search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hindu munnani"

    • அமாவாசை தினத்தன்று பக்தர்களிடம் தனது இயக்கம் குறித்து விளக்கப் பாடம் நடத்துவது வழக்கம்.
    • இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சிலர் பிரச்சாரம் செய்யக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அவினாசி :

    பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வர்ய விஸ்வ வித்யாலயம் எனும் இயக்கம் ராஜஸ்தானை தலைமையிடமாக கொண்டு 185 நாடுகளில் இயங்கிவருகிறது. அவினாசி கிளை பிரம்மகுமாரிகள் இயக்கத்தினர் பிரதிமாதம் அமாவாசை தினத்தன்று அவினாசிலிங்கேசுவரர் கோவில் கலை அரங்கில் தனது இயக்கம் குறித்து பக்தர்களிடம் விளக்கப் பாடம் நடத்துவது வழக்கம்.

    ஆடி அமாவாசை தினமான நேற்று இவர்கள் கலை அரங்கில் வழக்கம்போல் பிரசங்கம் செய்துகொண்டிருந்தனர். அப்போது இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சிலர் வந்து நீங்கள் யார் கிருஷ்துவ மதத்தை சேர்ந்தவர்களா இங்கு நீங்கள் பிரச்சாரம் செய்யக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து கோவில் செயல் அலுவலர் பெரியமருதுபாண்டி மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரித்தனர். பிரம்மகுமாரிகள் இயக்கத்தினர் தங்களது பிரசங்கம் செய்வது குறித்து கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
    • வெள்ளி கதாயுதம் வழங்குவது வீடு வீடாக நோட்டீஸ் விநியோகிப்பது, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    இந்து முன்னணி கிழக்கு ஒன்றியம் சார்பில் திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவில் உள்ள அலுவலகத்தில் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துைண தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.

    இதில் நாளை 14-ந்தேதி இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணத்திற்கு வரும் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பது, வெள்ளி கதாயுதம் வழங்குவது , இது சம்பந்தமாக வீடு வீடாக நோட்டீஸ் விநியோகிப்பது, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் செந்தில்குமார், சந்துரு, பாலு, ரவி, பிரபாகரன், சரவணன், ராமச்சந்திரன், ராஜா, ஜெயராம், உள்பட பலர் கலந்துகொண்டனர். 

    • சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சட்டமன்ற உறுப்பினர் வீட்டை இன்று முற்றுகையிட போவதாக இந்து முன்னணியினர் அறிவித்திருந்த நிலையில் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் 15 வேலம்பாளையம் மகாலட்சுமி நகர் பகுதியில் இஸ்லாமியர்களின் பள்ளிவாசல் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் குடியிருப்பதற்கான உரிமம் மட்டுமே பெற்றுவிட்டு மத வழிபாட்டுத் தலமாக மாற்றியதாக அப்பகுதி பொதுமக்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது .

    இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த வியாழக்கிழமை பள்ளிவாசலுக்கு அதிகாரிகள் சீல் வைக்க சென்றதை அடுத்து திருப்பூர் மாநகரம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றது. இதனை அடுத்து நீதிமன்றம் 3 நாள் அவகாசம் வழங்கியது .இந்நிலையில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில். இந்து முன்னணியினர் தூண்டுதலின் பேரில்தான் வழக்கு தொடுக்கப்பட்டிருந்ததாகவும் பள்ளிவாசலுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொண்டால் பதற்றமான சூழல் ஏற்படும் என கடிதம் அனுப்பி இருந்தார்/

