கடையம் அருகே தோரணமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்

வல்லப கணபதிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பக்தி கோஷம் எழுப்பியவாறு பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
தோரணமலை கோவிலுக்கு நடந்து சென்றவர்களையும், நீண்ட வரிசையில் காத்துநின்ற பக்தர்களையும் படத்தில் காணலாம்.
தோரணமலை கோவிலுக்கு நடந்து சென்றவர்களையும், நீண்ட வரிசையில் காத்துநின்ற பக்தர்களையும் படத்தில் காணலாம்.
Published on

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரண மலை முருகன் கோவில். இந்த கோவில் மலை மீது, குகையில் முருகன் அமைந்த தலம் ஆகும். அகத்தியர், தேரையர் போன்ற சித்தர்கள், முனி வர்களால் வழிபடப்பட்ட பெருமை உடைய கோவிலாகும். இன்று காலை சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு மலை மீது உள்ள முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

பின்னர் மலை அடி வாரத்தில் அமைந்துள்ள வல்லப கணபதிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

முதலில் விநாயகர் கோவிலிலை சுற்றி தரிசனம் செய்த பக்தர்கள் பின்னர் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ள கிரிவல பாதையை சுற்றி "முருகனுக்கு அரோகரா "என்ற பக்தி கோஷம் எழுப்பிய வாறு கிரிவலம் வந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் மலையை சுற்றி வந்த பக்தர்களுக்கு காலையில் அன்ன தானம் மற்றும் பிர சாதங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பக ராமன் செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com