search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "exam"

    • 2024 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. புதிய பிரதமரை தேர்வு செய்து நீட் தேர்வை ஒழிக்கும் என்று பெரம்பலூரில் ஆ.ராசா தெரிவித்துள்ளார்
    • தி.மு.க. இளஞைரணி சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பேச்சு

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் நீட்தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் புதுபஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரும், நகராட்சி துணை தலைவருமான ஹரிபாஸ்கர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தங்ககமல், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட மருத்துவ அணி மாநில துணை செயலாளர் டாக்டர் வல்லபன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார் ஆகியோர் பேசினர்.

    திமுக துணை பொதுச்செயலாளர் ராஜா எம்.பி. கலந்து கொண்டு பேசுகையில், மத்தியில் தர்பார் ஆட்சி நடத்தும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா கும்பலை வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் விரட்டியடிப்போம், புதிய பிரதமரை தேர்வு செய்யும் இடத்தில் தி.மு.க. இருக்கும். அப்போது நீட் ஒழிக்கப்படும் என தெரிவித்தார்.

    மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் துரைசாமி, மாவட்ட அவை தலைவர் நடராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர், நூருல்ஹிதா, மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜ்குமார், ஜெகதீசன், நல்லதம்பி, மதியழகன், ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் முகுந்தன், அண்ணாதுரை, டாக்டர் செங்குட்டுவன், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் மாரிக்கண்ணன், நகராட்சி தலைவர் அம்பிகா, யூனியன் சேர்மன் மீனாம்பாள், ராமலிங்கம், பிரபா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல்கரீம் வரவேற்றார். முடிவில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ரினோபாஸ்டின் நன்றி கூறினார்.


    • இந்த தோ்வு காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்.
    • காவல்துறை பணிக்கு தயாராகுபவர்கள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு சீருடைப்பணியாளா் தோ்வாணையத்தால் காவல் துறையில் காலியாகவுள்ள 750 சாா்பு ஆய்வாளா் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலா்) பணிக்கான தோ்வு வரும் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் நடத்தப்படவுள்ளது.

    இதையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக மைய வளாகத்தில் பொது மற்றும் காவல் துறை விண்ணப்பதாரா்களுக்கு இலவச முழு மாதிரித்தோ்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை ) நடைபெறவுள்ளது.

    இத்தோ்வு காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்.

    விருப்பமுள்ள தோ்வா்கள் https://forms.gle/F7LLTXNrFonqYRK68 என்ற கூகுள் பாா்ம் லிங்கில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த காவல் துறை பணிக்குத் தயாராகும் இளைஞா்கள் தோ்வின் பெயா் மற்றும் தங்களது பெயரை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும், விவரங்களை 04362 - 237037 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாள்களில் தொடா்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் கீழப்பெரம்பலூர் சிறந்த ஊராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது
    • மாவட்ட கலெக்டர் கற்பகம் சான்றிதழை வழங்கினார்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம்சீகூர் அடுத்துள்ள கீழப்பெரம்பலூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக சத்யா காமராஜ் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற 77- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஊராட்சி மன்ற தலைவர்களை சிறந்த தலைவர்களாக தேர்ந்தெடுத்து பாராட்டியும் சான்றிதழ்களையும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் வழங்கினார்.

    மேலும் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் காடூர் ஊராட்சியையும் சிறந்த ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்ந்தெடுத்து மாவட்ட ஆட்சியர் கற்பகம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா காமராஜ்க்கு சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்தினார்கள் .இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வராணி, வார்டு உறுப்பினர்கள் ஜான்சி ராணி தமிழ் செல்வன், பாலு, சுப்பிரமணியன் தொட்டி , புவனேஷ்வரி, ஜோதி, சீதா, ஊராட்சி செயலர் சங்கர் மற்றும் தூய்மை பணியாளர்கள் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

    • மாநில கைப்பந்து போட்டி அரவக்குறிச்சி கல்லூரி மாணவர்கள் தேர்வு
    • மாணவர்களை கல்லூரி முதல்வர், உடற்கல்வித்துறை இயக்குநர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

    கரூர் 

    திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு, கரூர் மாவட்ட அணியில் விளையாட, அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.

    தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் மாநில அளவிலான ஆண்கள் கைப்பந்து போட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் நடை பெற உள்ளது. இப்போட்டியில், அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 5 பேர், கரூர் மாவட்ட கைப்பந்து அணியில் விளையாட தேர்வு பெற்றுள்ளனர். இந்த மாணவர்களை கல்லூரி முதல்வர், உடற்கல்வித்துறை இயக்குநர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்பு களில் சேர க்யூட் எனப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு நடத்தப்படு கிறது.
    • இந்த நுழைவு தேர்வு கடந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

    சேலம்:

    நாட்டில் உள்ள மத்திய, மாநிலத்திற்கு உட்பட்ட 200 பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்பு களில் சேர க்யூட் எனப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு நடத்தப்படு கிறது. இந்த நுழைவு தேர்வு கடந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

    சேலம், நாமக்கல்

    மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) இந்த தேர்வை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான க்யூட் தேர்வை எழுத 14 லட்சம் மாணவர்கள் விண்ணப் பித்தனர். நாடு முழுவதும் 271 நகரங்களில் உள்ள 447 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

    இதில் பிளஸ்- 2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவி கள் பங்கேற்று எழுதினர். குறிப்பாக சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்தும் பலர் எழுதினர்.

    17-ந்தேதி வெளியாகிறது

    இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வருகிற 17-ந்தேதி வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானிய குழுவின் தலைவர் ஜெக தீஷ்குமார் தெரிவித் துள்ளார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் 2 போட்டி தேர்வு மையங்கள் செயல்படுகிறது
    • அமைச்சர்களின் முயற்சியினால் 2 போட்டித் தேர்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர விண்ணப் பிக்காத மாணவ, மாணவிகளுக்கு "உயர்வுக்கு படி" என்ற உயர்கல்விக்கான வழிகாட்டுதல் முகாம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தனர்.

    இந்த முகாமில் 52 மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு கல்லூரிகளில் உயர்கல்வி பயில்வதற்கான சேர்க்கை ஆணைகளை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கலெக்டர் கூறியதாவது:-

    இந்திய அளவில் தமிழ் நாட்டில் தான் 52 விழுக்காடு மாணவ மாணவியர்கள் உயர்கல்விக்கு செல்கின்ற னர். இந்த உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவி களின் சதவீதத்தை மேலும் அதிகப்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர், நான் முதல்வன் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்.

    அதில் உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சி மூலம் 12-ம் வகுப்பு படித்த மாணவர்க ளுக்கு பல்வேறு உயர்கல்வி வாய்ப்புகளில் சேருவ தற்கான ஆணைகள் வழங்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 3 வருவாய் கோட்டங்களில் உயர்வுக்கு படி நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள் ளது. ஏற்கனவே அருப்புக் கோட்டை, சிவகாசி கோட்டங்களில் நடத்தப்பட்டு, தற்போது சாத்தூர் கோட்டத்தில் நடைபெறுகிறது.

    விருதுநகர் மாவட்டம் பள்ளி தேர்ச்சி விகிதத்தில் தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக தொடர்ந்து வருகிறது. அதுபோல் உயர்கல்வி பயிலும் மாண வர்களின் எண்ணிக்கையில் சிறந்த மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமைச்சர்கள் செயலாற்றிவருகிறார்கள்.