    அதில் இந்து முன்னணி குறித்து அவதூறாக குறிப்பிடப்பட்டிருந்ததாக இந்து முன்னணியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர் . இந்நிலையில் இந்து முன்னணி குறித்து அவதூறாக செய்திகளை பரப்பிய சட்டமன்ற உறுப்பினரை கண்டிக்கும் வகையிலும் உடனடியாக உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பள்ளிவாசலுக்கு சீல் வைக்க வேண்டும் என வலியுறுத்தியும் புதிய பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாநில செயலாளர் கிஷோர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர் வீட்டை இன்று முற்றுகையிட போவதாக இந்து முன்னணியினர் அறிவித்திருந்த நிலையில் வீட்டிற்கு மாநகர காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கூட்டத்திற்கு இந்து முன்னணி தேனி மாவட்ட பொது செயலாளர் முருகன் தலைமை தாங்கினார்.
    • இக்கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சார பயணம், பொதுக்கூட்டம் தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்து முன்னணி தேனி மாவட்ட பொது செயலாளர் முருகன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் உமையராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், வேதபுரி சித்பவானந்த ஆசிரமம் ஸ்வாமி ஞானசிவானந்தர் ஆகியோர் கலந்து கொண்டு பிரச்சார பயணத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினார்கள்.

    முன்னதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சார பயணம் கடந்த 28-ம் தேதி திருச்செந்தூரில் இருந்து தொடங்கி இன்று தேனி வந்து அடைந்தது.

    வருகின்ற 31-ம் தேதி சென்னையில் இந்த பிரச்சார பயணம் நிறைவடைகிறது. இந்துக்களின் உரிமையை மீட்கவே இந்த பிரச்சார பயணம் நடத்தப்படுகிறது. இந்து முன்னணி அரசியல் கட்சி அல்ல இருப்பினும் அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு அக்கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர வைப்பார்கள். தி.மு.க அரசு இந்து கோவில்களை திட்டமிட்டு இடித்து வருகிறது.

    ஆனால் சர்ச், மசூதி போன்றவற்றை இடிக்கவில்லை. தி.மு.க இந்து விரோத அரசு தான். தமிழக- கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோவிலில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். சிதம்பரம் நடராஜர் கோவில் முறையாக ஆய்வு செய்யவில்லை. இது தி.மு.க-வின் ஊழலுக்கு வழிவகுக்கும் வேலை.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி காலத்தில் சர்க்கரையை எறும்பு சாப்பிட்டது என்றும், சாக்கு பையை கரையான் சாப்பிட்டது என்றும் சொல்லி ஊழல் செய்தனர். அதுபோல தான் கோவில் நகைகளை உருக்குவது. எனவே கோவில் நகைகளை உருக்கும் முடிவை கைவிட வேண்டும்.

    தி.மு.க அரசு இஸ்லாமியர்களுக்கு சாதகமாக உள்ளது. அதுபோல திராவிட மாடல் ஆட்சி என்பது இந்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஆட்சி. தமிழகத்தில் உள்ள அனைவரும் திராவிடர்கள் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாகர்கோவிலில் இன்று சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசிய கமல்ஹாசனின் உருவப்பொம்மையை எரித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகர்கோவில்:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தின் போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசினார். அவரது கருத்துக்கு பாரதிய ஜனதா, சிவசேனா மற்றும் இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    நாகர்கோவிலில் இன்று நடிகர் கமல்ஹாசனை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடசேரி சந்திப்பில் நடந்த இந்த போராட்டத்தில் இந்து முன்னணியினர் மட்டுமல்லாமல் பாரதிய ஜனதாவினரும் கலந்து கொண்டனர். அவர்கள் கமல்ஹாசனை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

    மேலும் கமல்ஹாசனின் உருவப்பொம்மையை நடுரோட்டில் போட்டு தீவைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    அந்த பகுதியில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார், அருகில் உள்ள கடைகளில் இருந்து குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து உருவப்பொம்மை மீது ஊற்றி தீயை அணைத்தனர்.

    போராட்டத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்த மிசா சோமன், குழிச்சல் செல்லம், பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், பாரதிய ஜனதா நிர்வாகிகள் நாகராஜன், முத்துராமன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
    கோபியில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்து முன்னணியினர் ஆட்டுக்கும் நாய்க்கும் திருமணத்தை நடத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். #ValentinesDay
    கோபி:

    இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்தையொட்டி காதலர்கள் ஒருவருக்கொருவர் நினைவு பரிசுகளை கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொண்டனர்.

