search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையம் பகுதியில் சுதந்திர தினவிழா
    X

    கோவிந்தபேரி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட துணை கலெக்டர் கவிதா பேசியபோது எடுத்த படம்.

    கடையம் பகுதியில் சுதந்திர தினவிழா

    • கீழக்கடையம் ஊராட்சியில் அதன் தலைவர் பூமிநாத் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.
    • தெற்கு மடத்தூர் ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவர் பிரேமராதா ஜெயம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் மரக்கன்றுகள் நட்டார்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. கோவிந்தபேரி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் டி.கே. பாண்டியன் தலைமை தாங்கி ஊராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை கலெக்டர் கவிதா பங்கேற்றார்.

    மேலும் ஊராட்சி இயக்குனர் தணிக்கை ருக்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) திருமலை, முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் ஊராட்சி செயலர் மூக்காண்டி, துணைத்தலைவர் இசேந்திரன், வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், மாரிதுரை, சிங்கக்குட்டி, வெள்ளத்துரை, ஊராட்சி பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    இதேபோல் கீழக்கடையம் ஊராட்சியில் அதன் தலைவர் பூமிநாத் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். தெற்கு மடத்தூர் ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவர் பிரேமராதா ஜெயம் தேசிய கொடியினை ஏற்றி வைத்து எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் மரக்கன்றுகள் நட்டார். இதில் துணைத் தலைவர் சிவக்குமார், கிராம நிர்வாக அதிகாரி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ரவணசமுத்திரம் ஊராட்சியில் முகமது உசேன், தெற்கு கடையம் ஊராட்சியில் முத்துலெட்சுமி, சேர்வைகாரன்பட்டி ஊராட்சியில் ரவிச்சந்திரன், ஏ.பி. நாடானூர் ஊராட்சியில் அழகுதுரை, பொட்டல்புதூர் ஊராட்சியில் கணேசன், துப்பாக்குடி ஊராட்சியில் செண்பகவல்லி ஜெகநாதன், பாப்பான்குளம் ஊராட்சியில் முருகன், கீழாம்பூர் ஊராட்சியில் மாரிசுப்பு, மேலாம்பூர் ஊராட்சியில் குயிலி லெட்சுமணன், திருமலையப்பபுரம் ஊராட்சியில் மாரியப்பன், மடத்தூர் ஊராட்சியில் முத்தமிழ் செல்வி ரஞ்சித் , அஞ்சாங்கட்டளை ஊராட்சியில் முப்புடாதி பெரியசாமி, மந்தியூர் ஊராட்சியில் கல்யாணசுந்தரம் தலைமையிலும் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் அரசு அதிகாரிகள், பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×