search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hunger strike"

    • கைதி பிரபு திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபு மீண்டும் நேற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    சேலம்:

    கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாங்கா பிரபு (41). கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையே சேலம் மாவட்டம் வீராணம் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கிலும் தொடர்புடைய இவர் உள்பட மூன்று பேரை நேற்று விசாரணைக்கு சேலம் நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர்.

    அப்போது கைதி பிரபு திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில் , சேலம் மத்திய சிறையில் பழங்களை வைத்து சாராய ஊறல் தயாரித்ததாக அதிகாரிகள் தன்னை 4 நாட்களுக்கு முன்பு தனி சிறையில் அடைத்தனர்.

    மேலும் பொய்யான தகவலை கூறி சிறைத்துறையினர் அடித்து துன்புறுத்துகிறார்கள். சேலம் மத்திய சிறையில் அதிகாரிகள் உதவியுடன் தான் கஞ்சா, கைபேசி உள்ளிட்டவை சிறைக்குள் கொண்டு செல்லப்பட்டு சிறைவாசிகளால் பயன்படுத்தப்படுகிறது என்று கூறினார். இதைத்தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபு மீண்டும் நேற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஆனால் நேற்று மாலை முதல் பிரபு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று காலையும் வழக்கம்போல அவருக்கு உணவு வழங்கியும் அவர் சாப்பிட மறுத்து விட்டார் . தொடர்ந்து அவரிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதுவரை அவர் சாப்பிடவில்லை.

    மேலும் தன்னை தனி சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாகவும், உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதால் வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் சிறையில் பரபரப்பு நிலவி வருகிறது. இதற்கு இடையே நேற்று சிறைத்துறை டிஐஜி மற்றும் குழுவினர் சேலம் மத்திய சிறையில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

    • போனஸ் வழங்கக்கோரி நடந்தது
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள பெல் நிறுவனத் தில் பணி புரியும் நிரந்தர ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப் பட்டுள்ள போனசை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பி.ஏ.பி. ஊழியர்கள் மற்றும் ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். காலை 8 மணி முதல் மதியம் 3 மணிவரை உண்ணாவிரத போராட் டம் நடைபெற்றது. முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    அப்போது ஜாயிண்ட் கமிட்டி கூட்டத்தை உடனடியாக கூட்டிபோனஸ் தொடர்பான பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும், போக்குவரத்து மற்றும் உணவுக்கு வழங் கப்பட்டமானியங்களை ஏற்கனவே வழங்கியது போல வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    • சீரங்ககவுண்டம்பாளையம் செல்லும் ரோட்டில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது.
    • டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்றக்கோரி பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர்.

    மங்கலம் :

    மங்கலம் அருகேயுள்ள இடுவாய் பகுதியில் இருந்து சீரங்ககவுண்டம்பாளையம் செல்லும் ரோட்டில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இது குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ளதாகவும்,பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது எனக்கூறியும் இடுவாய் பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக இந்த பகுதியில் இருந்து அகற்றக்கோரி பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இடுவாய் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக்கடையை இடுவாய் பகுதியில் இருந்து மாற்றி சின்னக்காளிபாளையம் ரோட்டில் பொம்மங்காடு என்ற பகுதியில் அமையவிரு ப்பதாக தெரிகிறது. மது கடை கட்டிடத்திற்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட அண்ணாமலை கார்டன், திருமலை கார்டன், ஜி.என். கார்டன், செந்தில்நகர், பாப்பாங்காடு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை 11 மணியளவில் இடுவாய் ஊராட்சி-அண்ணாமலைகார்டன் பஸ்நிறுத்தம் அருகே பந்தல் அமைத்து ஒருநாள் மாபெரும் அடையாள உண்ணாவிரத ப்போராட்டத்தை காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளனர். இதில் பொதுமக்கள் , குழந்தைகள், பெண்கள், கருப்புபேட்ஜ் அணிந்து குடியிருப்பு பகுதிக்குள் குடி எதற்கு, விளைநிலங்கள் வீணாப்போக விடமாட்டோம் என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி உண்ணா விரதப்போ ராட்டத்தில் கலந்து கொண்டனர். இது குறித்து உண்ணாவிரதப்போ ராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது; சின்னக்காளிபாளையம் அதிகளவில் விவசாய நிலங்கள் நிறைந்த பகுதி ஆகும். இங்கு வெங்காயம், புகையிலை போன்றவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் மதுக்கடை அமைந்தால் பிளாஸ்டிக் கவர்கள், மதுபாட்டில்கள், போன்றவற்றால் விவசாய நிலங்கள் பாழ்படும்.மேலும் அண்ணாமலை கார்டன், திருமலைகார்டன், ஜி.என்.கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இடுவாய் பகுதியில் இருந்து சின்னக்காளிபாளையம் செல்லும் ரோட்டில் பொம்மங்காடு பகுதியில் மதுக்கடை அமைக்க மேற்கொண்டு வரும் கட்டுமானப்பணிகளை நிறுத்தும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.

