search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kadayam"

    • ஐந்தாம்கட்டளை ஊராட்சி சொக்கநாதன் பட்டியில் போதிய குடிநீர் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
    • இப்பகுதியில் போர் மூலம் ஏற்றப்படும் குடிநீர் தொட்டி மூலம் இப்பகுதிகளுக்கு சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்தால் பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை குறைய வாய்ப்புள்ளது.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றியம் ஐந்தாம்கட்டளை ஊராட்சி சொக்கநாதன் பட்டியில் போதிய குடிநீர் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இப்பகுதியில் உள்ள ஆற்று நீர் குடிநீர் தொட்டி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் மக்களின் பயன்பாட்டிற்கு போதுமானதாக இல்லை. எனவே இப்பகுதியில் போர் மூலம் ஏற்றப்படும் குடிநீர் தொட்டி மூலம் இப்பகுதிகளுக்கு சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்தால் பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை குறைய வாய்ப்புள்ளது. மேலும் சொக்கநாதன் பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளியில் கழிவறைகள் வசதிகள் உள்ளன . தற்போது தண்ணீர் பற்றாக்குறையினால், கழிவறைகளில் பயன்படுத்துவதற்கு கூட தண்ணீர் இல்லாமல் பள்ளி குழந்தைகளும் ஆசிரியர்களும் சிரமப்பட்டு வருகின்றனர் என இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இது குறித்து கடையம் வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலரிடம் அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து மனு அளித்தனர்.

    • விழாவில் ஊராட்சி தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தேசிய கொடி ஏற்றினார்.
    • கிராம சபை கூட்டத்தை தொடர்ந்து 77 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    கடையம்:

    கடையம் பெரும்பத்து ஊராட்சியில் சுதந்திர தினவிழாவில் ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செய்தார். இதைத்தொடர்ந்து கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பின்னர் 77 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் ஊராட்சி உறுப்பினர்கள், அதிகாரிகள், தொழிலதிபரும் தி.மு.க. நிர்வாகியுமான பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கீழக்கடையம் ஊராட்சியில் அதன் தலைவர் பூமிநாத் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.
    • தெற்கு மடத்தூர் ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவர் பிரேமராதா ஜெயம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் மரக்கன்றுகள் நட்டார்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. கோவிந்தபேரி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் டி.கே. பாண்டியன் தலைமை தாங்கி ஊராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை கலெக்டர் கவிதா பங்கேற்றார்.

    மேலும் ஊராட்சி இயக்குனர் தணிக்கை ருக்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) திருமலை, முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் ஊராட்சி செயலர் மூக்காண்டி, துணைத்தலைவர் இசேந்திரன், வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், மாரிதுரை, சிங்கக்குட்டி, வெள்ளத்துரை, ஊராட்சி பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    இதேபோல் கீழக்கடையம் ஊராட்சியில் அதன் தலைவர் பூமிநாத் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். தெற்கு மடத்தூர் ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவர் பிரேமராதா ஜெயம் தேசிய கொடியினை ஏற்றி வைத்து எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் மரக்கன்றுகள் நட்டார். இதில் துணைத் தலைவர் சிவக்குமார், கிராம நிர்வாக அதிகாரி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ரவணசமுத்திரம் ஊராட்சியில் முகமது உசேன், தெற்கு கடையம் ஊராட்சியில் முத்துலெட்சுமி, சேர்வைகாரன்பட்டி ஊராட்சியில் ரவிச்சந்திரன், ஏ.பி. நாடானூர் ஊராட்சியில் அழகுதுரை, பொட்டல்புதூர் ஊராட்சியில் கணேசன், துப்பாக்குடி ஊராட்சியில் செண்பகவல்லி ஜெகநாதன், பாப்பான்குளம் ஊராட்சியில் முருகன், கீழாம்பூர் ஊராட்சியில் மாரிசுப்பு, மேலாம்பூர் ஊராட்சியில் குயிலி லெட்சுமணன், திருமலையப்பபுரம் ஊராட்சியில் மாரியப்பன், மடத்தூர் ஊராட்சியில் முத்தமிழ் செல்வி ரஞ்சித் , அஞ்சாங்கட்டளை ஊராட்சியில் முப்புடாதி பெரியசாமி, மந்தியூர் ஊராட்சியில் கல்யாணசுந்தரம் தலைமையிலும் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் அரசு அதிகாரிகள், பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • முருகன் கோவில் மூலஸ்தானத்தை அடைய சுமார் 1193 அகன்ற படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது.
    • சிவந்திபுரம் திருவாசகம் முற்றோதுதல் குழுவினரின் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது.

    கடையம்:

    தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இக்கோவில் அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்களால், முனிவர்களால் வழிபடப்பட்ட பழமையும்- பெருமையும் உடையதாகும்.

    மலை மீது உள்ள முருகன் கோவில் மூலஸ்தானத்தை அடைய சுமார் 1193 அகன்ற படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு மூன்றாம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. மேலும் விவசாயம் செழிக்கவும் பருவமழை பொய்க்காது பெய்யவும் விவசாயம் செழித்து நாடுநலம் பெற வேண்டி மலை மீதுள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றது.