    இந்த காதலர் தினத்துக்கு இந்து முன்னணி சார்பில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பல்வேறு நூதனப்போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு காதலர் தினத்தன்று ஏராளமான காதலர்கள் ஜோடி-ஜோடியாக வருவார்கள்.

    அவர்களை தடுக்கும் வகையில் கொடிவேரி அணையில் நுழைவு பகுதியில் இன்று காலை இந்து முன்னணியினர் சிலர் வந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் ஒரு ஆட்டுக்கும்- நாய்க்கும் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன திருமணத்தை நடத்தி வைத்தனர். அப்போது அவர்கள் “காதலர் தினத்தை வெறுப்போம் காதலர்களை விரட்டுவோம்”என்று கோ‌ஷமிட்டனர்.

    இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்து முன்னணியினரின் போராட்டத்தால் கொடிவேரி அணைக்கு வந்த காதல் ஜோடியினர் ஜகா வாங்கினர். அவர்கள் சென்ற பிறகு இரு சக்கர வாகனங்களில் கொடிவேரி அணைக்கு சென்றனர். காதல் மொழி பேசி மகிழ்ந்தனர். #ValentinesDay
    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உள்ள அம்மனுக்கு மேரிமாதா அலங்காரம் செய்யப்பட்டதை கண்டித்து பாஜக மற்றும் இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் படைவீட்டு அம்மன் கோவில் தெருவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் உள்ளது. இங்கு மார்கழி மாதத்தையொட்டி தினமும் காலையில் சிறப்பு பூஜை- வழிபாடு நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை கோவிலில் உள்ள மூலவர் ஆதிபராசக்தி அம்மனுக்கு மேரிமாதா அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த தகவல் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு தெரிய வந்தது. உடனே பாரதிய ஜனதா, இந்து முன்னணி, இந்து மக்கள் முன்னணி, அய்யப்ப பாதுகாப்பு மன்ற நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டனர்.

    உடனே அவர்கள் அம்மனுக்கு செய்யப்பட்டு இருந்த மேரிமாதா அலங்காரத்தை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    பின்னர் அவர்கள் பாரதிய ஜனதா மண்டல பொறுப்பாளர் சக்தி கணபதி, கோட்ட பொறுப்பாளர் சுகுமார், அய்யப்ப பாதுகாப்பு மன்ற மாவட்ட தலைவர் நாராயணன், இந்து மக்கள் முன்னணி தேவா ஆகியோர் முன்னிலையில் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கோவில் முன்பு திரண்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் அங்கு பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாதுஉசேன் மற்றும் ஏராளமான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அவர்கள் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அம்மனுக்கு செய்யப்பட்டுள்ள மேரி மாதா அலங்காரத்தை அகற்ற வேண்டும். இல்லையென்றால் கோவிலின் கதவை திறந்து உள்ளே சென்று அலங்காரத்தை அகற்றுவோம் என்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

    இதன் பின்னர் போலீசார் கோவில் நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் மூலம் கோவில் கதவு திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு செய்யப்பட்டிருந்த மேரி மாதா அலங்காரத்தை அகற்றினர்.

    அதனை தொடர்ந்து கோவில் முன்பு திரண்டிருந்த அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.
    இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் நாளை கோவை செல்வதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #RamaGopalan

    கோவை:

    இந்து முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம் காட்டூரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தசரதன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணா, பொதுச்செயலாளர் சதீஷ், செய்தி தொடர்பாளர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    டிசம்பர் 23 ,24, 25 ஆகிய தேதிகளில் திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் நடைபெறும் கோமாதா பூஜை, 16 சேடஷா மகாலட்சுமி மகா யாகம் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் 4 மகாலட்சுமி ரதயாத்திரை நடைபெறுகிறது.

    நாளை காந்தி பார்க் முருகன் கோவிலில் இருந்து யாத்திரை தொடங்க உள்ளது. இதில் இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். கோவை வரும் ராம.கோபாலனுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, யாக பூஜைக்காக பொதுமக்களிடம் இருந்து செங்கல் தானமாக பெறுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #RamaGopalan

    நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய பிறகு வேடசந்தூரில் நடந்த இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில் எச்.ராஜா மீண்டும் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #BJP #HRaja
    திண்டுக்கல்:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஐகோர்ட்டை விமர்சித்து பேசினார். இவரது ஆவேச பேச்சு வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து திருமயம் போலீசார் எச். ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து உள்ளனர். போலீசார் அவரை தேடி வருவதாக தெரிவித்தனர்.

