிடம் உறுதியளித்துள்ளார். அதை கேட்டுக் கொண்ட கார்கே பார்க்கலாம் என்று கூறியதாக கூறப்படுகிறது.

    • ராஜிவ் காந்தியுடன் 17 பேர் கொல்லப்பட்டதை மூடி மறைக்க கூடாது என்றார் கார்த்தி சிதம்பரம்
    • ராஜிவ் காந்தியின் முடிவு அவரே தேடி கொண்ட ஒன்று என்றார் வன்னி அரசு

    தி.மு.க.வின் தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினரான தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு நேர்காணலில் "சரித்திர புகழ் வாய்ந்த தலைவர் ஒருவருடன் உணவருந்த வேண்டும் என்றால், விடுதலை புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனுடன் உணவு அருந்த விரும்புகிறேன். அப்போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்காக அவரிடம் மன்னிப்பும் கேட்பேன்" என கருத்து தெரிவித்தார்.

    இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதள கணக்கில் பதிவிட்டார்.

    அதில் அவர் கூறியதாவது:

    பிரபாகரனை பாராட்டி பேசுவது இந்திய காங்கிரஸ் கட்சியினருக்கு இசைவான கருத்து அல்ல. ராஜிவ் காந்தியும், அவருடன் 17 பேரும் விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட படுகொலை சம்பவத்தை மூடி மறைத்து பிரபாகரனின் புகழ் பாட நினைப்பது தவறு. இந்துத்துவா தேசியவாதம் போல்தான் பிரபாகரனின் தமிழ் தேசிய சித்தாந்தங்களும் மிக சிறுமையானது.

    இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பதிவிட்டார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் புத்த, சிங்கள ஆதிக்க நடவடிக்கைகளுக்கு எதிராகவும், சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கு ஆதரவாகவும் போராடிய பெரும் தலைவர், மேதகு பிரபாகரன்.

    சனாதன இந்துத்துவம் ஆதிக்க மனப்பான்மையை வலியுறுத்துகிறது. மேதகு பிரபாகரனின் அரசியல், இந்துத்துவா சித்தாந்தத்திற்கு எப்போதுமே ஆதரவு அளித்ததில்லை.

    திரு. ராஜிவ் காந்தியின் படுகொலையை காரணம் காட்டி எத்தனை நாட்கள் தமிழ் மக்களை நீங்கள் இழிவு படுத்துவீர்கள்? தமிழ் ஈழத்தில் தமிழர்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். தங்கள் நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை காங்கிரஸ் கொண்டு வர வேண்டிய தருணம் இது என்பதை உணருங்கள்.

    சிறுபான்மை தமிழர்களுக்கு ஆதரவாக நின்றதால் மேதகு பிரபாகரனுக்கும் விடுதலை புலிகளுக்கும் திருமதி இந்திரா காந்தி ஆதரவு அளித்தார்.

    ராஜிவ் காந்தியின் படுகொலையை யாரும் கொண்டாடவில்லை. அவரது முடிவு அவரே தேடி கொண்ட ஒன்றாகும்.

    மேதகு பிரபாகரனுக்கு ஆதரவு அளிப்பதுதான் இந்துத்துவாவை எதிர்ப்பதற்கு ஒப்பாகும்.

    இவ்வாறு வன்னி அரசு பதிவிட்டுள்ளார்.

    தி.மு.க.வுடன் தமிழகத்தில் ஒரே கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் முக்கிய பிரமுகர்களின் இந்த சித்தாந்த கருத்து மோதல் அரசியல் விமர்சகர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

    • எனக்கு மன உளைச்சல் எல்லாம் கிடையாது. நேரத்தை வீணடிக்கிறார்கள்.
    • அமலாக்கத்துறை என்பதெல்லாம் ஒன்றுமில்லை. எதிர்கட்சிகளை அடக்கும் இலாகா.

