search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoranamalai"

    • விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரண மலை முருகன் கோவில்.

    அகத்தியர், தேரையர் போன்ற சித்தர்கள் வழிபட்ட புராண சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் உடைய இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று மலை மீது சுனையில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு அடிவாரத்தில் உள்ள பிள்ளையார்கோவில் அருகே உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில் சமீபத்தில் பருவ மழை பொய்த்துப் போனதால் ஏற்பட்ட வறட்சி நீங்கவும் விவசாயம் செழிக்கவும் வேண்டி, இன்று காலை பெண்கள் பொங்கலிட்டு மழைக்கும்மி பாடல் பாடி வழிபாடு செய்தனர் .விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

    • தோரணமலையில் ஒடிசா ரெயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் பூரண குணம் பெற கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

    கடையம்:

    தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இந்த கோவிலில் உள்ள முருகனை அகத்தியர், தேரையர் உள்ளிட்ட சித்தர்களும், முனிவர்களும் வழிபட்ட பெருமையும் சிறப்பு உடையதாகும் . இந்த கோவிலில் மாதந்தோறும் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் வருவது வழக்கம். வைகாசி மாத பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம் வந்தனர். கிரிவலம் முடிந்த பின்னர் ஒடிசா ெரயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் பூரண குணம் பெறவும், விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைந்து மோட்சம் பெறவும், இது போன்ற விபத்துக்கள் நடைபெற கூடாது எனவும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. பிரார்த்தனையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

    • கடையம் வேல்முருகன் கராத்தே பள்ளி சார்பில் பல்வேறு பாரம்பரிய தற்காப்பு கலை சாகசங்கள் செய்யப்பட்டது.
    • நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இக்கோவில் அகஸ்தியர் தேரையர் போன்ற சித்தர்களால் வழிபடப்பட்ட பெருமை உடையதாகும்.

    இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் விளையாட்டை மறந்து செல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் நிலையில் 90-ம் ஆண்டுகளில் குழந்தைகள் விளையாடிய விளையாட்டுகளை மீண்டும் விளையாடும் வண்ணம் பம்பரம் விளையாடுதல், கோலி குண்டு விளையாடுதல், கிட்டிபுல் என்ற செல்லாங்குச்சி விளையாடு தல், பலூன் உடைத்தல், பூப்பறிக்க வரீங்களா என்ற பெண்கள் விளையாட்டு போன்ற பழைமையான மறந்து போன விளை யாட்டுகளை விளையாடினர். மேலும் தேன்மிட்டாய், குருவி ரொட்டி, ஆரஞ்சு வில்லை, கடலை மிட்டாய் போன்ற மறந்து போன பண்டங்களை குழந்தைகளின் விளை யாட்டின் இடைவெளியில் கொடுத்து கிட்டத்தட்ட 1990-ம் ஆண்டுகளில் நடந்த நிகழ்ச்சிகளை போன்றே தோரணமலை பக்தர் குழு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    மேலும் கடையம் வேல்முருகன் கராத்தே பள்ளி சார்பில் பல்வேறு பாரம்பரிய தற்காப்பு கலை சாகசங்கள் செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவி யர்களுக்கு சான்றிதழ் வழங் கப்பட்டது. சான்றிதழ்களை பராசக்தி கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியை கயற் கன்னி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை பால்த்தாய் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ்கள் வழங்கினர்.

    வந்திருந்த அனை வருக்கும் காலை முதல் மாலை வரை அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோரண மலை முருகன் கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

    • வல்லப கணபதிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
    • பக்தி கோஷம் எழுப்பியவாறு பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரண மலை முருகன் கோவில். இந்த கோவில் மலை மீது, குகையில் முருகன் அமைந்த தலம் ஆகும். அகத்தியர், தேரையர் போன்ற சித்தர்கள், முனி வர்களால் வழிபடப்பட்ட பெருமை உடைய கோவிலாகும். இன்று காலை சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு மலை மீது உள்ள முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

    பின்னர் மலை அடி வாரத்தில் அமைந்துள்ள வல்லப கணபதிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

    முதலில் விநாயகர் கோவிலிலை சுற்றி தரிசனம் செய்த பக்தர்கள் பின்னர் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ள கிரிவல பாதையை சுற்றி "முருகனுக்கு அரோகரா "என்ற பக்தி கோஷம் எழுப்பிய வாறு கிரிவலம் வந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் மலையை சுற்றி வந்த பக்தர்களுக்கு காலையில் அன்ன தானம் மற்றும் பிர சாதங்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பக ராமன் செய்திருந்தார்.

    • போட்டியில் 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் பரிசு வழங்கி பாராட்டினார்.

    கடையம்:

    தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை சி.ஜே.திருமண மண்டபத்தில், லட்சியம் அசோசியேசன் சார்பில், தென்தமிழக அளவிலான யோகா மற்றும் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.

