search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "illicit liquor"

    • புதுச்சேரி வில்லியனூர் ஆரியபாளையத்தில் அரசு சாராய வடிசால் ஆலை உள்ளது.
    • வியாபார போட்டியால் சாராயத்தில் எத்தனால், போதை மாத்திரைகள் கலக்கப்படுகிறது.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ள சாராயம் குடித்த 13 பேரும், செங்கல்பட்டு அருகே தெருக்கரணையில் 5 பேரும் என 18 பேர் இறந்தனர்.

    கள்ளசாராயம் குடித்து 18 பேர் மரணம் அடைந்துள்ளது தமிழகத்தையே உலுக்கியுள்ளது. புதுவையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட சாராயத்தின் மூலமே இந்த மரணம் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

    புதுவையில் அரசே கள், சாராய கடைகளை பொது ஏலத்தில் நடத்துகிறது. கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலத்தில் இருந்து அரசு சான்றிதழுடன் எரிசாராயம் லாரிகளில் கொண்டு வரப்பட்டு புதுவை ஆரியப்பாளையத்தில் உள்ள சாராய ஆலையில் தரம் பரிசோதிக்கப்பட்டு அதில் தண்ணீர் சேர்க்கப்படுகிறது.

    பாட்டில்களில் நிரப்பப்படும் சாராயம் மூடியிட்டு அரசு முத்திரையிட்டு 180 மில்லி, 750 மில்லி மற்றும் 50 லிட்டர் என வியாபாரிகளுக்கு சாராயம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த சாராயத்தை கிஸ்தி வியாபாரிகள் புதுவையில் உள்ள சாராயக் கடைகளில் விற்பனை செய்கின்றனர்.

    புதுவை அரசு சாராயத்தை குடிக்க அண்டை மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டை சேர்ந்தவர்கள் புதுவை எல்லை பகுதி சாராய கடைகளுக்கு வந்து செல்வது வாடிக்கையாகும். வாடிக்கையாளர்களை கவர புதுவை சாராய கடை உரிமையாளர்கள் இலவச வாகன வசதி முதல் பல வசதிகளை செய்கின்றனர்.

    ஆட்டோக்கள் இலவசமாக இயக்கப்படுகிறது. கடலூர் ஆற்றில் தண்ணீர் அதிகம் வந்தால் சாராயக் கடைக்கு செல்பவர்களுக்கு இலவச படகு சவாரியும் உண்டு. தமிழக சாராயப் பிரியர்களை ஈர்க்கும் வகையில் புதுவை சாராயக் கடை உரிமையாளர்கள் பல்வேறு டெக்னிக்கான வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர்.

    இங்கு வந்து செல்ல முடியாத குடிமகன்களுக்காக சாராயம் கடத்தப்படுகிறது. புதுவை சாராய வியாபாரிகளிடம் சாராயத்தை வாங்கும் வியாபாரிகள் மாநில எல்லைகளில் மதுவிலக்கு சோதனை நடத்தும் போலீசாரின் கண்களில் மண்ணை தூவி கடத்துகின்றனர்.

    இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட சாராயத்தில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால், போதை மாத்திரைகளை அதிகளவில் கலந்து தண்ணீர் சேர்த்து விற்கின்றனர். இப்படி ஒரு சிலரின் சுய லாபத்துக்காக அதிக மெத்தனால் கலக்கப்பட்ட சாராயம்தான் 18 பேரின் உயிரை குடித்துள்ளது.

    50 லிட்டர் கேன்களில் புதுவை அரசு வழங்கும் சாராயத்தை 100, 200, 250 மில்லி என பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்கின்றனர்.

    திருமணம், மஞ்சள் நீராட்டு, சாவு உள்ளிட்டவற்றுக்கு அண்டை மாநிலமான தமிழகத்தில் இருந்து மொத்தமாக சாராயம் பெறுவது வாடிக்கையாகும். இதுபோன்ற வாடிக்கையாளர்களிடம் அவர்கள் கேட்கும் அளவில் சாராயத்தை 5 லிட்டர், 10 லிட்டர் என கொடுப்பது வழக்கம்.

    இதனால் சாராயத்தை மொத்தமாக வாங்குவோர் பற்றிய விபரங்களை சேகரிப்பதில்லை. அதே நேரத்தில் தமிழக பகுதியில் சாராயம் விற்பனை இல்லாததால் தமிழக வியாபாரிகள் சாராயத்தை மொத்தமாக வாங்குவது இதுவரை வாடிக்கையாகவே இருந்துள்ளது.

    இதனால் தமிழக சாராய வியாபாரிகள் காய்கறி, பழம், மீன் கொண்டு செல்லும் மினி வேன்களில் அண்டை தமிழக மாவட்டங்களுக்கு கடத்துகின்றனர்.

