search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் முயற்சி"

    • விருதுநகர் மாவட்டத்தில் 2 போட்டி தேர்வு மையங்கள் செயல்படுகிறது
    • அமைச்சர்களின் முயற்சியினால் 2 போட்டித் தேர்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர விண்ணப் பிக்காத மாணவ, மாணவிகளுக்கு "உயர்வுக்கு படி" என்ற உயர்கல்விக்கான வழிகாட்டுதல் முகாம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தனர்.

    இந்த முகாமில் 52 மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு கல்லூரிகளில் உயர்கல்வி பயில்வதற்கான சேர்க்கை ஆணைகளை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கலெக்டர் கூறியதாவது:-

    இந்திய அளவில் தமிழ் நாட்டில் தான் 52 விழுக்காடு மாணவ மாணவியர்கள் உயர்கல்விக்கு செல்கின்ற னர். இந்த உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவி களின் சதவீதத்தை மேலும் அதிகப்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர், நான் முதல்வன் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்.

    அதில் உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சி மூலம் 12-ம் வகுப்பு படித்த மாணவர்க ளுக்கு பல்வேறு உயர்கல்வி வாய்ப்புகளில் சேருவ தற்கான ஆணைகள் வழங்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 3 வருவாய் கோட்டங்களில் உயர்வுக்கு படி நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள் ளது. ஏற்கனவே அருப்புக் கோட்டை, சிவகாசி கோட்டங்களில் நடத்தப்பட்டு, தற்போது சாத்தூர் கோட்டத்தில் நடைபெறுகிறது.

    விருதுநகர் மாவட்டம் பள்ளி தேர்ச்சி விகிதத்தில் தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக தொடர்ந்து வருகிறது. அதுபோல் உயர்கல்வி பயிலும் மாண வர்களின் எண்ணிக்கையில் சிறந்த மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமைச்சர்கள் செயலாற்றிவருகிறார்கள்.

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மாவட்டத்திற்கு ஒரு போட்டித்தேர்வு பயிற்சி மையம் உருவாக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர்களின் முயற்சியினால் 2 போட்டித் தேர்வு மையங்கள் செயல் பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×