    கார்த்திப.சிதம்பரம் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது :-

    அமலாக்கத்துறையால் கிடுக்கிப்பிடி அப்படி... இப்படி... என்கிறார்கள். அதெல்லாம் ஒன்றும் கிடையாது. எனக்கு 20 முறை சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். இது நேரத்தை வீணடிக்கவும், மன உளைச்சலை ஏற்படுத்தவும் தான். எனக்கு மன உளைச்சல் எல்லாம் கிடையாது. நேரத்தை வீணடிக்கிறார்கள்.

    அமலாக்கத்துறை என்பதெல்லாம் ஒன்றுமில்லை. எதிர்கட்சிகளை அடக்கும் இலாகா. அவ்வளவு தான். அவர்களுக்கு வேறு எந்த வேலையும் கிடையாது.

    • ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
    • கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 4 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீட்டை பெற ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இதற்கு பிரதி உபகாரமாக ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அதில், சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்குகளில், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும், ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். பின்னர், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    நிலுவையில் உள்ள இந்த வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 4 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.11 கோடியே 4 லட்சம் ஆகும். அவற்றில், கர்நாடக மாநிலம் கூர்க் மாவட்டத்தில் உள்ள அசையா சொத்தும் அடங்கும்.

    • காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி வந்திருந்தார்.
    • வீடியோக்களை பார்த்த பலரும் கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவிட்டவண்ணம் உள்ளனர்.

    புதுடெல்லி:

    அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததற்கும், அவரை எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர்கள் குரல் கொடுத்தனர்.

    நாடு முழுவதும் காங்கிரசார் போராடி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரமோ போராட்டங்களில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. அவரது செயலை பலரும் விமர்சித்தனர்.

    இந்நிலையில், பாராளுமன்றத்தில் இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி வந்திருந்தார். அவரை வரவேற்க காங்கிரஸ் எம்பிக்கள் பலரும் காத்திருந்தனர். எல்லோருக்கும் வரிசையாக கைகொடுத்தபடி உள்ளே சென்ற ராகுல் காந்தி, கைகொடுக்க காத்திருந்த கார்த்தி சிதம்பரத்தை கண்டுகொள்ளவில்லை என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோக்களை பார்த்த பலரும் கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவிட்டவண்ணம் உள்ளனர். 

    கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனர்களுக்கு விசா பெற்றுக் கொடுத்ததாக சி.பி.ஐ. குற்றம் சுமத்தி உள்ளது.
    புதுடெல்லி:

    விசா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனும் காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. 

    ஆனால் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், கார்த்தி சிதம்பரத்தை மே 30ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என இடைக்கால தடை விதித்தது. முன்ஜாமீன் மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை மே 30ம்தேதிக்கு ஒத்திவைத்தது.

    அதன்படி, முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஜூன் 3ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். அதுவரை கார்த்தியை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறை மந்திரியாக இருந்தபோது, கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனர்களுக்கு விசா பெற்றுக் கொடுத்ததாக சி.பி.ஐ. குற்றம் சுமத்தி உள்ளது. இதற்காக கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கூறி அவர் மீது சி.பி.ஐ. சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
    பொய் வழக்கு போட்டு பாராளுமன்றத்தில் தனது குரலை ஒடுக்க சி.பி.ஐ. முயற்சி செய்து வருகிறது என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    கடந்த 2011-ம் ஆண்டு 263 சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தர முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த புகார் தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. மேலும் சமீபத்தில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    பின்னர் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை சி.பி.ஐ. கைது செய்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கார்த்தி சிதம்பரம் சார்பில் டெல்லி சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    ஆனால் முன்ஜாமீன் வழங்க மறுத்த கோர்ட்டு, கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் 16 மணி நேரத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இதற்கிடையே நேற்று காலை கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐ. தலைமையகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசா முறைகேடு தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

    கார்த்தி சிதம்பரத்திடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இன்றும் நேரில் ஆஜராகும்படி சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர்.