    புதுவை மாநில எல்லைகளான கன்னிக்கோவில், கனகசெட்டிகுளம், மதகடிப்பட்டு, திருக்கனூர் பகுதிகளில் அதிக சாராயக்கடைகள் உள்ளது. தமிழகமும் புதுவையும் நில பரப்பில் பின்னி பிணைந்து உள்ளன. இதனால் கடத்தலை தடுக்க முடியாமல் போலீசார் விழிபிதுங்கி உள்ளனர்.

    புதுச்சேரி வில்லியனூர் ஆரியபாளையத்தில் அரசு சாராய வடிசால் ஆலை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் சாராயம் புதுச்சேரியில் 24 மணி நேரமும் இயங்கும் சாராயக்கடைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. மேலும் இங்கிருந்து புதுவை பிராந்திய பகுதியான காரைக்காலுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த இடைவெளியை பயன்படுத்தி சாராய மாபியாக்கள் புதுச்சேரியில் இருந்து சாராய பேரல்களை கைமாற்றுகிறார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    புதுச்சேரி தமிழக எல்லையில் உள்ள சாராயக்கடைகளுக்கு பேரல்களில் செல்லும் சாராயங்கள் பல ஆயிரம் லிட்டர் கணக்கில் தமிழகத்திற்கு கடத்தப்படுகிறது. புதுச்சேரி சாராயத்துடன் ஒருவகையான வேதிப்பொருளை கலந்து அதிக லிட்டர் சாராயம் தயாரித்து சாராயம் மாஃபியாக்கள் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றனர்.

    வியாபார போட்டியால் சாராயத்தில் எத்தனால், போதை மாத்திரைகள் கலக்கப்படுகிறது. இது அளவு மீறும்போது விஷ சாராயமாக மாறுகிறது. இதனாலேயே உயிர் இழப்பும் ஏற்படுகிறது. மரக்காணம் சம்பவத்தை தொடர்ந்து புதுவை கலால் துறையினர் எல்லைகளில் உள்ள சாராயக்கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர். மொத்தமாக சாராயம் விற்கக்கூடாது என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • மலையோர கிராமங்களில் ஏற்கனவே கள்ளச்சாராய விற்பனை தொடர்பான வழக்குகள் உள்ளது.
    • கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

    நாகர்கோவில்:

    விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயத்திற்கு பலியானவர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் போலீசார் இறங்கியுள்ளனர். குமரி மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் விற்பனை எதுவும் நடைபெறுகிறதா என்பது குறித்து போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து நாகர்கோவில், தக்கலை மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக மலையோர கிராமங்களில் ஏற்கனவே கள்ளச்சாராய விற்பனை தொடர்பான வழக்குகள் உள்ளது. அந்த பகுதிகளில் போலீசார் மீண்டும் சோதனை மேற்கொண்டனர். ஆனால் கள்ளச்சாராயம் எதுவும் சிக்கவில்லை.

    கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பான தகவல் தெரிந்தால் பொதுமக்கள் 70103 63173 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

    • குமரேசன் நேற்று வாந்தி மற்றும் வாயில் நுரை தள்ளியபடி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    • போலீசார் குமரேசன் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த ஆசனம்பட்டு பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 46). இவர் கட்டிட கூலி வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி செந்தாமரை(45). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். குமரேசனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

    இந்நிலையில் குமரேசன் நேற்று மாலை அதே பகுதியில் வரும்போது கீழே விழுந்து வாந்தி மற்றும் வாயில் நுரை தள்ளியபடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து செந்தாமரை வேப்பங்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். தனது கணவர் கள்ளச்சாராயம் குடித்து இறந்ததாக கண்ணீர் மல்க கூறினார்.

    சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    போலீசார் குமரேசன் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் பழனிமுத்து விசாரணை நடத்தி வருகிறார்.

    எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறோம். குமரேசன் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.

    இதற்கிடையில், டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கள்ளச்சாராய வியாபாரிகளான அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு, விழுப்புரம் மாவட்டமும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததில் இன்று அதிகாலை வரையில் 13 பேர் உயிரிழந்தனர். 38-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி, புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது தொடர்பாக கள்ளச்சாராய வியாபாரிகளான அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், மதுவிலக்கு பிரிவு உதவி போலீஸ் சூப்பிரண்டு, மரக்காணம் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், கோட்டக்குப்பம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் ஏட்டுகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    பலி எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருந்ததால், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று மதியம் நேரில் வந்தார். அங்கு சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், காலியாக உள்ள விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக ஜியாவுல் ஹக் நியமிக்கப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு, விழுப்புரம் மாவட்டமும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மரக்காணம் வந்தார். அங்கு கள்ளச்சாராய வழக்கு குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார்.

