கடையம் பகுதியில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்

கடையம் அருகே உள்ள புங்கம்பட்டி மற்றும் ஐந்தாங்கட்டளை சிவகாமி புரத்தில் அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் அருள் வேல்ராஜ் தலைமை தாங்கினார்.
 உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தபோது எடுத்த படம்.
 உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தபோது எடுத்த படம்.
Published on

கடையம்:

கடையம் அருகே உள்ள புங்கம்பட்டி மற்றும் ஐந்தாங்கட்டளை சிவகாமி புரத்தில் அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் அருள் வேல்ராஜ் தலைமை தாங்கி னார்.தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் இருளப்பன், கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், மாவட்ட மாணவரணி பொருளாளர் சேர்மப்பாண்டி, தகவல் தொழில்நுட்ப பிரிவு தர்மா, மாரியப்பன், கடையம் ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர் ஜனதா காமராஜ், திப்பணம்பட்டி ராமசாமி, மேட்டூர் செல்வராஜ், காவூர் கிளைச் செயலாளர் மாரியப்பன், புங்கம்பட்டி கிளை செயலாளர் மாடசாமி , சங்கரலிங்கபுரம் நடராஜன், ராம நாதபுரம் கிளைச் செயலாளர் சரவணன், தெற்கு மடத்தூர் கிளை செயலாளர் பேச்சி முத்து, ஐந்தாங்கட்டளை சிவகாமிபுரம் கிளைச் செய லாளர் பந்தா முருகேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பால சுப்பிரமணியன் மற்றும் கருவேலம், வண்டிகாரன் செல்வராஜ், அப்பா குட்டி, செல்வராஜ் , சமுத்திரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com