search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம்
    X

    ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம்

    • உண்ணாவிரதம் போராட்டம் பாளை சித்த மருத்துவக்கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
    • போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    நெல்லை:

    ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி பாளை சித்த மருத்துவக்கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.

    மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள் பால்ராஜ், பிரகாஷ், பால் கதிரவன் ஆகியோர் தலைமை தாங்கி னர். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் பிரம்ம நாயகம், ஸ்டான்லி, ராம சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர் மாணிக்கராஜ் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் நேரு சிறப்புரையாற்றினார்.

    இதில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்களுக்கு உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    தொடர்ந்து கோரிக்கை களை வலியுறுத்தி வருகிற 24-ந்தேதி மாவட்டம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

    முடிவில் காளிராஜ் நன்றி கூறினார். இதில் நிர்வாகிகள் மாரிராஜா, வசந்தி, அல்லா பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×