search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kadayam"

    • சுவரானது 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறிது சிறிதாக இடிந்து விழத் தொடங்கியது.
    • மலையான்குளம், பேராமணி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலை அந்த குளக்கரை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடையம்:

    கடையம் ஒன்றியம் பாப்பான்குளம் ஊராட்சிக்குட்பட்ட மைலப்பபுரம் கிராமத்தில் பேராமணி குளம் உள்ளது. இக்குளத்தின் மூலம் சுமார் 300 ஏக்கர் பாசன வசதி பெற்று வரும் நிலையில் குளக்கரையின் கீழ்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருந்தது. அந்த சுற்றுச்சுவரானது 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறிது சிறிதாக இடிந்து விழத் தொடங்கியது.

    தற்பொழுது கீழ்ப்பகுதியில் மொத்தமாக சுற்றுச்சுவர் இடிந்து காணப்படுவதால் மைலப்பபுரம், மலையான்குளம், பேராமணி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலை அந்த குளக்கரை தான் என்பதாலும் ஊருக்குள் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருவதால் அருகில் இருந்து அதிகளவில் மாணவ- மாணவிகள் சைக்கிள், ஆட்டோ போன்ற வாகனங்களில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். எனவே விபத்துக்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காகவும், தொடர்ந்து குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலையும் வலுவிழந்து வருவதால் பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக பேராமணி குளத்தில் இடிந்து விழுந்துள்ள சுற்று சுவரை மீண்டும் புதிதாக கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தோரணமலையில் ஒடிசா ரெயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் பூரண குணம் பெற கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

    கடையம்:

    தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இந்த கோவிலில் உள்ள முருகனை அகத்தியர், தேரையர் உள்ளிட்ட சித்தர்களும், முனிவர்களும் வழிபட்ட பெருமையும் சிறப்பு உடையதாகும் . இந்த கோவிலில் மாதந்தோறும் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் வருவது வழக்கம். வைகாசி மாத பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம் வந்தனர். கிரிவலம் முடிந்த பின்னர் ஒடிசா ெரயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் பூரண குணம் பெறவும், விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைந்து மோட்சம் பெறவும், இது போன்ற விபத்துக்கள் நடைபெற கூடாது எனவும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. பிரார்த்தனையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

    • கேரளா, கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தங்கள் மாநிலத்தின் நலனை பாதுகாப்பதில்அக்கறை கொண்டு செயல்படுகின்றனர்.
    • தண்ணீரைப்போல ஆண்டுக்காண்டு கனிம வளங்களை இயற்கை நமக்கு அளிக்காது.

    கடையம்:

    அம்பை, தென்காசி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிஅருணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தற்போது மணலுக்கு மாற்றாக உபயோகப்படுத்தப்பட்டு வரும் எம்.சாண்ட், ஜல்லி கற்கள், சரள், செம்மண் ஆகியவற்றை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு நிரந்தர தடை விதிக்க வேண்டும்.

    கேரளா அல்லது கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் ஆட்சியாளர்கள் தங்கள் மாநிலத்தின் நலனை குறிப்பாக இயற்கை வளத்தை பாதுகாப்பதில் தான் அக்கறை கொண்டு முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகிறார்கள்.

    கேரளாவில் முல்லை பெரியாறு அணை விவகாரத்திலும் சரி, கர்நாடகத்தில் மேகதாது அணை விவகாரத்திலும் சரி அவர்களது செயல்பாடுகள் முழுக்க முழுக்க அந்தந்த மாநிலத்தின் நலனையே கருத்தில் கொண்டு இருக்கிறது. இதேபோல் நம் தமிழகமும் இருக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் கோரிக்கை. அதிலும் குறிப்பாக நமது நாட்டின் சொத்தான கனிம வளங்களை பிற மாநிலங்களுக்கு எடுத்து செல்வதை அரசு ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

    தண்ணீர் கூட அதிக அளவு மழை பெய்தால் மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால் இயற்கை நமக்கு அளித்த நன்கொடையான கனிம வளங்கள் அப்படி அல்ல. இதை தண்ணீரைப்போல ஆண்டுக்காண்டு இயற்கை நமக்கு அளிக்காது. பல ஆண்டுகாலம் இயற்கை இதை உள்வாங்கிக் கொண்டு நமக்கு அளித்தது. ஆகவே அதை நமது மாநிலத்தின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக அண்டை மாநிலங்களுக்கு தாரை வார்க்க கூடாது. இதை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

    தமிழக அரசு கனிம வளங்களை பிற மாநிலங்களுக்கு எடுத்து செல்ல நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திட்டத்தினால் கிடைக்கும் பயன்கள் பற்றி வேளாண்மை உதவி இயக்குநர் ஏஞ்சலின் பொன்ராணி விளக்கி பேசினார்.
    • வேளாண்மை உதவி அலுவலர் கமல்ராஜன் நுண்ணுயிர் பாசன திட்டத்தின் பயன்கள் பற்றி விளக்கி கூறினார்.

