search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "exam"

    • வெள்ளாளன்விளையில் கணிதம் பிரிவில் போட்டி தேர்வு நடந்தது.
    • தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்குட்பட்ட வெள்ளாளன்விளையில் ஓய்.பி.ஏ. சார்பில் போட்டி தேர்வு எழுதுபவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு கணிதம் பிரிவில் போட்டித் தேர்வு நடந்தது. இத்தேர்வில் சுடலைமணி முதலிடமும், நாராயணமூர்த்தி இரண்டாமிடமும், பாலசுப்பிரமணியன் மூன்றாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ஓய்.பி.ஏ. தலைவர் ஜான்கென்னடி டி.எஸ்.பி, மத்திய அரசு ஊழியர் ரமேஷ், ராமலிங்கம் ஆகியோர் வழங்கினர். போட்டித் தேர்வினை வணிகவரித்துறை அதிகாரி ஜேக்கப், பால்வளத்துறை அதிகாரி பிரவீன், வி.ஏ.ஓ.க்கள் முத்துராமன், டேனியல், ஜெயசந்திரன், பிஷப் அசரியா நினைவு ஆங்கில பள்ளி முதல்வர் லீதியால் தனசீலி, ஆசிரியை ஷிபா ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர். பரிசுகளை உதிரமாடன்குடியிருப்பை சேர்ந்த ரவி, ஜெயசந்திரன் ஆகியோர் வழங்கினர்.

    • முதல் நிலை தேர்வு எழுத நாடு முழுவதும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
    • அனைத்து மையங்களிலும் செல்போன் ஜாமர் கருவி பொருத்தப்பட்டிருந்தது.

    கோவை,

    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணை யம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டு தோறும் குடிமைப்பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்படும். இதில் பட்டதாரிகள் பெறும் மதிப்பெண்களை வைத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

    அதன்படி இந்த ஆண்டு 1,105 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் யுபிஎஸ்சி வெளியிட்டது. இதில் முதல் நிலை தேர்வு எழுத நாடு முழுவதும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் 73 நகரங்களில் இன்று நடந்தது.

    கோவை மாவட்டத்தில் 7,742 பேர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 18 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. காலையில் முதல் தாள் பொது அறிவு தேர்வு நடந்தது. மதியம் 2-ம் தாள் திறனறிவு தேர்வு நடக்கிறது.

    தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் மையத்துக்குள் வர அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். நேரம் கடந்து வந்தவர்களை மைய கண்காணிப்பாளர்கள் தேர்வு மையத்துக்குள் நுழைய அனுமதி மறுத்து விட்டனர். இதனால் வெகுதொலைவில் இருந்து வந்த பலர் தேர்வு எழுத முடியாமல் போனது.

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் மாவட்ட கலெக்டர் தலைமையில் 7 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தாசில்தார் அந்தஸ்திலான அதிகாரிகள் 18 தேர்வு மையங்களுக்கும் தலா ஒருவர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

    தேர்வையொட்டி தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. அனைத்து மையங்களிலும் செல்போன் ஜாமர் கருவி பொருத்தப்பட்டிருந்தது. தடையில்லா மின்சார வசதியும் செய்யப்பட்டு இருந்தது. தேர்வர்கள் மையங்களுக்கு செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் காந்திபுரம், உக்கடம், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் பஸ்நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    • மதுரையில் 17 மையங்களில் குடிமைப்பணி தேர்வு நடந்தது.
    • 15 கல்வி மையங்களில் 17 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    மதுரை

    மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் குடிமைப்பணிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு மதுரை மாவட்டத்தில் 17 மையங் களில் இன்று நடந்தது. இதில் 6 ஆயிரத்து 882 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். மதுரை மாவட்டத்தில் 15 கல்வி மையங்களில் 17 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை 9.30 முதல் 11.30 மணி வரையும், மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும் தேர்வு நடந்தது.

    • யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வு எழுத 2,211 பேர் வரவில்லை
    • 14 மையங்களில் தேர்வு நடைபெற்றது

    திருச்சி,

    நாடு முழுவதும் யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, வேலூர் ஆகிய நகரங்களில் இந்த தேர்வு நடந்தது.திருச்சி மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகரில் 14 மையங்களில் இந்த தேர்வுகள் இன்று நடந்தன. இந்த மையங்களில் மட்டும் 5 ஆயிரத்து 31 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இவர்களில் 2,820 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 2,211 பேர் தேர்வெழுத வரவில்லை. ஒட்டுமொத்தமாக விண்ணப்பித்தவர்களில் 56 சதவீதத்தினர் மட்டுமே தேர்வை எதிர்கொண்டு இருக்கிறார்கள். 44 சதவீதம் பேர் தேர்வெழுத முன் வரவில்லை. இது அதிகப்படியான சதவீதமாக உள்ளது.