    போட்டிகளுக்கு சி.ஜே.மருத்துவமனை மருத்து வர்கள் தர்மராஜ், அன்புமலர் தர்மராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். தட்சணமாற நாடார் சங்கத்தலைவர் ஆர்.கே. காளிதாசன், சென்னை குளோபல் லிமிடெட் செல்லத்துரைசிங், தோரணமலை முருகன் கோவில் பரம்பரை அறங்கா வலர் செண்பகராமன் முன்னிலை வகித்தனர். வி.கே.முத்தையா, சரஸ்வதி, வி.என்.ரெசவு முகைதீன், மாலிக் பேகம் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். லட்சியம் அசோசியேசன் தலைவர் பாலகணேசன் வரவேற்றார்.

    போட்டியில் 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் பரிசு வழங்கி பாராட்டினார். பாரதிதாசன் பல்கலைக்கழக இணை ஒருங்கிணைப்பாளர் வில்சன்அருளானந்தன், தேசிய சட்ட உரிமைகள் கழக மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆனந்தகுமார், மதுரை ஜீவன் மூர்த்தி, ராம நீராளன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    நடுவர்களாக ஜெயபிரதாப்சிங், கார்த்திகா பார்த்திபன், கனகராஜ், சுரேஷ், சரவணன், அனுஷீலா ஆகியோர் பணியாற்றினர்.

    இதில் கிருஷ்ணன், கயற்கண்ணி, கண்ணன், மோகன், ரவிக்குமார், பிரபு, நாராயணசிங்க், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் கவிதா பால கணேசன் நன்றி கூறினார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.

    • மலைக்கோவிலின் படிக்கட்டுகளில் இரு புறமும் சுமார் 1000 மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது.
    • வழக்கறிஞர் எஸ்.கே.டி.காமராஜ் கலந்து கொண்டு முதல் மரக்கன்றை நட்டு மரம் நடுவிழாவை தொடங்கி வைத்தார்.

    கடையம்:-

    கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோவில் அகத்தியர் தேரையர் போன்ற சித்தர்கள் வழிபட்ட பெருமையுடையது.

    இந்த முருகன் கோவில் மலை மீது அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் படிக்கட்டுகளில் நடந்து சென்று தான் மலை மீது உள்ள முருகன் கோவிலை அடைய முடியும். இந்த மலைக்கோவிலின் படிக்கட்டுகளில் இரு புறமும் சுமார் 1000 மரக்கன்றுகளை நட்டு மலை பாதையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு நிழல் ஏற்படுத்தி தருவது என தோரணமலை முருகன் கோவில் பக்தர்கள் குழு சார்பில் மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது.

    கீழப்பாவூர் முன்னாள் யூனியன் சேர்மன் வழக்கறிஞர் எஸ்.கே.டி.காமராஜ் கலந்து கொண்டு முதல் மரக்கன்றை நட்டு மரம் நடுவிழாவை தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மரம் நடுவிழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் கே.ஏ .செண்பகராமன் செய்திருந்தார்.


    • கடையம் அருகே அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவில். அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்களால் வழிபடப்பட்ட தலமாகும்.
    • மாணவர்கள் அறிவு வளர்ச்சி பெற வேண்டி மலையடிவாரத்தில் ஆன்மீகச் செம்மல் ஆதிநாராயணன் சந்திர லீலா நினைவு நூலகம் திறக்கப்பட்டது.

    கடையம்:

    கடையம் அருகே அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவில். அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்களால் வழிபடப்பட்ட தலமாகும். இன்று ஆவணி மாத கடைசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு வருண கலச பூஜை நடைபெற்றது. விவசாயம் செழிக்கவும், மழை பொழியவும், நாடு செழிப்பு பெற வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. மலை உச்சியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு மலை அடிவாரத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

    மேலும் தோரணமலை கோவில் நிர்வாகத்தால் ஆன்மிகப் பணி மட்டுமன்றி பல்வேறுஅறப்பணிகளும் செய்து வரப்படுகிறது.மாணவர்கள் அறிவு வளர்ச்சி பெற வேண்டி மலையடிவாரத்தில் ஆன்மீகச் செம்மல் ஆதிநாராயணன் சந்திர லீலா நினைவு நூலகம் திறக்கப்பட்டது.நூலகத்தினை மருத்துவர் தர்மராஜ் திறந்து வைத்தார்.நூலகத்தில் ஆன்மிகம், சித்தர்கள், மருத்துவம், பொது அறிவு புத்தகங்கள், மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டது. விழாவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

    • தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளதுதோரண மலை முருகன் கோவில். இந்த கோவில் அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்கள் வழிபட்ட பெருமையுடையது .
    • யானை வடிவில் அமைந்துள்ள மலைமீது முருகன் கோவில் அமைந்துள்ளது ஒரு சிறப்பாகும். மேலும் மலைமீது அமைந்துள்ள குகையில் அமைந்துள்ள முருகன் கோவிலாக இது சிறப்புற்று விளங்குகிறது.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளதுதோரண மலை முருகன் கோவில். இந்த கோவில் அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்கள் வழிபட்ட பெருமையுடையது .

