search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்து  அறநிலையத்துறை  அதிகாரியை கண்டித்து  மரக்காணத்தில்  வியாபாரிகள் கடையடைப்பு: பொதுமக்கள் உண்ணாவிரதம்
    X

    பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய போது எடுத்த படம்.

    இந்து அறநிலையத்துறை அதிகாரியை கண்டித்து மரக்காணத்தில் வியாபாரிகள் கடையடைப்பு: பொதுமக்கள் உண்ணாவிரதம்

    • மரக்காணம் பேரூராட்சி தர்மபுரி வீதியில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில் பொது மக்களின் கருத்தை கேட்காமல், சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலை, இந்து அறநிலைய துறைக்கு ஒப்படைக்க வேண்டுமென அரசு அறிவிப்புவிடுத்துள்ளது.
    • இதனால் அதிர்ச்சி அடைந்த இப்பகுதி பொது மக்கள் மற்றும் வியாபாரிகள், அதிகாரிகள் இந்து அறநிலை துறை அதிகாரிகளை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடத்தினர்,

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சி தர்மபுரி வீதியில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மரக்காணம் பகுதியில் உள்ள பொது மக்கள் சார்பில் தங்களது சொந்த நிதியின் மூலம் 21 நாட்களுக்கு திருவிழா நடத்துவது வழக்கம். கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி பொதுமக்கள் பாரம்பரியம் மாறாமல் திரு விழா நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்பொ ழுது இப்பகுதியில் உள்ள பொது மக்களின் கருத்தை கேட்காமல் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொது மக்களுக்கு சொந்த மான திரவுபதி அம்மன் கோவிலை இந்து அறநிலைய துறைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று அ செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பார்த்த இப்பகுதி பொதுமக்கள் நாங்கள் எங்கள் கோவிலை இந்து அறநிலையத் துறைக்கு ஒப்படைக்க மாட்டோம். இந்த கோவிலுக்கு அரசு சார்பில் எந்த வருவாயும் இல்லை.

    இங்குள்ள ஒவ்வொரு குடும்பத்தா ரின் ஒத்து ழைப்பை வைத்து தான் நாங்கள் அமைதி யாக ஆண்டு தோறும் திருவிழா நடத்தி வருகிறோம் என்று கூறினர்.ஆனால் அறநிலை யத்துறை சேர்ந்த அதிகாரி கள் இந்த கோவிலை இந்து அறநிலைய த்துறையில் சேர்க்க வேண்டும் என்று ஒரு சிலர் புகார் மனு கொடுத் துள்ளனர். அந்த புகார் மனுவின் அடிப்படையில் தான் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இப்பகுதி பொது மக்கள் மற்றும் வியாபாரி கள் அதிகாரிகள் பொது மக்களுக்கு ஆதரவாக இல்லாமல் தனி ஒருவருக்கு ஆதரவாக செயல்படுவது ஏதோ உள்நோக்கம் உள்ளது எனக் கூறி இந்து அறநிலை துறை அதிகாரிகளை கண்டித்து மரக்காணம் பேரூராட்சியில் உள்ள அனைத்து வியாபாரிகளும் ஒன்று சேர்ந்துக. இதுபோல் பொது மக்கள் மரக்காணம் பஸ் நிலையத்தில் உண்ணா விரதம் இருந்து வருகின்ற னர். வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட அதி காரிகள் பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர் இச்சம்பவத்தால் மரக்கா ணம் பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

    Next Story
    ×