    இந்த வழக்கு தொடர்பாக மரக்காணம், அனுமந்தை, நடுக்குப்பம், ஆலந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 10 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் அளித்த தகவலின்படி, மெத்தனால் விற்பனை செய்த புதுவை முத்தியால் பேட்டையை சேர்ந்த ஏழுமலை, பர்கத் ஆகிய 2 பேரை மரக்காணம் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு மெத்தனால் எங்கிருந்து கிடைத்தது. அதனை யார்? யாரிடம் விற்றனர்? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்து வருகிறது. மேலும், இதில் அரசியல் கட்சியினர் யாருக்கேணும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மரக்காணம் கள்ளச்சாராய வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கும் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    மரக்காணம் எக்கியார் குப்பத்தில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டுள்ளனர். அவர்கள் அக்கிராம மக்களுக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், எக்கியார் குப்பத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவுதால் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே உக்கடம் பகுதியில் கடத்தூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
    • பழைய சாராய வியாபாரிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    ஈரோடு:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், மீனவ கிராமம், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் சாராயம் விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும்படி தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின்பேரில் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் மாவட்டம் முழுவதும் சாராயம் விற்பனை நடைபெறுகிறதா? என்பதை தீவிரமாக கண்காணித்தனர். ஈரோடு, கோபி, பெருந்துறை, பவானி, சத்தியமங்கலம் ஆகிய 5 சப்-டிவிஷனில் அந்தந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக வனப்பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    மாவட்டத்தில் ஏற்கனவே சாராய விற்பனை சந்தேக பகுதிகளான வரபாளையம், ராயர்பாளையம் பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது நம்பியூர் அருகே ராயர்பாளையம் பகுதியில் நாட்டு சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ராயர்பாளையம் பகுதியில் உள்ள கந்தசாமி (33) என்பவர் வீட்டில் வரபாளையம் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் அவரது வீட்டில் இருந்து 5 லிட்டர் விஷ வாடையுடன் கூடிய நாட்டு சாராயம் மற்றும் சாராயம் தயார் செய்ய வைத்திருந்த 40 லிட்டர் ஊறல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போலீசார் வருவதை தெரிந்து கொண்டு கந்தசாமி வீட்டிலிருந்து தப்பிவிட்டார். வீட்டில் இருந்த அவரது மனைவி ரஞ்சிதாவை (27) போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தப்பி ஓடிய கந்தசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதேபோல் கோபிசெட்டிபாளையம் அருகே உக்கடம் பகுதியில் கடத்தூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்ததில் அவரிடம் இருந்து 5 லிட்டர் பிடிக்கக்கூடிய 2 பிளாஸ்டிக் கேன்களில் 10 லிட்டர் சாராயம் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

    விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த செல்வம் (40) என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் செல்வத்தை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    இதைபோல் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் சாராயம் விற்றதாக 6 பேரை கைது செய்து உள்ளனர். அவர்களிடமிருந்து 70 லிட்டர் சாராய ஊறல் மற்றும் விற்பனைக்கு வைத்திருந்த 5 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மதுவிலக்கு போலீசார் ஏற்கனவே சாராய விற்பனை சந்தேகப்பகுதிகளான வரபாளையம், ராயர்பாளையம் பகுதிகளில் சோதனை நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் சம்பவத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் சாராயம் விற்பனை செய்யப்படுகிறதா? சாராய ஊறல் உள்ளதா? கடத்தப்படுகிறதா? என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    பழைய சாராய வியாபாரிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் தற்போதைய தொழில் வேலை குறித்தும் விசாரித்து வருகிறோம். முன்பு கடம்பூர், சத்தியமங்கலம், தாளவாடி பகுதியில் சாராயம் விற்பனை நடைபெற்றது. தற்போது மலைப்பகுதிகளில் சாராயம் காய்ச்சுதல் குறைந்துள்ளது. சாராயம் குறித்து பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விழுப்புரம் மாவட்டம் முழுவதும் சாராய விற்பனையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
    • மரக்காணம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 20-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். இன்று பகல் 11 மணிவரை 9 பேர் பலியானதாக தெரிகிறது. மேலும், 10-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது தொடர்பாக சாராய வியாபாரி அமரன் கைது செய்யப்பட்டார். தலைமறைவாகியுள்ள 4 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் சாராய விற்பனையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    மேலும், விழுப்புரம் டி.ஐ.ஜி. பகலவன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மரக்காணத்தில் முகாமிட்டு இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் புதுவை மாநிலம் லிங்காரெட்டிபாளையம், காலாப்பட்டு, சந்தை புதுக்குப்பம் போன்ற பகுதிகளில் இயங்கும் சில கம்பெனிகளில் இருந்து மெத்தனாலை வாங்கி மரக்காணம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதனை அடுத்து 10 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளையும், சாராய வியாபாரிகளுக்கு எங்கிருந்து மெத்தனால் கிடைக்கிறது என்பன குறித்து விசாரித்து வருகின்றனர்.