    இதற்கிடையில் திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் நடந்த இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில் எச். ராஜா பங்கேற்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 2003-ம் ஆண்டில் நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது, திருவண்ணாமலையில் இடும்பன் கோவில் காணாமல் போய் விட்டதாக சட்டமன்றத்தில் பேசினேன். அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, இது தவறான செய்தி என்றார்.

    அதன்பிறகு விசாரித்துவிட்டு கோவில் காணாமல் போய் இருந்ததை அறிந்து ஆக்கிரமிப்பை அகற்றி கோவில் கட்ட உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அவரது உத்தரவு செயல்பாட்டுக்கு வரவில்லை.

    வடமாநிலங்களில் கொண்டாடப்படுகிற துர்கா பூஜையை போல, தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்திய அளவில், 4 சக்திகள் ஒருங்கிணைந்து இந்து ஒற்றுமைக்கு மாறாக செயல்பட்டு வருகின்றன.

    குறிப்பாக இடதுசாரிகள், பிரிவினைவாதிகள், நக்சல்கள் உள்ளிட்டோர் இணைந்து செயல்படுகின்றனர். தூத்துக்குடியில் நடந்த கலவரத்துக்கு இதுபோன்ற அமைப்புகள்தான் காரணம். இதேபோல் 8 வழிச்சாலை திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற விடாமல் இந்த அமைப்பினர் மக்களை தூண்டி விட்டு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    தமிழகத்தில் 5 சதவீத கோவில்கள் வணிக நிறுவனங்களாக உள்ளன. தமிழகத்தில் சீமான், திருமுருகன் காந்தி போன்றோர் இந்துக்களுக்கு எதிரான கருத்தையே பரப்பி வருகின்றனர்.

    கோப்புப்படம்

    அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர் போன்ற இடங்களில் விலை மதிப்புமிக்க தமிழக கோவில்களின் சிலைகள் உள்ளன. ஆனால் அந்த சிலைகளை அரசால் மீட்க முடியவில்லை. இதுபற்றி கேட்டால், எந்த கோவில் சிலை என தெரியவில்லை என்கின்றனர். இது ஆமை புகுந்த வீடும், அரசாங்கம் புகுந்த கோவிலும் விளங்கியதாக சரித்திரம் இல்லை என்ற பழமொழி சொல்வதை போல உள்ளது.

    இதேபோல் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை பிற மதத்தினருக்கு வழிபாட்டு தலங்கள் கட்டுவதற்கு ஒதுக்கி கொடுத்துள்ளனர். எனவே நாம் அனைவரும் மத மாற்றத்தை தடுத்து நிறுத்தி, ஒன்றுபட்ட உணர்வு சக்தியாக, இந்து சக்தியாக திகழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #BJP #HRaja
    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு இந்து முன்னணியினர் மனு கொடுப்பதற்காக விநாயகர் சிலையுடன் ஊர்வலமாக வந்தனர்.

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. இந்து முன்னணி அமைப்பு கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில் விநாயகர் சிலைகளுடன் இந்து முன்னணியினர் 100-க்கும் மேற்பட்டோர், ஆஞ்சநேயர் கோவில் அருகில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக ஊர்வலமாக வந்தனர்.

    கலெக்டர் அலுவலக மேம்பாலத்திற்குள் புகுந்து ஊர்வலமாக வந்த இந்து முன்னணியினரை, டி.எஸ்.பி. அலெக்ஸ் மேற்பார்வையில் சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான ஏராளமான போலீசார், பேரிகார்ட்டுகளை வைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் இந்து முன்னணியினருக்கும், போலீசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து, கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல இந்து முன்னணியினர் ஒரு சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என போலீஸ் அறிவுறுத்தியது. இதையடுத்து கோட்ட தலைவர் மகேஷ் உள்பட சிலர், கலெக்டர் அலுவலக குறைதீர்வு கூட்ட அரங்கிற்கு சென்று விநாயகர் சிலை கையில் கோரிக்கை மனுவை வைத்து அதிகாரிகளிடம் வழங்கினர்.

