search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையம் அருகே போலீசாரை கண்டித்து லாரிகள் வேலை நிறுத்தம்
    X

    கடையத்தில் லாரிகள் நிறுத்தப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

    கடையம் அருகே போலீசாரை கண்டித்து லாரிகள் வேலை நிறுத்தம்

    • கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்லும்போது தென்காசி பகுதிகளில் உள்ள போலீசார் அபராதம் என்ற பெயரில் அடிக்கடி வாகனங்களை மறித்து பண வசூலில் ஈடுபடுவதாக லாரி ஓட்டுனர்கள் புகார் தெரிவித்துள்ள னர்.
    • இதனை கண்டித்து லாரி ஓட்டுனர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் லாரிகளை நிறுத்தி ஒரு நாள் அடையாளம் போராட்டம் நடத்தினர்.

    கடையம்:

    கடையம் அருகே மாதா புரம் மற்றும் ஆசீர்வாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பிரதான தொழிலாக செங்கல் தயாரிக்கும் தொழில் நடை பெற்று வருகிறது.

    இந்த தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.இங்கு தயாரிக்கப்படும் செங்கல், எம் சாண்ட், ஜல்லி, ஹாலோ பிளாக் செங்கல் போன்றவை தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு லாரி மூலம் எடுத்துச் செல்லப்படு கிறது.

    அவ்வாறு கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்லும்போது தென்காசி பகுதிகளில் உள்ள போலீசார் அபராதம் என்ற பெயரில் அடிக்கடி வாகனங்களை மறித்து பண வசூலில் ஈடுபடுவதாக லாரி ஓட்டு னர்கள் புகார் தெரிவித்துள்ள னர். மேலும் ஓட்டுனர்களை போலீசார் அவதூறாக பேசுவதாகவும் அவர்கள் புகார் கூறி வருகின்றனர்.

    இதனை கண்டித்து நேற்று ஆசீர்வாதபுரம், மாதாபுரம் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் லாரி களை நிறுத்தி ஒரு நாள் அடையாளம் போராட்டம் நடத்தினர்.

    இங்கிருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு விதிமுறைகளை மீறி அதிகமான கனிம வளங்களை கொண்டு செல்லும் லாரிகளை போலீசார் கண்டு கொள்வதில்லை. குறைந்த வாடகையில் கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்லும் லாரி ஓட்டுனர்களை தொடர்ந்து வஞ்சிப்பது கண்டிக்கத்தக்கது என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×