search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரிகள் கைது"

    • சாராய வியாபாரிகளான அமரன், ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி,முத்து, குணசீலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    • மரக்காணம் கள்ளச்சாராய வழக்கில் இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில கடந்த 13-ந் தேதி கள்ளச்சாராயம் குடித்த 60 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டனர்.

    இதில் சிகிச்சை பலனின்றி ஒரு பெண் உள்பட 13 பேர் பலியானார்கள்.12 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும். ஒரு பெண் உள்பட 35 பேர் பொது மருத்துவ பிரிவிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இதில் எக்கியார் குப்பத்தை சேர்ந்த செந்தமிழ் (35), ராமலிங்கம் (55), கோவிந்தன் (39), தென்னரசன் (33), ரமேஷ் (31), வேல் முருகன் (51), மற்றொரு ரமேஷ் (52), ஆகிய 7 பேர் பூரண குணமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அவர்கள் வேன் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விழுப்புரம் ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன், தனி தாசில்தார் ஜோதிவேல், மருத்துவக்கல்லூரி டீன் கீதாஞ்சலி, உண்டு உறைவிட மருத்துவர் ரவக்குமார் மற்றும் டாக்டர்கள் குழுவினர் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி அனுப்பி வைத்தனர்.

    எக்கியார் குப்பம் கள்ளச்சாராய விற்பனை வழக்கில் சாராய வியாபாரிகளான அமரன், ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி,முத்து, குணசீலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    சாராயம் தயாரிக்க மெத்தனால் சப்ளை செய்ததாக புதுச்சேரியை சேர்ந்த பர்கத்துல்லா என்ற ராஜா, ஏழுமலை, சென்னை ரசாயன ஆலை உரிமையாளர் இளைய நம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் மெத்தனால் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த வேலூர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ராபர்ட் என்கிற பிரேம் குமார் (54), வானூர் அடுத்த பெரம்பை நடுப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபு என்கிற வெங்கடாஜலபதி (40) ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் 2 பேரும் திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் மூலம் மரக்காணம் கள்ளச்சாராய வழக்கில் இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு, விழுப்புரம் மாவட்டமும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
    • போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மரக்காணம் வந்தார். அங்கு கள்ளச்சாராய வழக்கு குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார்.

    சேதராப்பட்டு:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததில் இன்று அதிகாலை வரையில் 13 பேர் உயிரிழந்தனர். 38-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி, புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது தொடர்பாக கள்ளச்சாராய வியாபாரிகளான அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், மதுவிலக்கு பிரிவு உதவி போலீஸ் சூப்பிரண்டு, மரக்காணம் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், கோட்டக்குப்பம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் ஏட்டுகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருந்ததால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று மதியம் நேரில் வந்தார். அங்கு சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், காலியாக உள்ள விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக ஜியாவுல் ஹக் நியமிக்கப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு, விழுப்புரம் மாவட்டமும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மரக்காணம் வந்தார். அங்கு கள்ளச்சாராய வழக்கு குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார்.