    அந்த மனுவில், தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா பல ஆண்டுகளாக அமைதியான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஒரு அரசாணை மூலம் விநாயகர் சதுர்த்தி விழாவை சாதாரண மக்கள் கொண்டாட முடியாத அளவிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது இந்து மக்களுக்கு மத வழி பாட்டு உரிமையை மறுப்பு போல் உள்ளது.

    விநாயகர் சிலையை வைக்க கலெக்டர், வருவாய் கோட்டாட்சியரிடம் தான் அனுமதி பெறவேண்டும் என்று காவல்துறையினர் கூறி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவை சாமானிய மக்களும் கொண்டாட வழி வகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலை வைப்பதற்கான புதிய கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று இந்து முன்னணியினர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    சேலம்:

    இந்து முன்னணி மாவட்ட தலைவர் சந்தோஷ் தலைமையில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக மனு கொடுப்பதற்காக இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை போலீசார் அனைவரையும் அலுவலகத்திற்குள் விட மறுத்தனர். 5 பேர் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று கூறியதால் 5 பேர் மட்டும் சென்று கலெக்ரிடம் மனு கொடுத்தனர்.

    இந்து முன்னணி சார்பில் சேலம் மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் விநாயகர் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக சேலம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஆனால் இந்த வருடம் அரசு ஆணை மூலம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது இந்துக்களின் மத வழிபாட்டு உரிமையை மறுப்பது போல் உள்ளது.

    தற்போது காவல்துறை சில இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுத்துள்ளனர். அந்த இடங்களில் சிலை வைக்க கலெக்டர் மற்றும் ஆர்.டி.ஓ.விடம் அனுமதி வாங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

    அந்த இடங்களில் சிலை வைக்க அனுமதியும் புதிய கட்டுப்பாடுகளை அகற்றி விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
    விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பாக 1008 இடங்களில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்ய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. #VinayagarChathurthi
    கோவை:

    கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் பி.என்.புதூரில் நடந்தது. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாநகரில் 5 நாட்கள் விநாயகர் சிலை களை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபடுவது, முதல் நாளான அடுத்த மாதம் 13-ந் தேதி தொழில் வளம் பெறுக, விவசாயம் செழிக்க, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக வேண்டி அதிகாலை கணபதி ஹோமத்துடன் 1008 இடங்களில் விநாயகர் திருமேனி பிரதிஷ்டை செய்வது என்றும், சிறுவர்களுக்காக விளையாட்டு போட்டி, கட்டுரை போட்டி, நடத்துவது

    மறுநாள்(14-ந் தேதி) பசுக்களை பாதுகாக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி நாட்டு பசுவை வைத்து கோ பூஜை இந்து முன்னணி சார்பில் விநாயகர் வைக்கப்படும் இடங்களில் நடத்துவது, 15-ந் தேதி அன்னையர் தினமாக கொண்டாடுவது, பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள், திருவிளக்கு பூஜை, சக்தி பூஜை, சுமங்கலி பூஜை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    16.-ந் தேதி இளைஞர் தினமாக கொண்டாடுவது, இளைஞர்களுக்கான பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்துவது, 17-ந் தேதி இந்துக்கள் ஒற்றுமை தினமாக கொண்டாடுவது, ரங்கே கவுடர் வீதி, தெப்பகுள மைதான திடலில் விநாயகர் விசர்ஜன விழா பொதுக் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    இந்த பொதுக்கூட்டத்தில் பாரதிய  ஜனதா கட்சிமாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம், கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரை சிறப்பு அழைப்பாளராக அழைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

    கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கிஷோர்குமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணா, மாவட்ட தலைவர் தசரதன், மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால், மாவட்ட செயலாளர்கள் சதீஷ், ஜெய்சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். #VinayagarChathurthi
    ×