    • மரக்காணம் பேரூராட்சி தர்மபுரி வீதியில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில் பொது மக்களின் கருத்தை கேட்காமல், சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலை, இந்து அறநிலைய துறைக்கு ஒப்படைக்க வேண்டுமென அரசு அறிவிப்புவிடுத்துள்ளது.
    • இதனால் அதிர்ச்சி அடைந்த இப்பகுதி பொது மக்கள் மற்றும் வியாபாரிகள், அதிகாரிகள் இந்து அறநிலை துறை அதிகாரிகளை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடத்தினர்,

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சி தர்மபுரி வீதியில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மரக்காணம் பகுதியில் உள்ள பொது மக்கள் சார்பில் தங்களது சொந்த நிதியின் மூலம் 21 நாட்களுக்கு திருவிழா நடத்துவது வழக்கம். கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி பொதுமக்கள் பாரம்பரியம் மாறாமல் திரு விழா நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் தற்பொ ழுது இப்பகுதியில் உள்ள பொது மக்களின் கருத்தை கேட்காமல் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொது மக்களுக்கு சொந்த மான திரவுபதி அம்மன் கோவிலை இந்து அறநிலைய துறைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று அ செய்யப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பை பார்த்த இப்பகுதி பொதுமக்கள் நாங்கள் எங்கள் கோவிலை இந்து அறநிலையத் துறைக்கு ஒப்படைக்க மாட்டோம். இந்த கோவிலுக்கு அரசு சார்பில் எந்த வருவாயும் இல்லை.

    இங்குள்ள ஒவ்வொரு குடும்பத்தா ரின் ஒத்து ழைப்பை வைத்து தான் நாங்கள் அமைதி யாக ஆண்டு தோறும் திருவிழா நடத்தி வருகிறோம் என்று கூறினர்.ஆனால் அறநிலை யத்துறை சேர்ந்த அதிகாரி கள் இந்த கோவிலை இந்து அறநிலைய த்துறையில் சேர்க்க வேண்டும் என்று ஒரு சிலர் புகார் மனு கொடுத் துள்ளனர். அந்த புகார் மனுவின் அடிப்படையில் தான் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இப்பகுதி பொது மக்கள் மற்றும் வியாபாரி கள் அதிகாரிகள் பொது மக்களுக்கு ஆதரவாக இல்லாமல் தனி ஒருவருக்கு ஆதரவாக செயல்படுவது ஏதோ உள்நோக்கம் உள்ளது எனக் கூறி இந்து அறநிலை துறை அதிகாரிகளை கண்டித்து மரக்காணம் பேரூராட்சியில் உள்ள அனைத்து வியாபாரிகளும் ஒன்று சேர்ந்துக. இதுபோல் பொது மக்கள் மரக்காணம் பஸ் நிலையத்தில் உண்ணா விரதம் இருந்து வருகின்ற னர். வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட அதி காரிகள் பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர் இச்சம்பவத்தால் மரக்கா ணம் பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

    • நெல்லை வக்கீல்கள் சங்கம் சார்பில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    வக்கீல்கள் பாதுகாப்பு சட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்ற கோரி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நெல்லை வக்கீல்கள் சங்கம் சார்பில் கோர்ட்டு முன்பு இன்று வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் முன்னாள் சேர்மன் ஜவகர்லால் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் குழுமத்தின் துணைத்தலைவர் கார்த்திகேயன், செயற்குழு தலைவர் பிரிசில்லா பாண்டியன், செயற்குழு உறுப்பினர் மைக்கேல், வக்கீல்கள் ராம்நாத், சிவசுப்பிரமணியன், பரிமளம், ராஜா முகம்மது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

    இதில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த வக்கீல்கள் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் நெல்சன் நன்றி கூறினார்.