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மாவட்டத்திற்கு ஒரு போட்டித்தேர்வு பயிற்சி மையம் உருவாக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர்களின் முயற்சியினால் 2 போட்டித் தேர்வு மையங்கள் செயல் பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 51 வயதில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய கரூர் சத்துணவு பெண் ஊழியர்
    • மகன் பாடம் கற்று தந்ததாக பெண் பெருமிதத்துடன் கூறினார்

    கரூர்,

    கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஹீலா பானு (வயது 51). இவர் பூவம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு சமையலராக பணிபுரிந்து வருகிறார். இவர் 1989-ம் ஆண்டு 9-ம் வகுப்பு முடித்துவிட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி செல்லவில்லை. கடந்த 12 ஆண்டுகளாக சமையலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால்தான் சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு தகுதி பெற முடியும் என்ற காரணத்தால், 10-ம் வகுப்பு தேர்வு எழுத முடிவு செய்துள்ளார்.இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தனிதேர்வராக தேர்வு எழுத விண்ணப்பித்து, தேர்வு எழுதியுள்ளார். இதில் ஆங்கிலம், சமூக அறிவியல் ஆகிய 2 பாடங்களில் தேர்ச்சி பெற்றார். தமிழ், கணிதம், அறிவியல் பாடங்களில் தோல்வி அடைந்து இருந்தார். இதனையடுத்து தற்போது நடைபெற்று வரும் துணைத்தேர்வில் தோல்வி அடைந்த 3 பாடங்களுக்கு விண்ணப்பித்தார். பின்னர் அதில் தமிழ், கணிதம் ஆகிய தேர்வு எழுதினார். நேற்று கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் பாடத்தேர்வையும் எழுதி உள்ளார்.இதுகுறித்து ராஹீலா பானு கூறும்போது, நான் 10-ம் வகுப்பு தேர்வு எழுத எனது மகன் சாகுல் அமீது, பல்வேறு முயற்சிகளை எடுத்து எனக்கு பாடம் கற்றுக்கொடுத்து, தேர்விற்கு விண்ணப்பித்து கொடுத்தார் என்றார்.

    • மொத்தம் 334 அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    கோவை,

    இன்று நாடு முழுவதும் யு.பி.எஸ்.சி. தேர்வு நடந்து வருகிறது. கோவை மாவட் டத்தில் 8 மையங்களில் இந்த தேர்வானது நடந்தது.

    கோவையில் 8 மையங்களில் யுபிஎஸ்சி தேர்வு நடைபெற்றது. இதனையொட்டி காலையிலேயே தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வந்திருந்தனர்.

    தேர்வு மையத்திற்கு வந்ததும், அவர்களின் ஹால் டிக்கெட் உள்ளிட்டவற்றை சரி பார்த்து விட்டு தேர்வு அறைக்கு அனுப்பினர்.பின்னர் தேர்வறைக்கு சென்று தேர்வர்கள் தேர்வினை எழுதினர்.

    இந்த தேர்வினையொட்டி மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் துணை ஆட்சியர் நிலையில் 2 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள், வட்டாட்சியர் நிலையில் 8 தேர்வு மையங்களுக்கு தலா ஒரு தேர்வு மைய உதவி கண்காணிப்பாளர்கள், 171 அறைக் கண்காணிப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமும், 163 அறைக் கண்காணிப்பாளர்கள் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மூலமும் என மொத்தம் 334 அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தேர்வின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் துணை செயலர் நிலையில் அலுவலர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் தேர்வு அறைகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டனர்.

    ேதர்வினையொட்டி தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு வசதியாக கோவை உக்கடம், சிங்காநல்லூர், சூலூர், காந்திபுரம் பஸ் நிலையங்களில் இருந்து பஸ்களும் இயக்கப்பட்டன.

    • சிறை உதவி அலுவலர் போட்டி தேர்வு நடந்தது
    • 2 மையங்களில் நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 59 உதவி சிறை அலுவலர் காலிப்பணியிடங்களுக்கு கணினி வழியாக ஆன்லைன் கொள்குறி வகை போட்டி தோ்வு நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த தேர்வினை எழுத மொத்தம் 221 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு தேர்வு எழுத மையங்களாக பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியும், ரோவர் பொறியியல் கல்லூரியும் ஒதுக்கப்பட்டன. தேர்வாளர்கள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வையும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வையும் எழுதினர்.