    இதற்கிடையே விசா முறைகேடு தொடர்பாக அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் பதிந்துள்ள வழக்கில் முன் ஜாமீன் கேட்டு கார்த்தி சிதம்பரம் தரப்பில் டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் அவரை கைது செய்ய 30-ந்தேதி வரை இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜரானார். காலை டெல்லி சி.பி.ஐ. தலைமையகத்துக்கு அவர் நேரில் சென்றார்.

    கார்த்தி சிதம்பரத்திடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் முற்றிலும் சட்ட விரோதமான மற்றும் சாசனத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு எந்த தொடர்பும் இல்லாத குற்றச்சாட்டில் சி.பி.ஐ. டெல்லியில் உள்ள எனது வீட்டில் சோதனை நடத்தியது.

    சோதனையின்போது சி.பி.ஐ. அதிகாரிகள் சிலர் நான் உறுப்பினராக உள்ள தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான பாராளுமன்ற நிலைக்குழு தொடர்பாக மிகவும் ரகசியமான மறறும் முக்கியமாக எழுதி வைக்கப்பட்ட குறிப்புகள், ஆவணங்களை கைப்பற்றினர்.

    ஒரு பாராளுமன்ற உறுப்பினராக எனது கடமைகளில் தலையிடும் சி.பி.ஐ.யின் இந்த நடவடிக்கைகள் பாராளுமன்றத்தால் நிறுவப்பட்ட ஜனநாயக கோட்பாடுகளின் மீதான நேரடித் தாக்குதலாகும்.

    இந்த விவகாரம் எனது பாராளுமன்ற சிறப்புரிமையை அப்பாட்டமாக மீறுவதாகும். சபை உறுப்பினரை இலக்கு வைத்து மிரட்டுவது சிறபுரிமையை மீறிவதாகும்.

    பொய் வழக்கு போட்டு பாராளுமன்றத்தில் எனது குரலை ஒடுக்க சி.பி.ஐ. முயற்சி செய்து வருகிறது. பாராளுமன்றத்தில் எனது செயல்பாடுகளை தடுக்க நினைக்கிறது.

    இவ்வாறு கடிதத்தில் கூறி உள்ளார்.

    சி.பி.ஐ. சம்மனை ஏற்று இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய கார்த்தி சிதம்பரம், டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறை மந்திரியாக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனர்களுக்கு விசா பெற்றுக் கொடுத்ததாக சி.பி.ஐ. குற்றம் சுமத்தி உள்ளது.

    இதற்காக கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கூறி அவர் மீது சி.பி.ஐ. சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர  ராமன் கைது செய்யப்பட்ட நிலையில், சி.பி.ஐ. சம்மனை ஏற்று கார்த்தி சிதம்பரம் நேற்று இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பினார். 

    இன்று காலை 8 மணிக்கு கார்த்தி சிதம்பரம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏராளமான கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தினார்கள்.  விசாரணை முடிவில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. 

    இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தை மே 30ம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்ஜாமீன் மீதான அடுத்தகட்ட விசாரணை மே 30ம்தேதி நடைபெறும் என நீதிபதி தெரிவித்தார். 

    பஞ்சாப் மின்நிலைய கட்டுமான பணிக்கு சீனர்களை அழைத்து வர விசா வழங்கியதற்கான ஆதாரங்களை காட்டி சி.பி.ஐ. அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தினார்கள்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறை மந்திரியாக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனர்களுக்கு விசா பெற்றுக் கொடுத்ததாக சி.பி.ஐ. குற்றம் சுமத்தி உள்ளது.

    இதற்காக கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது சி.பி.ஐ. சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தது.

    பஞ்சாபில் வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான டி.எஸ்.பி.எல் எனும் நிறுவனத்தின் சார்பில் மின் நிலைய பணிகளில் ஈடுபடுவதற்காக 263 சீனர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்றுத்தர, டி.எஸ்.பி.எல் நிறுவனம் கார்த்தி சிதம்பரத்திற்கும், அவரது ஆடிட்டர் பாஸ்கர ராமன் என்பவருக்கும் லஞ்சம் கொடுத்ததாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான சென்னை, டெல்லி, மும்பை, ஒடிசாவில் உள்ள 10 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையின்போது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சி.பி.ஐ. தெரிவித்தது. ஆனால் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவில் கூறினார்.