    • உண்ணாவிரதம் போராட்டம் பாளை சித்த மருத்துவக்கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
    • போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    நெல்லை:

    ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி பாளை சித்த மருத்துவக்கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.

    மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள் பால்ராஜ், பிரகாஷ், பால் கதிரவன் ஆகியோர் தலைமை தாங்கி னர். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் பிரம்ம நாயகம், ஸ்டான்லி, ராம சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர் மாணிக்கராஜ் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் நேரு சிறப்புரையாற்றினார்.

    இதில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்களுக்கு உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    தொடர்ந்து கோரிக்கை களை வலியுறுத்தி வருகிற 24-ந்தேதி மாவட்டம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

    முடிவில் காளிராஜ் நன்றி கூறினார். இதில் நிர்வாகிகள் மாரிராஜா, வசந்தி, அல்லா பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முத்துக்குமார் கடந்த வாரம் கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
    • இந்நிலையில் ராஜேஷ் என்பவரின் தம்பி ரமேஷ் உள்பட 5 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சோரீஸ்புரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 36). இவர் தூத்துக்குடி கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த வாரம் கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப் பட்டார்.

    இதனை கண்டித்து தூத்துக்குடி வக்கீல்கள் சங்கம் சார்பில் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதில் தூத்துக்குடியை சேர்ந்த ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கிடையே வக்கீல் முத்துக்குமார் கொலை வழக்கு தொடர்பாக ராஜேஷ் உள்ளிட்ட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

    காவலில் எடுத்து விசாரணை

    இந்நிலையில் ராஜேஷ் என்பவரின் தம்பி ரமேஷ் உள்பட 5 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

    இதில் ரமேசை போலீஸ் காவலில் எடுக்க கோர்ட்டில் போலீசார் அனுமதி கேட்டனர். கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து ரூரல் டி.எஸ்.பி.சுரேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் ரமேசை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதிதாக கோவில் கட்ட கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் பூமி பூஜை செய்யப்பட்டது.
    • நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே கரியமாணிக்கம் புதுக்காலனியில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது.

    அந்த கோவிலை இடித்து விட்டு புதிதாக கோவில் கட்ட கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் பூமி பூஜை செய்யப்பட்டது.

    தற்போது பழைய கோவிலை இடித்து விட்டு புதியதாக கோவில் கட்டுவதற்கான ஆயத்த ஏற்பாடுகள் நடந்து வந்தன. ஆனால் புதிய கோவில் கட்டுவதற்கு கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல சாலை வசதி இல்லாததால் கோவில் கட்டும் பணியில் இடையூறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கோவில் கட்டுவதற்கு சாலை வசதி இல்லாததை கண்டித்து கரியமாணிக்கம் புதுகாலனி மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கரியமாணிக்கம்-புதுவை செல்லும் மெயின் ரோட்டில் இன்று காலை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் அதனை அவர்கள் ஏற்கவில்லை. இந்த பிரச்சினையில் தொகுதி எம்.எல்.ஏ.வான துணை சபாநாயகர் ராஜவேலு தலையிட்டு கோவிலுக்கு செல்ல சாலையை உருவாக்கி தரும்வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி அவர்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி உண்ணாவிரதம்
    • 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இன்று காலை போராட்டம்

    புதுச்சேரி:

    பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி, காரைக்காலில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இன்று காலை உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

    • அரசின் கலை விழா 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் நிலையில் பல மாநில கலைஞர்கள் ஏனாமிற்கு வந்துள்ளனர்.
    • கடை அடைப்பு போராட்டம் கலைஞர்களையும், மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பாதித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்று பகுதியில் உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் தொகுதிகளில் முதல்-அமைச்சர் ரங்கசாமி போட்டியிட்டார்.

    ஏனாமில் அவர் தோல்வியுற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் கொல்ல பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் வெற்றி பெற்றார். இருப்பினும் அவர் பா.ஜனதா-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

    இந்த நிலையில் அவர் கடந்த மாதம் 7-ந் தேதி சட்டமன்றம் வளாகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தி 15 கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.