    யானை வடிவில் அமைந்துள்ள மலைமீது முருகன் கோவில் அமைந்துள்ளது ஒரு சிறப்பாகும். மேலும் மலைமீது அமைந்துள்ள குகையில் அமைந்துள்ள முருகன் கோவிலாக இது சிறப்புற்று விளங்குகிறது.

    இந்த முருகன் கோவில் அமைந்துள்ள மலையை சுற்றிலும் பக்தர்கள் பவுர்ணமி தோறும் கிரிவலம் வருவது வழக்கமாக உள்ளது.

    ஆவணி மாத பவுர்ணமி அன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலையைச் சுற்றிலும் முருகனின் பக்தி பாடல்களை படித்த வாறும், முருகனின் சரண கோசங்களை எழுப்பிய வாறும் பக்தி பரவசத்தோடு சுமார் 6 கிலோமீட்டர் தூரம் சுற்றளவுள்ள தோரணமலையை கிரிவலம் வந்தனர்.

    கிரிவலம் வந்த பக்தர்கள் அனைவருக்கும் மலையடிவாரத்தில் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

    • தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள தோரணமலை முருகன் கோவிலில் அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்களால் வழிபடப்பட்ட சிறப்பு மிகுந்த தலமாகும்.
    • இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மலை அடிவாரத்திலுள்ள விநாயகருக்கு இன்று காலை சிறப்பு அபிஷேகங்கள், ராஜ அலங்காரம்செய்யப்பட்டு 1,008 கொழுக்கட்டை படையலிடப்பட்டது.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள தோரணமலை முருகன் கோவிலில் அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்களால் வழிபடப்பட்ட சிறப்பு மிகுந்த தலமாகும்.

    1,008 கொழுக்கட்டை படையல்

    இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மலை அடிவாரத்திலுள்ள விநாயகருக்கு இன்று காலை சிறப்பு அபிஷேகங்கள், ராஜ அலங்காரம்செய்யப்பட்டு 1,008 கொழுக்கட்டை படையலிடப்பட்டது.

    சிவனடியார்களின் 6 மணிநேரம் தொடர் பஜனையுடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    8, 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்காக திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. சோகோ மென்பொருள் கம்பெனியின் மென் பொறியாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை கூறினர்.

    தோரணமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நூலகத்தில் மாணவ-மாணவியர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வண்ணம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் பக்தர்களுக்கு காலை முதல் நாள் முழுவதும் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

    • பெருந்தலைவர் காமராஜர், அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு மற்றும் கணிப்பொறி பற்றி தெரிந்து கொள்ளும் விதமாக தோரணமலை கோவில் நிர்வாகம் சார்பாக புத்தகங்கள் வழங்கப்பட்டன.
    • பக்தர்களுக்கு காலை, மதியம் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

    கடையம்:

    அகத்தியர், தேரையர் சித்தர் வழிபட்ட தோரண மலை முருகன் கோவில் தென்காசி மாவட்டம் கடையம் அருகில் அமைந்துள்ளது.

    ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமை அதிகாலையில் பக்தர்கள் மலை மீதிருந்து சுனை நீரை கலசத்தில் எடுத்து வந்து அடிவாரத்தில் உற்சவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.இதனை அடுத்து விவசாயம் தழைக்க, விவசாயி செழிக்க வருண கலச பூஜையும் நடைபெற்று வருகிறது.

    இன்று அதிகாலை மலை அடிவாரம் மற்றும் மலை மீதுள்ள தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நாள் முழுதும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


    தற்போது இந்த கோவிலின் அடிவாரத்தில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை கொண்ட நூலகம் அமைய இருக்கிறது. அதை இப்பகுதி மாணவ மாணவிகள் பயன்படுத்தும் விதமாக புத்தகம் சேமிக்கும் பணிகள் நடக்கிறது.

    தோரணமலை அருகிலுள்ள மடத்தூர் மற்றும் சிவநாடானூர் கிராம பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது தலைமை ஆசிரியரோடு வருகை தந்தனர். அவர்கள் பயன்படுத்தும் விதமாக பெருந்தலைவர் காமராஜர், அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு மற்றும் கணிப்பொறி பற்றி தெரிந்து கொள்ளும் விதமாக தோரணமலை கோவில் நிர்வாகம் சார்பாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. பக்தர்களுக்கு காலை, மதியம் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது

    நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி மேலாளர் சேதுராமலிங்கம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் இன்பசேகரன், பாலன் தொழிலதிபர் கே.டி.ஆர். சுந்தர், பள்ளி நிர்வாகிகள் முருகன், சவந்திர பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பக ராமன் செய்திருந்தார்.

    மாணவர்களிடையே கைபேசி மற்றும் தொலைக்காட்சி பயன்படுத்தும் நேரம் அதிகமாகி, புத்தகம் படிக்கும் பழக்கம் குறைவதை தடுத்து, புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடந்தது.

    ×