    இதற்கிடையே சென்னை கோடம்பாக்கத்தில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனிடம் 10 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடந்தது. அன்று மாலை அவர் கைது செய்யப்பட்டார்.

    ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை கார்த்தி சிதம்பரம் மறுத்தார். விசா நடைமுறையில் சீனாவைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட நான் உதவவில்லை. சி.பி.ஐ. தன் மீது கூறும் குற்றச்சாட்டுகள் அபத்தமானது என்றும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

    இந்த நிலையில், விசா முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் கார்த்தி சிதம்பரம் மீதும் பாஸ்கர ராமன் மீதும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகளும் நேற்று வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக விசாரிக்கப்படும் என்றும் டெல்லியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக உதவியதாக கார்த்தி சிதம்பரம் மீது ஏற்கெனவே வழக்கு உள்ளது. இதனால் சுப்ரீம் கோர்ட்டு மற்றும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதி பெற்று கார்த்தி சிதம்பரம் இங்கிலாந்து சென்றார். அந்த சமயத்தில் தான் விசா முறைகேடு தொடர்பான சோதனை நடத்தப்பட்டது.

    நாடு திரும்பிய 16 மணி நேரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் இன்று (வியாழக்கிழமை) ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.

    சி.பி.ஐ. சம்மனை ஏற்று கார்த்தி சிதம்பரம் நேற்று இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பினார். விமானத்தில் டெல்லி வந்த அவர் நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும் சி.பி.ஐ. குற்றச்சாட்டை எதிர்கொள்வது தொடர்பாகவும் அவர் ஆலோசித்தார்.

    இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு கார்த்தி சிதம்பரம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு ஆஜராக சென்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘சீனர்களுக்கு நான் முறைகேடாக விசா பெற்றுக்கொடுக்கவில்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை’ என்று கூறினார்.

    இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு கார்த்தி சிதம்பரம் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏராளமான கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தினார்கள். குறிப்பாக பஞ்சாப் மின்நிலைய கட்டுமான பணிக்கு சீனர்களை அழைத்து வர விசா வழங்கியதற்கான ஆதாரங்களை காட்டியும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    மேலும் ரூ.50 லட்சம் பணம் கைமாறியது தொடர்பான இ-மெயில் ஆதாரங்களையும் சி.பி.ஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்திடம் காண்பித்து கேள்விகள் கேட்டதாக கூறப்படுகிறது. விசாரணை தொடர்ந்து நீடிக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    விசாரணை முடிவில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது பழிவாங்கும் நடவடிக்கை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    கார்த்தி சிதம்பரம் மீது சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக ஏற்கனவே 2 வழக்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். தற்போது விசா முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது 3-வது வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் அடுத்தடுத்து ப.சிதம்பரத்துக்கும், கார்த்தி சிதம்பரத்துக்கும் நெருக்கடி கொடுத்து வருகிறது.



    விசா முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் இன்று மாலை சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக உள்ள நிலையில்தான் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து இருக்கிறது.
    புதுடெல்லி:

    சீனாவை சேர்ந்த 263 பேர்களுக்கு முறைகேடாக விசா வழங்குவதற்கு ரூ.50 லட்சம் லஞ்சம் பெறப்பட்டதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

    இதுதொடர்பாக சென்னை, டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் சி.பி.ஐ. சோதனையும் நடத்தியது.

    இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    விசா முறைகேடு விவகாரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளித்து உள்ளார்.

    இந்தநிலையில் விசா முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை இன்று வழக்கு பதிவு செய்துள்ளது. அடுத்த கட்டமாக அவர் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பவும் திட்டமிட்டு உள்ளது.

    விசா முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் இன்று மாலை சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக உள்ள நிலையில்தான் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து இருக்கிறது.

    ×