    கடையம்:

    கடையம் வட்டாரம் அணைந்த பெருமாள் நாடானூர் பஞ்சாயத்தில் 2023-2024-ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டம்- கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து துறைகளின் சிறப்பு முகாம் நூலகத்தில் பஞ்சாயத்து தலைவர் அழகுதுரை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் கடையம் வேளாண்மை உதவி இயக்குநர் ஏஞ்சலின் பொன்ராணி கலந்து கொண்டு வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் இத்திட்டத்தினால் கிடைக்கும் பயன்கள் பற்றி விளக்கி பேசினார். கால்நடை துறை சார்பில் கலந்து கொண்ட கால்நடை ஆய்வாளர் கிருஷ்ணவேணி, கால்நடைதுறை மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் பயன்கள் பற்றி விளக்கி கூறினார். வேளாண்மை உதவி அலுவலர் கமல்ராஜன் நுண்ணுயிர் பாசன திட்டத்தின் பயன்கள் பற்றி விளக்கி கூறினார். மேலும் பஞ்சாயத்து தலைவர் அழகுதுரை ஊரக உள்ளாட்சி துறை மூலம் பஞ்சாயத்து பகுதியில் நடைபெறும் வேலைகள் பற்றி விளக்கினார். வேளாண்மை உதவி அலுவலர் தீபா கூட்டத்திற்கான ஏற்பாடு களை செய்திருந்தார். கடையம் வட்டாரத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்- கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தேர்வாகி யுள்ள துப்பாக்குடி, முதலி யார்பட்டி, திருமலை யப்பபுரம் பஞ்சாயத்து களிலும் அனைத்து துறைகளின் சிறப்பு முகாம் நடைபெற்றது. கூட்டத்தில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மகாகவி பாரதியார் கோப்பைக்கான மாநில கால்பந்துப் போட்டிகள் 2 நாட்கள் நடந்தது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளை வி.டி.எஸ்.ஆர். ரகுமான்கான் வழங்கினார்.

    கடையம்:

    கடையம் கால்பந்து கழகம் மற்றும் தென்காசி வி.டி.எஸ்.ஆர். சில்க்ஸ் சார்பாக கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மகாகவி பாரதியார் கோப்பைக்கான மாநில கால்பந்துப் போட்டிகள் 2 நாட்கள் நடந்தது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 14 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகம் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது.

    2-ம் இடத்தை விராலிமலை எம்.எம்.எப். சி. அணியும், 3-ம் இடத்தை நாகர்கோவில் ஏ.எஸ்.எப்.சி. அணியும், 4-ம் இடத்தை கடையம் கால்பந்து கழகமும் பெற்றது.

    பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு சத்திரம் தொடக்கப்பள்ளி செயலர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினர். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளை வி.டி.எஸ்.ஆர். ரகுமான்கான் வழங்கினார்.

    முதல் பரிசு ரூ. 15,001 திண்டுக்கல் அணிக்கு ஜெப பிரவின் சார்பாக கடையம் அருணாசலம் வழங்கினார். 2-ம் பரிசு ரூ. 10,001 விராலிமலை அணிக்கு நடராஜ் அகாடமி சார்பாக வழங்கினார், 3-ம் பரிசு ரூ. 7,001 நாகர்கோவில் அணிக்கு கோபிநாத் பிரபு சார்பாக வேல்முருகன் வழங்கினார். 4-ம் பரிசு ரூ. 5,001 கடையம் அணிக்கு மெரிபால் சார்பாக ரவி வழங்கினார்

    சிறந்த வீரர்களாக கடையம் வள்ளிகுட்டி, சின்னதம்பி ஸ்ரீதர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. இப்போட்டிக்கான ஏற்பாடுக்களை கால்பந்து கழகத் தலைவர் மெரிபால், செயலாளர் கிறித்துதாஸ், பொருளாளர் ஜெயராஜ், துணைத்தலைவர்கள் ஸ்டியன், தாமஸ், கருணாகரன், இசக்கி நாரயணன், இணைச் செயலாளர்கள் கிங்ஸ்ஸி, நதின் ஆறுமுகம், துணைச் செயலாளர்கள் கண்ணன், பழனிசாமி, ராஜேஷ், மாரிசெல்வம், வினோத் மற்றும் உறுப்பினார்கள் செய்திந்தனர்.

