search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police Work"

    • இந்த தோ்வு காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்.
    • காவல்துறை பணிக்கு தயாராகுபவர்கள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு சீருடைப்பணியாளா் தோ்வாணையத்தால் காவல் துறையில் காலியாகவுள்ள 750 சாா்பு ஆய்வாளா் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலா்) பணிக்கான தோ்வு வரும் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் நடத்தப்படவுள்ளது.

    இதையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக மைய வளாகத்தில் பொது மற்றும் காவல் துறை விண்ணப்பதாரா்களுக்கு இலவச முழு மாதிரித்தோ்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை ) நடைபெறவுள்ளது.

    இத்தோ்வு காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்.

    விருப்பமுள்ள தோ்வா்கள் https://forms.gle/F7LLTXNrFonqYRK68 என்ற கூகுள் பாா்ம் லிங்கில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த காவல் துறை பணிக்குத் தயாராகும் இளைஞா்கள் தோ்வின் பெயா் மற்றும் தங்களது பெயரை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும், விவரங்களை 04362 - 237037 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாள்களில் தொடா்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    காவலர் பணிக்கான வயது வரம்பை 24-ஆக உயர்த்த புதுவை அரசு முடிவு எடுத்து உள்ளது. ஓரிரு நாளில் வயது வரம்பு உயர்த்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகும்.
    புதுச்சேரி:

    புதுவை போலீஸ் துறையில் 390 காவலர் பணியிடங்களை நிரப்ப போலீஸ் துறை தலைமையகம் 2 தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது.

    உடல்தகுதி மற்றும் எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு நடக்க உள்ளது. போலீஸ் பணிக்கு பிளஸ்-2 கல்வித்தகுதி, 22 வயது உச்சவரம்பு என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பல ஆண்டுகள் கழித்து போலீஸ் பதவிக்கு தேர்வு நடப்பதால் வயது உச்சவரம்பை 2 ஆண்டுகள் உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து காவலர் பணிக்கான வயது வரம்பை 24 என்று உயர்த்த அரசு முடிவு எடுத்து உள்ளது. முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவின்பேரில் புதுவை போலீஸ் தலைமையக அதிகாரிகள் இதற்கான கோப்புகளை தயார் செய்து தலைமைச்செயலாளர் அஸ்வனிகுமாருக்கு அனுப்பி வைத்தனர். ஓரிரு நாளில் வயது வரம்பு உயர்த்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகும்.

    ×