    இந்த வழக்கு தொடர்பாக மரக்காணம், அனுமந்தை, நடுக்குப்பம், ஆலந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 10 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் அளித்த தகவலின்படி, மெத்தனால் விற்பனை செய்த புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த பர்கத் என்ற ராஜா, ஏழுமலை, ஆகிய 2 பேரை மரக்காணம் போலீசார் கைது செய்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு மெத்தனால் எங்கிருந்து கிடைத்தது. அதனை யார்? யாரிடம் விற்றனர்? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. மேலும், இதில் அரசியல் கட்சியினர் யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மரக்காணம் கள்ளச்சாராய வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கும் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    மரக்காணம் எக்கியார் குப்பத்தில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டுள்ளனர். அவர்கள் அக்கிராம மக்களுக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், எக்கியார்குப்பத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவுதால் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கைதான ராஜா புதுவையின் பல்வேறு இடங்களில் சாராயக்கடை ஏலம் எடுத்து நடத்தி வந்ததும் தெரியவந்தது. இவர் எந்த வகையான வேதிப்பொருளை சாராயம் தயாரிக்க கொடுத்தார்? இவருக்கு யார் மூலம் கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் மேலும் புதுவையை சேர்ந்த முக்கிய அரசியல் புள்ளிகள் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் 202 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • 5901 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல், 1106 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    விழுப்புரம், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் 247 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு 81 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் 202 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    121 பேர் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 5901 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல், 1106 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் அதிரடி சோதனை தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    • கோவில்பட்டி டி.எஸ்.பி.வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் வியாபாரிகளை கைது செய்தனர்.
    • 10-க்கும் மேற்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான பசும்பொன் முத்துராமலிங்கதேவர் தினசரி சந்தையில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பழைய கடை கட்டிடங்களை இடித்து விட்டு ரூ. 6 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கடைகள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    புதிய சந்தை கட்டுமான பணி நிறைவடையும் வரை தற்காலிக சந்தையானது ஏற்கனவே பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள கோவில்பட்டி புதிய பஸ் நிலையத்தில் செயல்படும் எனவும், வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் அங்கு நிறைவேற்றி தரப்படும் எனவும் நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. ஆனால் வியாபாரிகள் புதிய பஸ் நிலைய மார்க்கெட்டுக்கு செல்ல மறுத்தும், முறையாக கடைகளை ஒதுக்கீடு செய்து தர வலியுறுத்தியும், புதிய கடை கட்டுமானங்கள் குறித்த வரைபடங்களை பொதுமக்கள் பார்வைக்கு முன் வைக்கவும், தினசரி சந்தை இடமாற்றம் மற்றும் புதிய கட்டுமானம் குறித்து அனைத்து கட்சிகள் வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், நகராட்சி நிர்வாகத்தின் நிர்வாக குளறுபடிகளை கண்டித்தும், கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் நகராட்சி நிர்வாகமும், மார்க்கெட் வியாபாரிகளும் நீதிமன்றத்திற்கு சென்றனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மார்ச் 31-ந் தேதி வழங்கப்பட்ட உத்தரவின்படி, கோவில்பட்டியில் இன்று காலை 7 மணியளவில் நகராட்சி சந்தை கடைகளை இடித்து அப்புறப்படுத்தும் பணி கோவில்பட்டி தாசில்தார் சுசீலா, நகராட்சி கமிஷனர் ராஜாராம் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது.

    இப்பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த மார்க்கெட் வியாபாரிகளில் ஒரு தரப்பினர் மறியலில் ஈடுபட முயன்றனர். கோவில்பட்டி டி.எஸ்.பி.வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் வியாபாரிகளை கைது செய்தனர்.

    இதையடுத்து தினசரி சந்தை கடைகளை இடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-க்கும் மேற்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மதுரையில் போலி வயர்களை விற்ற வியாபாரிகள் கைது செய்யப்பட்டார்.
    • அலுவலக உபயோகத்துக்காக மதுரை கிளாஸ்கார தெருவில் உள்ள எலக்ட்ரிகல் கடையில் வாங்கியுள்ளார்.

    மதுரை

    விழுப்புரம் மாவட்டம், அவரப்பாக்கத்தை சேர்ந்தவர் வினோத் (வயது 33). மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் அலுவலக உபயோகத்துக்காக பிராண்டட் நிறுவனத்தின் வயர்களை மதுரை கிளாஸ்கார தெருவில் உள்ள எலக்ட்ரிகல் கடையில் வாங்கியுள்ளார். அந்த வயர்களை பரிசோ தித்தபோது அவை போலி என்பது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அவர் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று பணத்தை திருப்பித் தரும்படி கேட்டார்.அவர்கள் தர மறுத்து விட்டனர். இதுகுறித்து வினோத் திடீர் நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லோகேசுவரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தெற்கு ஆவணி மூல வீதியைச் சேர்ந்த தால்பர்ட் (39), அவரது சகோதரர் தீக்சித் (21) ஆகிய 2 வியாபாரிகளை கைது செய்தார்.

    • சங்கராபுரம் பகுதியில் சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
    • 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாண்டியன் தலைமையிலான போலீசார் சங்கராபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொ ண்டிரு ந்தனர். தியாகராஜபுரம் ஏரிக்கரை அருகில் சாராயம் விற்ற அதே கிராமத்தை சேர்ந்த மீனாட்சி (வயது 40), மற்றும் வீட்டின் அருகில் சாராயம் விற்ற நெடுமானூர் கிராமத்தைச்சேர்ந்த முத்தம்மாள் (34), மொட்டையம்மாள் (58), சங்கராபுரத்தை சேர்ந்த ஏழுமலை (54) ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின் அவர்களை கைது செய்து அவர்களிடம் 41 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து அழித்தனர்.இதே போன்று வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொ ண்டிருந்தனர். அப்போது சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த மூலக்காடு பகுதியை சேர்ந்த குமார் (48), கொடியனூர் வெள்ளையன் (40), சின்னபுளியங்கொட்டை பிரபு (31), ரங்கப்பனூர் ராஜேந்திரன்(55) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின் அவர்களிடம் இருந்து 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    ×