    இந்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதற்கிடையே ஏனாம் எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் முதல்-அமைச்சர் ரங்கசாமி குறித்து அவதூறாக பேசியதாக சமூகவலைதளத்தில் பரவியது. இதனால் கொதித்தெழுந்த புதுவை என்.ஆர். காங்கிரசார் ஏனாம் எம்.எல்.ஏ.வை கண்டித்து பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மேலும் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவதூறாக பேசிய ஏனாம் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடமும், போலீஸ் டி.ஜி.பி.யிடமும் மனு அளித்தனர்.

    இன்றும் என்.ஆர். காங்கிரசார் ஏனாம் எம்.எல்.ஏ.வை கண்டித்து புதுவையில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே கோரிக்கைகளை வலியுறுத்தியும் முதல்-அமைச்சரை கண்டித்தும் நேற்று ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ. மண்டல அதிகாரி அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

    மேலும் ஏனாமில் அமைச்சர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்த அரசின் 19-வது ஆண்டு கலை விழாவை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் புறக்கணித்தார்.

    இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்தது. இன்று ஏனாமில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார். இதன்படி இன்று ஏனாமில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. ஏனாமில் காலை முதல் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

    • முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் எட்வர்ட் ராஜதுரை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
    • சாத்தான்குளத்தில் மட்டும் குடிநீர் கட்டணம் கூடுதலாக முன்வைக்கப்பட்டுள்ளதாக எட்வர்ட் ராஜதுரை கூறினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் புதிய குடிநீர் இணைப்பு திட்டத்திற்காக வைப்புத் தொகை ரூ. 8,100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    உண்ணாவிரதம்

    வைப்புத் தொகை கூடுதலாக உள்ளதாகவும் இதனை ரத்து செய்ய வேண்டும் என கோரி முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் எட்வர்ட் ராஜதுரை தலைமையில் சாத்தான்குளம் வாசகசாலை பஜாரில் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    போலீசார் அனுமதி மறுத்ததால் தடையை மீறி வாசக சாலை பஜாரில் உண்ணாவிரதம் இருந்தனர். இதைத்தொடர்ந்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக எட்வர்ட் ராஜதுரை உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது எட்வர்ட் ராஜதுரை போலீசாருடன் வாக்குவாத்த்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கூடுதல் கட்டணம் புகார்

    சாத்தான்குளத்தில் மட்டும் தான் குடிநீர் கட்டணம் கூடுதலாக முன்வைக்கப்பட்டு ள்ளது, உடன்குடி, நாசரேத், தெந்திருப்பேரை பேரூராட்சியில் குடிநீர் வைப்புத் கட்டணம் குறைவாக உள்ளது.

    எனவே கூடுதல் குடிநீர் கட்டணம் ரூ. 8 ஆயிரத்தை ரத்து செய்ய கோரி தீர்மானம் நிறைவேற்றி கலெக்டருக்கு அனுப்ப வேண்டும். கட்டணத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் நடத்துவேன் என்றார்.


    கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரி புளியரையில் 1-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அய்யாத்துரை பாண்டியன் பேரவை அறிவித்துள்ளது.
    சங்கரன்கோவில்:

    தென் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை கொண்டு செல்வதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி டாக்டர்.அய்யாத்துரை பாண்டியன் தலைமையில் நாளை மறுநாள் (1-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை புளியரை சோதனை சாவடி அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

    இதில், வழக்கறிஞர் முன்னாள் எம்.எல்.ஏ. குருநாதன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கணேச பாண்டியன், பெரியார், வைகை பாசன விவசாய சங்க செயலாளர் அன்வர் பாலசிங்கம், நெல்லை மற்றும் தென்காசி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம், தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு நெல்லை மண்டல செயலாளர் செல்லத்துரை,

    நெல்லை, தென்காசி ஒருங்கிணைந்த விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாடசாமி, செண்பகவல்லி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பாண்டியன்ம மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்கின்றார்கள் என அய்யாத்துரை பாண்டியன் பேரவை தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    மேலும் இதில் கட்சி பாகுபாடு இல்லாது இயற்கை வளத்தை காக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பொதுமக்களும் அணி திரள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
    ×