    மதுரையில் நாளை மறுநாள் நடக்கும் யூ.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வு எழுத 8,420 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட கலெக்டர்அனீஷ் சேகர் தலைமையில் நாளை மறுநாள் (5-ந் தேதி) அன்று நடைபெறவுள்ள குடிமைப் பணி முதன்மைத் தேர்வு தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்  நடைபெற்றது. இதில் கலெக்டர் பேசியதாவது:-

    இந்தியக் குடிமைப் பணி என்பது மத்திய, மாநில அரசுகளின் கீழ் உள்ள அரசுப்பணிகளை மேலாண்மை செய்யும் முக்கிய பணியாகும். பெரும்பாலான இளைஞர்கள் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று அரசின் உயர் பதவிகளில் பணியாற்றிட வேண்டும் என்பதை இலட்சிமாக கொண்டு தேர்விற்காக கடுமையாக தங்களை தயார் செய்கின்றனர். 

    இத்தேர்வானது முதன்மைத் தேர்வு, ஆளுமைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடத்தப்படும். அதன்படி, குடிமைப் பணிகள் தேர்வாணையத்தின் மூலம் நாளை மறுநாள் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை, பிற்பகல் 02.30 மணி முதல் 04.30 மணி வரை என இரண்டு அமர்வுகளாக  குடிமைப் பணி முதன்மைத் தேர்வு நடைபெறவுள்ளது. 

     மதுரை மாவட்டத்தில் இத்தேர்விற்காக கண்பார்வை மாற்றுத்திறன் கொண்ட 28 நபர்கள் உட்பட மொத்தம் 8,420 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு பணிகளுக்காக 17 பகுதிகளில்  21 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு துணை கலெக்டர்நிலை அலுவலர் தலைமையில் 6 குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. 

    தேர்வில் முறைகேடு ஏதும் ஏற்படாமல் கண்காணித்திட 21 வட்டாட்சியர் நிலை அலுவலர்களும், 21 துணை வட்டாட்சியர் நிலை என 42 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேர்வு நடைபெறும் மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல, இத்தேர்வினை சுமூகமான முறையில் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மாறன் அவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    சேலம், நாமக்கல் மாவட்ட பட்டதாரிகள் எழுதிய பயோடெக்னாலஜி தகுதித் தேர்வு முடிவு வெளியீடு மதிப்பெண் அட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
    சேலம்:

    இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை  பட்டதாரி  பயோடெக்னாலஜி திறன் தேர்வு (GAT - B) மற்றும்  பயோடெக்னாலஜி தகுதித் தேர்வு (BET) - 2022  அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து கணினி வழி முறையில்  இந்தியா முழுவதும் 56 நகரங்களில் 23.04.2022 அன்று  தேர்வு நடத்தியது.  

     சமூக இடைவெளியை கடைபிடித்து, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு  தேர்வுகள் நடத்தப்பட்டன.

    பட்டதாரி பயோடெக்னாலஜி திறன் தேர்வுக்கு (GAT-B) 6359 பெண்களும், 3219 ஆண்களும்  என மொத்தம் 9578 பேர் விண்ணப்பித்தனர். இதில் 5722 பெண்கள்,  2955 ஆண்கள் என  8677 பேர் தேர்வு எழுதினர்.

    இதேபோல்  பயோடெக்னாலஜி தகுதித் தேர்வு (BET)  எழுத பெண்கள்- 9448, ஆண்கள்- 4251 என 13699 பேர்  பதிவு செய்தனர். இதில் பெண்கள்- 8013,  ஆண்கள்- 3758 என மொத்தம் 11771 பேர் தேர்வு எழுதினார்கள். குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த முதுநிலை பட்டதாரிகள் பலர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள்.