    • கடையம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கடையம் சின்ன தேர்திடலில் நடைபெற்றது.
    • ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கடையம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் வழங்கினார்.

    கடையம்:

    கடையம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கடையம் சின்ன தேர்திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கடையம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ரவணசமுத்திரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புகாரி மீரா சாகிப், வின்சென்ட் பால், மாரியப்பன், சதாம் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்று பேசினார்.

    இல்லம் தேடி கல்வி,மக்களை தேடி மருத்துவம், மகளிர்க்கு இலவச பேருந்து பயணம், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் உள்பட பல்வேறு திட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆட்சி சாதனைகளை குறித்து சிறப்பு பேச்சாளர் மாநில விவசாய அணி துணைச்செயலாளர் நல்ல சேதுபதி விளக்கி பேசினார். மாவட்ட பேச்சாளர் செங்கை குத்தாலிங்கம் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார். ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கடையம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் வழங்கினார்.

    கூட்டத்தில் சசிகுமார், சுரேஷ், மகேஷ் பாண்டியன், ஞானராஜ், அரவிந்த், ஜெயராணி அண்ணாதுரை, அழகை முருகன், ஒன்றிய துணை செயலாளர் முல்லையப்பன், பக்கீர் மைதீன், கோதர் மைதீன், மாவட்ட பிரதிநிதிகள் வாகைகுளம் பெருமாள், முகமது யாகூப், ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், சுந்தரி மாரியப்பன், புஷ்பராணி, ரம்யா ராம்குமார் ஆவுடை கோமதி,பஞ்சாயத்து தலைவர்கள் மலர்மதி சங்கர பாண்டியன், முகைதீன் பீவி அசன், குயிலி லட்சுமணன், பொன்ஷீலா பரமசிவன், ஜன்னத் சதாம் உசேன் மற்றும் அந்தோணிசாமி, அந்தோணி தாமஸ், மாடசாமிப்பாண்டியன், சங்கரபாண்டியன், அருள், மீனாட்சிபுரம் முருகன், வேலையா, சக்தி சுப்பிரமணியன், பிள்ளையார் குளம் இளங்கோ, அருள் ஆரோக்கிய ராஜ், சுப்பையா, மாரியப்பன், முருகன், பிச்சாண்டி, பாரதி நகர் சதீஷ்குமார், அனுராதா, பிரமு உள்ளிட்ட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுரேஷ் நன்றி கூறினார்.

    • கடையம் வேல்முருகன் கராத்தே பள்ளி சார்பில் பல்வேறு பாரம்பரிய தற்காப்பு கலை சாகசங்கள் செய்யப்பட்டது.
    • நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இக்கோவில் அகஸ்தியர் தேரையர் போன்ற சித்தர்களால் வழிபடப்பட்ட பெருமை உடையதாகும்.

    இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் விளையாட்டை மறந்து செல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் நிலையில் 90-ம் ஆண்டுகளில் குழந்தைகள் விளையாடிய விளையாட்டுகளை மீண்டும் விளையாடும் வண்ணம் பம்பரம் விளையாடுதல், கோலி குண்டு விளையாடுதல், கிட்டிபுல் என்ற செல்லாங்குச்சி விளையாடு தல், பலூன் உடைத்தல், பூப்பறிக்க வரீங்களா என்ற பெண்கள் விளையாட்டு போன்ற பழைமையான மறந்து போன விளை யாட்டுகளை விளையாடினர். மேலும் தேன்மிட்டாய், குருவி ரொட்டி, ஆரஞ்சு வில்லை, கடலை மிட்டாய் போன்ற மறந்து போன பண்டங்களை குழந்தைகளின் விளை யாட்டின் இடைவெளியில் கொடுத்து கிட்டத்தட்ட 1990-ம் ஆண்டுகளில் நடந்த நிகழ்ச்சிகளை போன்றே தோரணமலை பக்தர் குழு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    மேலும் கடையம் வேல்முருகன் கராத்தே பள்ளி சார்பில் பல்வேறு பாரம்பரிய தற்காப்பு கலை சாகசங்கள் செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவி யர்களுக்கு சான்றிதழ் வழங் கப்பட்டது. சான்றிதழ்களை பராசக்தி கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியை கயற் கன்னி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை பால்த்தாய் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ்கள் வழங்கினர்.

