search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சார பயணம், பொதுக்கூட்டம்
    X

    காடேஸ்வர சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    தேனி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சார பயணம், பொதுக்கூட்டம்

    • கூட்டத்திற்கு இந்து முன்னணி தேனி மாவட்ட பொது செயலாளர் முருகன் தலைமை தாங்கினார்.
    • இக்கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சார பயணம், பொதுக்கூட்டம் தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்து முன்னணி தேனி மாவட்ட பொது செயலாளர் முருகன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் உமையராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், வேதபுரி சித்பவானந்த ஆசிரமம் ஸ்வாமி ஞானசிவானந்தர் ஆகியோர் கலந்து கொண்டு பிரச்சார பயணத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினார்கள்.

    முன்னதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சார பயணம் கடந்த 28-ம் தேதி திருச்செந்தூரில் இருந்து தொடங்கி இன்று தேனி வந்து அடைந்தது.

    வருகின்ற 31-ம் தேதி சென்னையில் இந்த பிரச்சார பயணம் நிறைவடைகிறது. இந்துக்களின் உரிமையை மீட்கவே இந்த பிரச்சார பயணம் நடத்தப்படுகிறது. இந்து முன்னணி அரசியல் கட்சி அல்ல இருப்பினும் அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு அக்கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர வைப்பார்கள். தி.மு.க அரசு இந்து கோவில்களை திட்டமிட்டு இடித்து வருகிறது.

    ஆனால் சர்ச், மசூதி போன்றவற்றை இடிக்கவில்லை. தி.மு.க இந்து விரோத அரசு தான். தமிழக- கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோவிலில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். சிதம்பரம் நடராஜர் கோவில் முறையாக ஆய்வு செய்யவில்லை. இது தி.மு.க-வின் ஊழலுக்கு வழிவகுக்கும் வேலை.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி காலத்தில் சர்க்கரையை எறும்பு சாப்பிட்டது என்றும், சாக்கு பையை கரையான் சாப்பிட்டது என்றும் சொல்லி ஊழல் செய்தனர். அதுபோல தான் கோவில் நகைகளை உருக்குவது. எனவே கோவில் நகைகளை உருக்கும் முடிவை கைவிட வேண்டும்.

    தி.மு.க அரசு இஸ்லாமியர்களுக்கு சாதகமாக உள்ளது. அதுபோல திராவிட மாடல் ஆட்சி என்பது இந்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஆட்சி. தமிழகத்தில் உள்ள அனைவரும் திராவிடர்கள் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×