    இந்த நிலையில் தேசிய தேர்வு முகமை தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது.  விண்ணப்பதாரர்கள் தேர்வில் எடுத்த  மதிப்பெண்கள்  தேசிய தேர்வு முகமை இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப எண், பாஸ்வேர்டு கொடுத்து  பார்க்கலாம்.  மேலும் ரேங்க் கார்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    தேர்ச்சி பெற்றவர்கள்  மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறையில்  முதுகலை படிப்பில் சேர அட்மிஷன் வழங்கப்படுகிறது. இதைத்தவிர   பயோடெக்னாலஜி மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் பங்கேற்று ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பயோடெக்னாலஜி ஆராய்ச்சியைத் தொடர உதவிகளும் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது. சமூக அறிவியல் தேர்வை மாணவர்கள் உற்சாகமாக எழுதினர்.
    Tirunelveli News: 10-th Exam Was Finished

    Tirunelveli, S.S.L.C., Exam, Finish

    தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு  இன்றுடன் நிறைவடைந்தது

    பாளையில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு முடிந்த மகிழ்ச்சியில் துள்ளி குதித்த மாணவர்கள்.

    தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது. சமூக அறிவியல் தேர்வை மாணவர்கள் உற்சாகமாக எழுதினர்.

    பாளை, பள்ளி தேர்வு, உற்சாகம்

    நெல்லை:

    தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி.,  பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடக்கவில்லை.

    நடப்பு  ஆண்டு கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில்,  எஸ்.எஸ்.எல்.சி.,  பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள்  நடத்தப்பட்டுள்ளன. 

    இதில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள  92    மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெற்றது.

    இம்மையங்களில் அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதிப்பள்ளிகளை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வுகள் எழுதினர். 

    கடைசி நாளான இன்று (30-ந்தேதி) திங்கட்கிழமை  சமூக அறிவியல் பாடம் தேர்வு நடைபெற்றது. காலை  10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிவடைந்தது. 

    தேர்வு  நிறைவடைந்ததை அடுத்து தேர்வு மையங்களில் இருந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் தங்கள் வகுப்பில்  பயின்றவர்களை சந்தித்து,   ஒருவருக்கொருவர் வாழ்த்து  தெரிவித்தனர்.

    மேலும் புகைப்படம் எடுத்தும்,  சீருடைகளில் மாறி மாறி மை தெளித்தும், செல்போன் நம்பர் பரிமாறிக்கொண்டும்   மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
    மத்திய அரசு மாநில தொழிலாளர் காப்பீட்டு கழகம் சார்பில் நடைபெற உள்ள பேஸ்-2 முதன்மை தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
    சேலம்:

    இந்திய அரசின் மாநில தொழிலாளர் காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ.சி.) சார்பில் தொழில் நுட்பம் சாராத மல்டி டாஸ்கிங் ஊழியர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டது. இதன் முதற்கட்ட பேஸ்-1 தேர்வு சமீபத்தில் கம்ப்யூட்டர் வழியாக  நடந்து முடிந்தது.  

     இதற்காக சேலம் சிவதாபுரம்  உள்பட பல்வேறு இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற ஏராளமான இளம்பெண்கள், இளை ஞர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். ஒரு வாரத்திற்கும் மேலாக  இந்த தேர்வு நடைபெற்றது. 

    இதனைத் தொடர்ந்து பேஸ்-1 தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில்  விண்ணப்பதாரர்கள்  எடுத்த  மதிப்பெண் அவர்களுடைய பதிவு எண், வரிசை எண்களுடன் இடம்பெற்றுள்ளன. மேலும் ஒவ்வொரு பிரிவுக்கும் கட்- அப் மதிப்பெண் எவ்வளவு ? என அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஹால்டிக்கெட் வெளியீடு இந்த நிலையில் பேஸ்-1 முதன்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று நிர்ணயிக்கப்பட்ட கட்-ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு  பேஸ்-2 முதன்மை தேர்வு எழுதுவதற்கான ஹால்டிக்கெட் இ.எஸ்.ஐ.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

    இந்த இணையதளத்தில் பதிவு எண் அல்லது வரிசை எண் மற்றும் கடவுச் சொல் கொடுத்து ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அடுத்த மாதம் 5-ந்தேதி வரை மட்டுமே ஹல்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய முடியும்.
    சேலத்தில், நாளை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடம் தேர்வு நடைபெறும்.
    சேலம்:

    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.  சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள  182    மையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 80-க்கும் மேற்பட்ட  மையங்களிலும் தேர்வு நடைபெற்று வருகின்றன.

    அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதிப்பள்ளிகளை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வுகள் எழுதி வருகின்றனர். 