    வந்திருந்த அனை வருக்கும் காலை முதல் மாலை வரை அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோரண மலை முருகன் கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

    • வல்லப கணபதிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
    • பக்தி கோஷம் எழுப்பியவாறு பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரண மலை முருகன் கோவில். இந்த கோவில் மலை மீது, குகையில் முருகன் அமைந்த தலம் ஆகும். அகத்தியர், தேரையர் போன்ற சித்தர்கள், முனி வர்களால் வழிபடப்பட்ட பெருமை உடைய கோவிலாகும். இன்று காலை சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு மலை மீது உள்ள முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

    பின்னர் மலை அடி வாரத்தில் அமைந்துள்ள வல்லப கணபதிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

    முதலில் விநாயகர் கோவிலிலை சுற்றி தரிசனம் செய்த பக்தர்கள் பின்னர் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ள கிரிவல பாதையை சுற்றி "முருகனுக்கு அரோகரா "என்ற பக்தி கோஷம் எழுப்பிய வாறு கிரிவலம் வந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் மலையை சுற்றி வந்த பக்தர்களுக்கு காலையில் அன்ன தானம் மற்றும் பிர சாதங்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பக ராமன் செய்திருந்தார்.

    • சித்திரை திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • நாளை காலை கோவிலுக்கு சுவாமி அம்பாள் எழுந்தருளல் நடைபெறுகிறது.

    கடையம்:

    கடையம் நித்யகல்யாணி அம்பாள் உடனுறை வில்வ வனநாதர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி-அம்பாளுக்கு தீபாராதனை சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில் கடந்த 26-ந்தேதி காலையில் ஏக சிம்மாசன, அபிஷேகம், பூத சிம்ம வாகனத்தில் எழுந்தருளல் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து 27-ந்தேதி காலை ஏக சிம்மாசனம், பின்னர் அபிஷேகம் திருத்தேர்கால் நாட்டுதல் நடந்தது. 5-ந் திருநாள் இரவு இந்திர வாகனங்களில் எழுந்த ருளல், சுவாமி- அம்பாள் ஊடல் தீபாராதனை நடைபெ ற்றது. 6-ந் திருநாளான வெள்ளிக்கிழமை காலை அபிஷேகம், தீபாராதனை நடை பெற்றது. இரவில் யானை அன்ன வாகனங்களில் எழுந்தருளல் நடைபெற்றது. 7-ந்திருநாளான ஞாயிற்று க்கிழமை காலையில் அபிஷேகம், தீபாராதனை சிறப்பு பூஜை, மாலையில் நடராஜர் அபிஷேகம், நடராஜர் இவப்பு சாத்தி நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து 8-ந் திருநாளான நேற்று மாலை நடராஜர் பச்சை சாத்தி , பூங்கோவில் கங்காளநாதர் எழுந்தருளல் நடைபெற்றது. விழாவில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை அபிஷேகம், தீபாராதனை, சுவாமி ரதத்திற்கு எழுந்தருளல் நடைபெற்றது.

    பின்னர் சுவாமி-அம்பாள் தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. இதையடுத்து மாலையில் தேர் வலம் வருதல் நடைபெறுகிறது.

    இதில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

    10-ந் திருவிழாவான நாளை காலை 11 மணிக்கு கோவிலுக்கு சுவாமி அம்பாள் எழுந்தருளல் நடைபெறுகிறது. இதையடுத்து கொடி இறக்குதல், தீர்த்தவாரி அபிஷேகம் நடைபெறுகிறது. விழாவில் ஒவ்வொரு நாள் மாலையில் திருமுறை இன்னிசை நடை பெறுகிறது. திருவிழாவானது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர்களால் நடத்தப்பட்டது.

    • கருத்தப்பிள்ளையூர் கிராமத்தில் தென்னையில் பூச்சி நோய் மேலாண்மை பற்றிய சிறப்பு முகாம் நடைபெற்றது. ‌
    • தென்காசி மாவட்ட தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்ட ஆலோசகர் வெங்கடசுப்பிரமணியன் தொழில் நுட்ப உரையாற்றினார்.

    கடையம்:

    தமிழ்நாடு அரசு வேளாண்மை -உழவர் நலத்துறை மாநில தலைமை யகம் சார்பில் தென்னை விவசாயிகளின் நலன் கருதி, தென்னை அதிகமாக சாகுபடி செய்யும் கிராமங்களில் சிறப்பு முகாம்களை நடத்திட உத்தரவிட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட வேளா ண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் ஆலோச னையி ன்படி, கடையம் வட்டா ரத்தில் தென்னை அதிகமாக சாகுபடி செய்து வரும் கருத்தப்பிள்ளையூர் கிரா மத்தில் தென்னையில் பூச்சி நோய் மேலாண்மை பற்றிய சிறப்பு முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கடையம் வேளாண்மை உதவி இயக்கு னர் ஏஞ்சலின் பொன் ராணி தலைமை தாங்கி னார். துணை வேளாண்மை அலுவலர் சுப்பு ராம் வரவேற்று பேசினார்.

