search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minarals"

    • இளங்குளம் கிராம நிர்வாக அலுவலர் முத்துசாமி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • மண் திருட்டு குறித்து கிராம நிர்வாக அலுவலர் விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    நெல்லை:

    விஜயநாராயணம் அருகே இளங்குளம் கிராம நிர்வாக அலுவலர் முத்துசாமி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஐ.என்.எஸ். கட்டபொம்மன் பகுதி அருகே வந்து கொண்டிருந்த டிராக்டர்களை நிறுத்தி சோதனை செய்தார்.

    அதில் சட்டவிரோதமாக சரள் மண்ணை ஏற்றிவந்தது தெரியவந்தது. உடனடியாக இது தொடர்பாக அவர் விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து மண் திருட்டில் ஈடுபட்ட ஸ்ரீவைகுண்டம் தெற்கு தோழா பண்ணை வடக்கு தெருவை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (வயது46), நாசரேத் நோச்சிகுளம் கோகுல் (21), தெற்கு வெங்கடாசலபுரம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜா (27), வேலாயுதபுரத்தை சேர்ந்த இசக்கிதுரை (20) ஆகிய 4 பேரை கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 4 ½ யூனிட் சரள் மண் மற்றும் 4 டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கேரளா, கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தங்கள் மாநிலத்தின் நலனை பாதுகாப்பதில்அக்கறை கொண்டு செயல்படுகின்றனர்.
    • தண்ணீரைப்போல ஆண்டுக்காண்டு கனிம வளங்களை இயற்கை நமக்கு அளிக்காது.

    கடையம்:

    அம்பை, தென்காசி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிஅருணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தற்போது மணலுக்கு மாற்றாக உபயோகப்படுத்தப்பட்டு வரும் எம்.சாண்ட், ஜல்லி கற்கள், சரள், செம்மண் ஆகியவற்றை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு நிரந்தர தடை விதிக்க வேண்டும்.

    கேரளா அல்லது கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் ஆட்சியாளர்கள் தங்கள் மாநிலத்தின் நலனை குறிப்பாக இயற்கை வளத்தை பாதுகாப்பதில் தான் அக்கறை கொண்டு முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகிறார்கள்.

    கேரளாவில் முல்லை பெரியாறு அணை விவகாரத்திலும் சரி, கர்நாடகத்தில் மேகதாது அணை விவகாரத்திலும் சரி அவர்களது செயல்பாடுகள் முழுக்க முழுக்க அந்தந்த மாநிலத்தின் நலனையே கருத்தில் கொண்டு இருக்கிறது. இதேபோல் நம் தமிழகமும் இருக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் கோரிக்கை. அதிலும் குறிப்பாக நமது நாட்டின் சொத்தான கனிம வளங்களை பிற மாநிலங்களுக்கு எடுத்து செல்வதை அரசு ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

    தண்ணீர் கூட அதிக அளவு மழை பெய்தால் மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால் இயற்கை நமக்கு அளித்த நன்கொடையான கனிம வளங்கள் அப்படி அல்ல. இதை தண்ணீரைப்போல ஆண்டுக்காண்டு இயற்கை நமக்கு அளிக்காது. பல ஆண்டுகாலம் இயற்கை இதை உள்வாங்கிக் கொண்டு நமக்கு அளித்தது. ஆகவே அதை நமது மாநிலத்தின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக அண்டை மாநிலங்களுக்கு தாரை வார்க்க கூடாது. இதை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

    தமிழக அரசு கனிம வளங்களை பிற மாநிலங்களுக்கு எடுத்து செல்ல நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×