search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் - வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
    X

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம். 

    இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் - வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

    • சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சட்டமன்ற உறுப்பினர் வீட்டை இன்று முற்றுகையிட போவதாக இந்து முன்னணியினர் அறிவித்திருந்த நிலையில் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் 15 வேலம்பாளையம் மகாலட்சுமி நகர் பகுதியில் இஸ்லாமியர்களின் பள்ளிவாசல் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் குடியிருப்பதற்கான உரிமம் மட்டுமே பெற்றுவிட்டு மத வழிபாட்டுத் தலமாக மாற்றியதாக அப்பகுதி பொதுமக்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது .

    இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த வியாழக்கிழமை பள்ளிவாசலுக்கு அதிகாரிகள் சீல் வைக்க சென்றதை அடுத்து திருப்பூர் மாநகரம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றது. இதனை அடுத்து நீதிமன்றம் 3 நாள் அவகாசம் வழங்கியது .இந்நிலையில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில். இந்து முன்னணியினர் தூண்டுதலின் பேரில்தான் வழக்கு தொடுக்கப்பட்டிருந்ததாகவும் பள்ளிவாசலுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொண்டால் பதற்றமான சூழல் ஏற்படும் என கடிதம் அனுப்பி இருந்தார்/

    அதில் இந்து முன்னணி குறித்து அவதூறாக குறிப்பிடப்பட்டிருந்ததாக இந்து முன்னணியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர் . இந்நிலையில் இந்து முன்னணி குறித்து அவதூறாக செய்திகளை பரப்பிய சட்டமன்ற உறுப்பினரை கண்டிக்கும் வகையிலும் உடனடியாக உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பள்ளிவாசலுக்கு சீல் வைக்க வேண்டும் என வலியுறுத்தியும் புதிய பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாநில செயலாளர் கிஷோர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர் வீட்டை இன்று முற்றுகையிட போவதாக இந்து முன்னணியினர் அறிவித்திருந்த நிலையில் வீட்டிற்கு மாநகர காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×