search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை கோர்ட்டு முன்பு வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்
    X

    போராட்டத்தில் நெல்லை மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஸ்வரன் பேசிய போது எடுத்தபடம்.

    நெல்லை கோர்ட்டு முன்பு வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்

    • நெல்லை வக்கீல்கள் சங்கம் சார்பில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    வக்கீல்கள் பாதுகாப்பு சட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்ற கோரி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நெல்லை வக்கீல்கள் சங்கம் சார்பில் கோர்ட்டு முன்பு இன்று வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் முன்னாள் சேர்மன் ஜவகர்லால் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் குழுமத்தின் துணைத்தலைவர் கார்த்திகேயன், செயற்குழு தலைவர் பிரிசில்லா பாண்டியன், செயற்குழு உறுப்பினர் மைக்கேல், வக்கீல்கள் ராம்நாத், சிவசுப்பிரமணியன், பரிமளம், ராஜா முகம்மது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

    இதில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த வக்கீல்கள் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் நெல்சன் நன்றி கூறினார்.

    Next Story
    ×