search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gravel"

    • இளங்குளம் கிராம நிர்வாக அலுவலர் முத்துசாமி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • மண் திருட்டு குறித்து கிராம நிர்வாக அலுவலர் விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    நெல்லை:

    விஜயநாராயணம் அருகே இளங்குளம் கிராம நிர்வாக அலுவலர் முத்துசாமி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஐ.என்.எஸ். கட்டபொம்மன் பகுதி அருகே வந்து கொண்டிருந்த டிராக்டர்களை நிறுத்தி சோதனை செய்தார்.

    அதில் சட்டவிரோதமாக சரள் மண்ணை ஏற்றிவந்தது தெரியவந்தது. உடனடியாக இது தொடர்பாக அவர் விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து மண் திருட்டில் ஈடுபட்ட ஸ்ரீவைகுண்டம் தெற்கு தோழா பண்ணை வடக்கு தெருவை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (வயது46), நாசரேத் நோச்சிகுளம் கோகுல் (21), தெற்கு வெங்கடாசலபுரம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜா (27), வேலாயுதபுரத்தை சேர்ந்த இசக்கிதுரை (20) ஆகிய 4 பேரை கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 4 ½ யூனிட் சரள் மண் மற்றும் 4 டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • வாகனங்களில் செல்லவோ முடியாமல் கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
    • ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் சாலைப்பணி முடிக்கப்ப டாமலேயே அப்படியே கிடப்பில் உள்ளது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், அருந்தவபுரம் ஊராட்சியில், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சமத்துவபுரம் பகுதியில் சாலைப்புதுப்பிக்கும் பணிகள் தொடங்கிய நிலையில் ஏற்கனவே போடப்பட்டிருந்த கப்பி சாலையை பெயர்த்து கருங்கல் ஜல்லிகள் பரப்பி உள்ளனர்.

    ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் சாலைப்பணி முடிக்கப்ப டாமலேயே அப்படியே கிடப்பில் போடப்பட்டு ள்ளதால் கிராம மக்கள் சாலையில் நடந்து செல்லவோ வாகனங்களில் செல்லவோ முடியாமல் கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலைப்பணி யை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஜல்லிக்கட்டு மைதான பணிகளை முதன்மை செயலாளர் ஆய்வு செய்தார்.
    • கலெக்டர் சங்கீதா, யூனியன் ஆணையாளர் வள்ளி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் கட்டப்பட்டு வரும் பிரமாண்டமான ஜல்லிக்கட்டு மைதானம் கட்டுமான பணிகளை பொதுபணித்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, யூனியன் ஆணையாளர் வள்ளி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • அரசு தொடக்கப்பள்ளியில் கட்டிட வேலைகள் தற்போது நடைபெற்று பெற்று வருகிறது.
    • ஆனால் பல நாட்களாக அதற்கான பணிகள் நடை பெறாமல் தற்போது வரை சாலையிலேயே மணல், ஜல்லி கற்கள் கொட்டி கிடக்கிறது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை கீழுர் பகுதியில் பிரசித்தி பெற்ற அழகிய மனவாள பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு காலை- மாலை என இரு வேளைகளிலும் செங்கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

    மேலும் கோவிலை யொட்டி ஏராளமான குடியிருப்பு வாசிகள் வாழ்ந்து வருகின்றனர். இதன் அருகில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும். அரசு தொடக்கப்பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது.

    இப்பள்ளிகளில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் இருந்து மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். அவ்வாறு வரும் பள்ளி மாணவர்கள் மற்றும் பக்தர்கள், பொதுமககள் கீழுர் தபால் நிலையத்தை யொட்டி பிரதான குறுகிய சாலையே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் குறுகிய சாலையையொட்டி உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கட்டிட வேலைகள் தற்போது நடைபெற்று பெற்று வருகிறது. இதற்கான மணல், ஜல்லி கற்களை கொட்டி உள்ளனர். ஆனால் பல நாட்களாக அதற்கான பணிகள் நடை பெறாமல் தற்போது வரை சாலையிலேயே கொட்டி கிடக்கிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் அவசர உதவிக்கு கூட ஆட்டோவில் செல்ல முடியாத நிலை உள்ளது.

    மேலும் மிக முக்கியமான குறுகிய சாலையே பயன் படுத்தும் பள்ளி மாண வர்கள், பக்தர்கள், குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்துடன் கடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டுள்ளனர். இருப்பி னும் சாலையில் கொட்டி கிடக்கும் மணல், ஜல்லி கற்கள் இன்னும் அகற்றப் படாமல் இருக்கிறது.

    எனவே பள்ளி மாண வர்கள், பக்தர்கள் குடி யிருப்பு வாசிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மணல், ஜல்லியை அகற்றி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×