    மரக்காணம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எக்கியார் குப்பத்தில் சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதால் அக்கிராமமே சோகத்தில் முழ்கியுள்ளது.

    • விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 15 பேர் பலியானார்கள்.
    • சாராய வியாபாரிகளை பிடிக்க 10 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 15 பேர் பலியானார்கள். நேற்று 3 பேர் பலியாகி இருந்த நிலையில் கள்ளச்சாராய வியாபாரி அமரன் கைது செய்யப்பட்டார். மற்ற சாராய வியாபாரிகளை பிடிக்க 10 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது ஆறுமுகம், முத்து, ரவி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் 202 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • 5901 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல், 1106 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    விழுப்புரம், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் 247 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு 81 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் 202 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    121 பேர் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 5901 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல், 1106 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் அதிரடி சோதனை தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கள்ளச்சாராயம் விற்றதாக கரியன் தாங்கல் பகுதியை சேர்ந்த அமாவாசை என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கள்ளச்சாராயம் விற்றதாக கரியன் தாங்கல் பகுதியை சேர்ந்த அமாவாசை என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    மேலும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த், சித்தாமூர் சப்-இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரம், மதுராந்தகம் மதுவிலக்கு அமல்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகிய 3 பேரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கள்ளச்சாராய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் விழுப்புரம் செல்கிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் பொன்முடி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தை சேர்ந்த 6 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர்.
    • தமிழகத்தில் குட்கா, கஞ்சா, கள்ளச்சாராயம் போன்ற போதை பொருட்கள் விற்பனை அதிகரித்தது கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தான்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தை சேர்ந்த 6 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர். மேலும் 28 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று மதியம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தனர். மேலும், அங்கிருந்த டாக்டர்களிடம் உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினர்.

    பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் குட்கா, கஞ்சா, கள்ளச்சாராயம் போன்ற போதை பொருட்கள் விற்பனை அதிகரித்தது கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தான். அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்தி விற்கவைத்ததே அவர்கள்தான்.

    கடந்த 2 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுப்பது தொடர்பாக சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக காவல்துறைக்கு அவர் அடிக்கடி ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். மேலும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறையில் தனி ஆணையத்தையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி உள்ளார். அதனால் தான் குறைந்துள்ளது.

    தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதை நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை. கடந்த காலத்தில் ஜெயலலிதா ஆட்சியில் தான் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுவை அரசே விற்பனை செய்யும் என அறிவித்தார். அரசின் வருமானத்திற்காக டாஸ்மாக் மூலம் மது விற்பனையை கொண்டு வந்தார். அதற்கு சட்டமன்றத்தில் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். தற்போது வேண்டுமென்றே அரசின் மீது குறை, பழி சொல்லவேண்டும் என ஒருவர் பேசியுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் கள்ளச்சாராயத்தால் சுமார் 100 பேர் பலியாகிய நிலையில், இதுகுறித்து விசாரிக்க உத்தரபிரதேச அரசு சார்பில் 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. #HoochTragedy
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் மாவட்டம், பாலுப்பூர் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது. கடந்த 8-ம் தேதி நள்ளிரவு இம்மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்த பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

    இதில் 12 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது. பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த பலரும் அடுத்தடுத்து உயிரிழக்க, தற்போது பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.



    இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை உத்தரபிரதேச அரசு அமைத்துள்ளது. இந்த குழு விரைவில் தனது விசாரணையை தொடங்கவுள்ளது.

    முன்னதாக இந்த கோர சம்பவத்துக்கு உத்தரபிரதேசம் (கிழக்கு) மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இரங்கலும், கண்டனமும் தெரிவித்துள்ளார். சுமார் 100 உயிர்களை பறித்த இந்த சம்பவத்துக்கு உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆட்சி நடத்திவரும் பா.ஜ.க. அரசுகள் பொறுப்பேற்க வேண்டும என்றும் அவர் கூறினார். #Uttarakhand #UttarPradesh #hoochtragedy 

    ராஜபாளையம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவரை போலீசார் கைது செய்தனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதியில் கள்ளச்சாராயம் தயாரித்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின்பேரில் ராஜபாளையம் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் ஆலோசனைப்படி சேத்தூர் புறக்காவல் போலீசார் மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் மலைப்பகுதியில் உள்ள சின்னப்புல்பட்டி பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இயைடுத்து போலீசார் கள்ளச்சாராயம் காய்ச்சிய கிருஷ்ணன்கோவில் கணபதிசுந்தரநாச்சியார் புரத்தைச் சேர்ந்த பொன் இருளப்பன் (வயது30) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×