    மலை மீது இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு மலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவந்திபுரம் திருவாசகம் முற்றோதுதல் குழுவினரின் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது.

    விழாவில் மடத்தூர் பள்ளி மாணவர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், ஆதி நாராயணன்- சந்திரலீலா நினைவு நூலகத்தில் நடைபெற்றது. சிறப்பு இன்னிசைக் கச்சேரி மற்றும் காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அன்னதானத்தை எலும்பு முட்டு சிறப்பு மருத்துவர் தர்மராஜன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

    • கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்லும்போது தென்காசி பகுதிகளில் உள்ள போலீசார் அபராதம் என்ற பெயரில் அடிக்கடி வாகனங்களை மறித்து பண வசூலில் ஈடுபடுவதாக லாரி ஓட்டுனர்கள் புகார் தெரிவித்துள்ள னர்.
    • இதனை கண்டித்து லாரி ஓட்டுனர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் லாரிகளை நிறுத்தி ஒரு நாள் அடையாளம் போராட்டம் நடத்தினர்.

    கடையம்:

    கடையம் அருகே மாதா புரம் மற்றும் ஆசீர்வாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பிரதான தொழிலாக செங்கல் தயாரிக்கும் தொழில் நடை பெற்று வருகிறது.

    இந்த தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.இங்கு தயாரிக்கப்படும் செங்கல், எம் சாண்ட், ஜல்லி, ஹாலோ பிளாக் செங்கல் போன்றவை தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு லாரி மூலம் எடுத்துச் செல்லப்படு கிறது.

    அவ்வாறு கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்லும்போது தென்காசி பகுதிகளில் உள்ள போலீசார் அபராதம் என்ற பெயரில் அடிக்கடி வாகனங்களை மறித்து பண வசூலில் ஈடுபடுவதாக லாரி ஓட்டு னர்கள் புகார் தெரிவித்துள்ள னர். மேலும் ஓட்டுனர்களை போலீசார் அவதூறாக பேசுவதாகவும் அவர்கள் புகார் கூறி வருகின்றனர்.

    இதனை கண்டித்து நேற்று ஆசீர்வாதபுரம், மாதாபுரம் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் லாரி களை நிறுத்தி ஒரு நாள் அடையாளம் போராட்டம் நடத்தினர்.

    இங்கிருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு விதிமுறைகளை மீறி அதிகமான கனிம வளங்களை கொண்டு செல்லும் லாரிகளை போலீசார் கண்டு கொள்வதில்லை. குறைந்த வாடகையில் கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்லும் லாரி ஓட்டுனர்களை தொடர்ந்து வஞ்சிப்பது கண்டிக்கத்தக்கது என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    • கடந்த ஒரு வார காலமாக இந்த நெல் மூட்டைகள் மேல்புறம் தார்ப்பாயின்றி காணப்பட்ட நிலையில் உள்ளது.
    • இதனால் இப்பகுதியில் பெய்த மழையினால் நெல்மூட்டை கள் பல நனைந்து நாசமாகி உள்ளது.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட் பட்டது ஐந்தாங்கட்டளை கிராமம். ஆலங்குளம் தாலுகா விற்குட்பட்ட இக்கிராமத்தின் தென்புறமாக அமைந்துள்ள பரும்பு பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார பகுதியில் நெல்மூட்டைகளை வாங்கி இந்த கொள்முதல் நிலையத்தில் பணியாளர் மூலம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக இந்த நெல் மூட்டைகள் மேல்புறம் தார்ப்பாயின்றி காணப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் பெய்த மழையினால் நெல்மூட்டை கள் பல நனைந்து நாசமாகி உள்ளது. மேலும் பல நெல் மூட்டைகள் முளைத்த நிலையில் காணப்படுகின்றன.

    இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதிகாரிகளின் கண்டுகொள்ளாத நிலையால் பல நெல் மூட்டைகள் சேதமடைந்த நிலையில் உள்ளதால், உயர் அதிகாரிகள் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டு என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள னர்.

    • சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி. ராமசுப்பு கலந்து கொண்டு பேசினார்.
    • பட்டா நிலத்தில் காமராஜருக்கு முழு உருவச் சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

    கடையம்:

    கடையம் கோமதிநாயகம் வளாகத்தில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சோனியாகாந்தி பேரவை செயலாளர் டி.கே. பாண்டியன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் அழகுதுரை, முருகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் ஆதிமூலம் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி. ராமசுப்பு கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் கடையம் பகுதியில் வாங்கப்பட்ட பட்டா நிலத்தில் காமராஜருக்கு முழு உருவச் சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ராமநதி, கடனாநதி பாசன நீர்மடை, கால்வாய்களை விவசாயிகளின் நலன்கருதி விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடையம் - ராமநதி செல்லும் சாலையை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடையத்திற்கு புதிய தாலுகா அந்தஸ்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    இதில் ஐ.என்.டி.யு..சி. மாநில செயலாளர் மாரிகணேசன் மற்றும் மும்பை ராமையா, மகளிர் அணியினர் சீதாலட்சுமி, கே.டி.ஆர். சுகந்தா, வட்டாரத் துணைத் தலைவர் ராமச்சந்திர பாண்டியன், அந்தோணி, சாஸ்தா மாரிதுரைசிவா, பேச்சி அருண்குமார், காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கடையம் அருகே உள்ள புங்கம்பட்டி மற்றும் ஐந்தாங்கட்டளை சிவகாமி புரத்தில் அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
    • முகாமிற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் அருள் வேல்ராஜ் தலைமை தாங்கினார்.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள புங்கம்பட்டி மற்றும் ஐந்தாங்கட்டளை சிவகாமி புரத்தில் அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் அருள் வேல்ராஜ் தலைமை தாங்கி னார்.தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் இருளப்பன், கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், மாவட்ட மாணவரணி பொருளாளர் சேர்மப்பாண்டி, தகவல் தொழில்நுட்ப பிரிவு தர்மா, மாரியப்பன், கடையம் ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர் ஜனதா காமராஜ், திப்பணம்பட்டி ராமசாமி, மேட்டூர் செல்வராஜ், காவூர் கிளைச் செயலாளர் மாரியப்பன், புங்கம்பட்டி கிளை செயலாளர் மாடசாமி , சங்கரலிங்கபுரம் நடராஜன், ராம நாதபுரம் கிளைச் செயலாளர் சரவணன், தெற்கு மடத்தூர் கிளை செயலாளர் பேச்சி முத்து, ஐந்தாங்கட்டளை சிவகாமிபுரம் கிளைச் செய லாளர் பந்தா முருகேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பால சுப்பிரமணியன் மற்றும் கருவேலம், வண்டிகாரன் செல்வராஜ், அப்பா குட்டி, செல்வராஜ் , சமுத்திரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    முன்னாள் முதல் -அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி கடையம் செல்லப்பிள்ளையார்குளத்தில், தி.மு.க. சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
    கடையம்:

     கடையம் அருகேயுள்ள செல்லப்பிள்ளை யார்குளத்தில், தி.மு.க. சார்பில் முன்னாள் முதல் -அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் நிர்வாகி பழக்கடை நாகராஜன் கட்சி கொடியினை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார். 

    இதில் வக்கீல் மயிலவன், ராஜபூபதி, சாத்தா, ஆறுமுகம், அருணாசலம் என்ற நாகேஷ், சங்கர், முருகன், ரவி, இசக்கி பாண்டி, கடல் மணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    கடையம் அருகே உள்ள கோவிந்தபேரியில் யோகா பயிற்சி நடைபெற்றது.
    கடையம்:
     
    கடையம் அருகே உள்ள கோவிந்தபேரி சமுதாய நலக் கூடத்தில்  வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷி யோகா பயிற்சி கடந்த 60 நாட்காக நடைபெற்று வருகின்றது . 

    சிறப்பு பயிற்சியில் ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் மற்றும் மண்டல தலைவர் அண்ணாமலையார், பேராசிரியர் பழனி, விஜி ஆகியோர் கலந்து கொண்டனர் . 

    யோகா பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். பயிற்சி இறுதியில் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
    கடையம் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ‘திடீர்’ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
    கடையம்:

    அம்பை அருகே உள்ள அனந்தநாடார்பட்டி, பெரியசாமி பட்டி, இடை கால், பனையன்குறிச்சி, கடையம் அருகே உள்ள நாலாங்கட்டளை பகுதி களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இன்று காலை நாலாங்கட்டளையில் உள்ள கல்குவாரி முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

    கடையம் ஒன்றிய ச.ம.க. செயலாளர் பெரியசாமி, ஐந்தாங்கட்டளை பஞ்சாயத்து துணைத்தலைவர் சுதன் உள்பட 8-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    கல்குவாரிகளில் வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்படுவதால் சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு கற்கள் தூக்கி வீசப்படுகிறது. இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்படு கிறார்கள்.

    மேலும் குவாரி பகுதியில் ஏராளமான விவசாய நிலம் உள்ளதால் விவசாயிகளும் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என கூறினர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாப்பாக்குடி போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 
    கடையம் அருகே ஊருக்குள் புகுந்த வன உயிரினங்களை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
    கடையம்:

    கடையம் அருகே உள்ள முதலியார் பட்டி லதா என்பவர் வீட்டிற்குள் அரிய வகை உயிரினமான உடும்பு குட்டி ஒன்று பதுங்கியிருப்பதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வனப் பணியாளர்கள் அங்கு சென்று உடும்பை மீட்டு ஆம்பூர் பீட் வனப்பகுதிக்குள் விட்டனர். நடவடிக்கை எடுத்த கடையம் வனத்துறையினரை பொதுமக்களும் வன ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டினர்.

    கடையம் வனச்சரகத்தில் உட்பட்ட மாதாபுரம் கிராமத்தில் விநாயகர் கோவிலில் மூன்று அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாக கடையம் வனச்சரக அலுவலர் பொறுப்பு உதவி வனப்பாதுகாவலர் ராதைக்கு கிடைத்தது. இதையடுத்து வனப் பணியாளர்ள் சம்பவ இடத்திற்கு சென்று நல்ல பாம்பை மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.
    ×