என் மலர்
உள்ளூர் செய்திகள்

க்யூட் நுழைவு தேர்வு முடிவு வருகிற 17-ந்தேதி வெளியாகிறது
- பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்பு களில் சேர க்யூட் எனப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு நடத்தப்படு கிறது.
- இந்த நுழைவு தேர்வு கடந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.
சேலம்:
நாட்டில் உள்ள மத்திய, மாநிலத்திற்கு உட்பட்ட 200 பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்பு களில் சேர க்யூட் எனப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு நடத்தப்படு கிறது. இந்த நுழைவு தேர்வு கடந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.
சேலம், நாமக்கல்
மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) இந்த தேர்வை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான க்யூட் தேர்வை எழுத 14 லட்சம் மாணவர்கள் விண்ணப் பித்தனர். நாடு முழுவதும் 271 நகரங்களில் உள்ள 447 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
இதில் பிளஸ்- 2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவி கள் பங்கேற்று எழுதினர். குறிப்பாக சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்தும் பலர் எழுதினர்.
17-ந்தேதி வெளியாகிறது
இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வருகிற 17-ந்தேதி வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானிய குழுவின் தலைவர் ஜெக தீஷ்குமார் தெரிவித் துள்ளார்.