    சமூக அறிவியல் தேர்வு இதனைதொடர்ந்து  நாளை (30-ந்தேதி) சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடைபெறுகிறது.  மாணவ- மாணவிகள் சமூக அறிவியல் பாடத்தை  படிக்கும் விதமாக  கடந்த 27-ந்தேதி முதல்  இன்று வரை  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    நாளை நடைபெற உள்ள சமூக அறிவியல் பாடத்துடன் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவடைகின்றன.
    நாளை மறுநாள் பிளஸ்-2 தொழில் பாடம் தேர்வு (28-ந்தேதி) நடக்கிறது.
    சேலம்:

    தமிழகம் முழுவதும்  கடந்த (5-ந்தேதி) வியாழக்கிழமை  பிளஸ்-2 பொதுத்–தேர்வு  தொடங்கியது.  இந்த தேர்வு சேலம்  மாவட்டத்தில் 154 மையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் 82 மையங்களிலும்  நடைபெற்று வருகின்றன. 

    கடந்த 23-ந்தேதி (திங்கட்கிழமை)  உயிரியல், தாவரவியல், வரலாறு,  வணிக கணிதம் மற்றும் புள்ளி விபரங்கள், அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், அடிப்படை எலக்ட்ராணிக்ஸ் என்ஜினீயரிங்,  அடிப்படை சிவில் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங்,  டெக்ஸ்டைல்  டெக்னாலஜி, அலுவலக நிர்வாகம் மற்றும் செயலக பதவி உள்ளிட்ட 11 பாடங்களுக்கு தேர்வு நடைபெற்றன.

    இதனால்   12-ம் வகுப்பு ெதாழில் பாட பிரிவை தவிர மற்ற அனைத்து பிரிவுகளுக்கும் அன்றைய தேதியில்  தேர்வு முடிவடைந்து விட்டது .  இதனால் 12-ம்  வகுப்பு  மாணவ- மாணவிகள் 23-ந்தேதி அன்று மகிழ்ச்சியுடன் ஒருவருக்ெகாருவர் வாழ்த்து  ெதரிவித்தபடி வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

    இதனை தொடர்ந்து நாளை மறுநாள் (28-ந்தேதி) பிளஸ்-2  தொழில் பாட பிரிவுக்கு தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுடன் பிளஸ்-2 பொதுத் தேர்வு நிறைவடைகிறது.
    ராமநாதபுரத்தில் 10-ம் வகுப்பு கணித தோ்வை 879 போ் எழுதவில்லை.
    ராமநாதபுரம்

    தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி முதல் 10-ம் வகுப்புக்கான அரசு பொதுத் தோ்வு நடந்து வருகிறது. நேற்று (24-ந்தேதி) கணித தோ்வு நடைபெற்றது. 

    இந்த தோ்வுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் 17ஆயிரத்து 180 போ் அனுமதிக்கப்பட்டிருந்தனா். அவா்களில் 16 ஆயிரத்து 349 போ் தோ்வு எழுதினா். 831 போ் தோ்வு எழுதவில்லை. 

    தனித்தோ்வா்கள் 303 போ் கணித தேர்வு எழுதுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அவா்களில் 255 பேர் எழுதினா். 48 போ் தோ்வு எழுதவில்லை. 

    பள்ளி மாணவ, மாணவியா் மற்றும் தனித் தோ்வா்கள்  மொத்தம் 879 போ் கணித தோ்வு எழுதவில்லை என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    தேர்வில் 1, 2 மதிப்பெண் வினாக்கள் எளிதாகவும், 5 மதிப்பெண் வினாக்களில் ஓரிரண்டு கடினமாக இருந்ததாகவும் மாணவ, மாணவிகள் கூறினா். அரசுப் பள்ளிகளில் பயில்வோா் தோ்ச்சி பெற்றாலும் கூடுதல் மதிப்பெண் பெறுவது கடினம் என்று ஆசிரியா்கள் தெரிவித்தனர்.
    சேலம், நாமக்கல்லில் சி.பி.எஸ்.இ.10-ம் வகுப்பு பொது தேர்வு நாளையுடன் முடிவடைகிறது.
    சேலம்:

    இந்திய அரசு கல்வித்துறையின் கீழ் செயல்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) அனுமதி பெற்று சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இயங்கி வருகின்றன.  

    இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் சி.பி.எஸ்.இ.    10-ம் வகுப்பு  மாணவ- மாணவிகளுக்கு  பகுதி-2 பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து, இன்று   (திங்கட்கிழமை) கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடத்திற்கான  தேர்வு நடைபெற்றது. 

    இந்த தேர்வு காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு  நாளை (24-ந்தேதி) தகவல்  தொழில்நுட்பம் பாடத் தேர்வுடன் முடிவடைகிறது.

    இந்த தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கி  11.30 மணி அளவில் நிறைவடைகிறது.
    ×