    தென்காசி மாவட்ட தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்ட ஆலோசகர் வெங்கடசுப்பிர மணியன் (வேளாண்மை உதவி இயக்குநர் ஓய்வு) தொழில் நுட்ப உரையாற்றினார். வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி பேசுகையில், தென்னையில் பசுந்தாள் பயிர் சாகுபடி செய்து மடக்கி உழுதல், தொழுஉரம், ரசாயன உரங்கள், நுண்ணூட்ட உரம் தென் னை மரங்களுக்கு இடும் அளவு மற்றும் முறைகள் பற்றி விளக்கமாக கூறினார்.

    தொழில்நுட்ப உரையாற்றிய தேசிய உணவு பாதுகாப்பு இயக்கதிட்ட ஆலோசகர் வெங்கட சுப்பிரமணியன் தென்னை யை தாக்கும் காண்டாமிருக வண்டு, சிகப்பு கூன் வண்டு, ரூக்கோஸ் சுருள் வெள்ளை ஈ, கருந்தலை புழு தாக்குத லால் தென்னை மரங்களுக்கு ஏற்படும் பாதிப்பு, அதை நிவர்த்தி செய்ய விவசாயி கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றியும் விளக்கி கூறினார்.

    மேலும் தென்னை வளர்ச்சி வாரியத்தில் பதிவு செய்து பல்வேறு திட்டங்கள் பெற விவசாயிகளுக்கு ஆலோ சனையும் வழங்கி னார். துணை வேளாண்மை அலுவலர் சுப்புராம் தென்னை மரம் ஏறும் கருவி கள் பற்றி விளக்கி பேசினார்.

    தோட்டக்கலை உதவி அலுவலர் திருமலைக்குமார் தென்னையில் ஊடுபயிராக வாழை, கோகோ போன்ற பயிர்கள் சாகுபடி செய்வ தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி கூறினார். முகாமில் கலந்து கொண்ட விவசாயி களுக்கு வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் தென்னையை தாக்கும் பூச்சி, நோய் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    முடிவில் வேளாண்மை உதவி அதிகாரி கமல்ராஜன் நன்றி கூறினார்.

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • வரி கொடுக்காமல் பணம் முழுவதையும் சந்தனகுமார் மது குடித்து காலி செய்துவிட்டார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    கடையத்தை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகன் சந்தனகுமார்(வயது 22). இவருக்கு சமீபத்தில் மீனா(20) என்பவருடன் திருமணமானது.

    சந்தனகுமார் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கடையம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையத்தில் நடைபெற உள்ள ஒரு கோவில் கொடை விழாவிற்கு வரி செலுத்துமாறு ரூ.5 ஆயிரத்தை மீனா தனது கணவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் வரி கொடுக்காமல் பணம் முழுவதையும் சந்தனகுமார் மது குடித்து காலி செய்துவிட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி, சந்தன குமாரை திட்டியதாக கூறப்படுகிறது.

    இதில் மனம் உடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையத்தில் பாரதியார் சிலை திறப்புக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    கடையம்:

    கடையத்தில் பாரதியாரின் 125-வது திருமணநாள் விழா சேவாலயா தொண்டு நிறுவனம் சார்பில் வருகிற 27-ந் தேதி அன்று கடையத்தில் பாரதியார் -செல்லம்மாள் சிலைத் திறப்புடன் நடைபெற உள்ளது.

    நூலகம் ஒன்று கட்டப்பட்டு அதில் பாரதியார் சிலையும், செல்லம்மா - பாரதி கற்றல் மையம் சேவாலயா சார்பில் 27-ந்தேதி திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கடையம் பழைய கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேவாலயா நிறுவனர் முரளிதரன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் கல்யாணி சிவகாமி நாதன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக கீழ கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத், தெற்கு கடையம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராமதுரை, ஒன்றிய கவுன்சிலர்கள் புளி கணேசன் , மாரி குமார் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

    இதில் லயன்ஸ் கிளப் குமரேசன், ஆசிரியர் கோபால், சேது ராமலிங்கம், சோமசுந்தரம்,சுரேஷ், பாலன் கவியரசன்,சேவாலயா சார்பில் மருத்துவர் கோகுலகிருஷ்ணன், கிங்ஸ்டன், காஞ்சனா ஆகியோர் கலந்து கொண்டனர் . சேவாலயா ஒருங்கிணைப்பாளர் சங்கிலிபூதத்தான் நன்றி கூறினார்.
    ×