search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Joint Prayer"

    • தோரணமலையில் ஒடிசா ரெயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் பூரண குணம் பெற கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

    கடையம்:

    தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இந்த கோவிலில் உள்ள முருகனை அகத்தியர், தேரையர் உள்ளிட்ட சித்தர்களும், முனிவர்களும் வழிபட்ட பெருமையும் சிறப்பு உடையதாகும் . இந்த கோவிலில் மாதந்தோறும் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் வருவது வழக்கம். வைகாசி மாத பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம் வந்தனர். கிரிவலம் முடிந்த பின்னர் ஒடிசா ெரயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் பூரண குணம் பெறவும், விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைந்து மோட்சம் பெறவும், இது போன்ற விபத்துக்கள் நடைபெற கூடாது எனவும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. பிரார்த்தனையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

    • உடன்குடி ஒன்றியம் ராமசுப்பிரமணியபுரத்தில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் உலக நன்மைக்காகவும் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
    • இந்து முன்னணி உடன்குடி ஒன்றிய பொதுச்செயலாளரும், இந்து அன்னையர் முன்னணியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான கேசவன் கலந்து கொண்டு பேசினார்.

    உடன்குடி:

    உடன்குடி ஒன்றியம் செம்மறிகுளம் ஊராட்சிக்குட்பட்ட ராமசுப்பிரமணியபுரத்தில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழவும், திருமண தடைகள் நீங்குவதற்காகவும், நல்ல மழை பொழிய வேண்டும் என்றும், பாரதநாடு செழிக்கவும், உலக நன்மைக்காகவும் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தலைவி சூரியகலா தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சிங்காரக்கனி, துணைத்தலை விமல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர்கள் தமிழ்ச்செல்வி அமுதசுரபி, பூஜா, பத்திரகாளி, லெட்சுமி சுயம்புகனி , ஒன்றிய செயலாளர் சித்ரா, மாவட்ட தலைவி சந்தனக்கனி, சத்யா ,நகர் தலைவி தங்க செல்வி, இந்து முன்னணி உடன்குடி ஒன்றிய பொதுச் செயலாளரும், இந்து அன்னையர் முன்னணியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான கேசவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.பாரதீய ஜனதா செந்தூர்பாண்டி மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.

    ×