    • இத்தேர்வில் ஆகஸ்டு 1ந் தேதி அன்று 12.5 வயது பூர்த்தி அடைந்தவர் பங்கேற்கலாம்.
    • தேர்வு கட்டணமாக 125, பதிவு கட்டணமாக 70 ரூபாய் சேர்த்து 195 ரூபாய் செலுத்த வேண்டும்.

    திருப்பூர்:

    ஆகஸ்டு 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 8-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு நடக்கிறது. இத்தேர்வில் ஆகஸ்டு 1ந் தேதி அன்று 12.5 வயது பூர்த்தி அடைந்தவர் பங்கேற்கலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு எழுதுவோர் பதிவு செய்யலாம். வருகிற 28ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது.

    தேர்வு கட்டணமாக 125, பதிவு கட்டணமாக 70 ரூபாய் சேர்த்து 195 ரூபாய் செலுத்த வேண்டும். இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் விரிவான தகவல்களை மேற்கண்ட இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் என கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

    • விராலிமலையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மகன் நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்
    • சாதனை மாணவருக்கு பாராட்டுகள் குவிகின்றனர்

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தெற்கு ஆசாரி தெருவைச் சேர்ந்தவர் அறிவுநிதி (வயது 17). இவர் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாய் தங்கமணி ஆகிய இருவரும் கூலி தொழிலாளிகள் ஆவார்கள். மிகவும் ஏழ்மை நிலையிலும் நன்கு படித்து நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 525 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார்.

    அதனைத் தொடர்ந்து மருத்துவ படிப்பில் சேரவேண்டும் என்று முடிவெடுத்து நீட் தேர்வுக்காக விடாமுயற்சியுடன் படித்ததன் பயனாக நீட் தேர்வில் 348 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். இதுகுறித்து அறிவுநிதி கூறியதாவது:- எனது பெற்றோர்கள் கூலி வேலைக்குச் சென்று மிகவும் கஷ்டப்பட்டு என்னை படிக்க வைத்தனர். சிறுவயது முதலே மருத்துவராக வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்து வந்த நிலையில் 11-ம் வகுப்பு படிக்கும் போதே நீட் தேர்வுக்காக படிக்க ஆரம்பித்து விட்டேன்.

    பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் உதவியுடன் நீட் தேர்வுக்கு படித்தேன். இருப்பினும் இன்னும் அதிகமான பயிற்சி தேவைப்படுகிறது என உணர்ந்த நான் சமூக வலைதளத்தில் தேடும்போது உயிரியல் பாடத்திற்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது. அதனை நான் நன்றாக பயன்படுத்திக் கொண்டேன். சமூக வலைத்தளத்தை முறையாக பயன்படுத்தினால் இது போன்ற வெற்றிகளும் கிடைக்கும் என்பதை தற்போது உணர்கிறேன்.

    இனிவரும் காலங்களில் நீட் தேர்வுக்கு என அரசாங்கமே இதுபோன்ற செயலியை உருவாக்கி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பட்சத்தில் இன்னும் நிறைய மாணவர்கள் தேர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீடு எனக்கு தற்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

    சேலத்தில் நடைபெற உள்ள உதவி பேராசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
    சேலம்:

    இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதியைப் பெற நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

    இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறவும் நெட் தேர்வு அவசியம். இந்தத் தேர்வுகள் இந்திய அரசின்  தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது.

    மொத்தம் 82 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. கணினி மூலமாக இந்தத் தேர்வு காலை, மாலை என 2 ஷிப்டுகளாக நடைபெறும். சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வு காகாபாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரியில் நடைபெறுவது வழக்கம்.

     
    இந்த நிலையில், டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022-ம் ஆண்டுக்கான யுஜிசி நெட் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  ேதர்வுக்கு  விண்ணப்பிப்பதற்கான  கடைசி நாள் இந்த மாதம்  20-ம் தேதி என அறிவித்து இருந்தது.

     இதனால் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
     
    இந்த நிலையில்  யூ.ஜி.சி. நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வருகிற 30-ந்தேதி வரை என   நீட்டித்து உள்ளது.  இந்த  தகவலை   யூ.ஜி.சி. சேர்மன் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.
    ×