search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போட்டித் தேர்வு"

    • விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் மாதத்தில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
    • தொடக்கம் முதலே அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 163 கல்லூரிகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2024-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள ஆசிரியர் உள்ளிட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை, அப்பணிகளுக்கான ஆள் தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும் மாதம், போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் மாதம் ஆகியவை குறித்த விவரங்கள் கடந்த ஜனவரி மாதம் 10-ம் நாள் வெளியிடப்பட்டன.

    அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்படும். அதனடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் மாதத்தில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இது குறித்த அறிவிக்கையை எதிர்பார்த்து தகுதியுடைய தேர்வர்கள் காத்திருந்தனர்.

    ஆனால், பிப்ரவரி நிறைவடைந்து மார்ச் மாதத்தில் இரண்டாவது வாரமும் பிறந்துவிட்ட நிலையில் அறிவிக்கை வெளியாகாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தொடக்கம் முதலே அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 163 கல்லூரிகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இந்த கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 10,079 ஆகும். இவற்றில் சுமார் 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    தமிழ்நாட்டில் உயர்கல்வியின் தரத்தையும், வளர்ச்சியையும் உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. இதை உணர்ந்து அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிக்கையை, மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு பணியிடங்கள் குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.
    • 15 ஆயிரம் பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிடும் எனக் கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி நிரப்பி வருகிறது.

    குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்கள் அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன.

    இதற்கான ஆண்டு தேர்வு கால அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை வரும் டிசம்பர் 15-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    15 ஆயிரம் பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிடும் எனக் கூறப்படுகிறது. 30 வகையான போட்டித்தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது.

    • விருதுநகர் மாவட்டத்தில் 2 போட்டி தேர்வு மையங்கள் செயல்படுகிறது
    • அமைச்சர்களின் முயற்சியினால் 2 போட்டித் தேர்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர விண்ணப் பிக்காத மாணவ, மாணவிகளுக்கு "உயர்வுக்கு படி" என்ற உயர்கல்விக்கான வழிகாட்டுதல் முகாம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தனர்.

    இந்த முகாமில் 52 மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு கல்லூரிகளில் உயர்கல்வி பயில்வதற்கான சேர்க்கை ஆணைகளை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கலெக்டர் கூறியதாவது:-

    இந்திய அளவில் தமிழ் நாட்டில் தான் 52 விழுக்காடு மாணவ மாணவியர்கள் உயர்கல்விக்கு செல்கின்ற னர். இந்த உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவி களின் சதவீதத்தை மேலும் அதிகப்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர், நான் முதல்வன் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்.

    அதில் உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சி மூலம் 12-ம் வகுப்பு படித்த மாணவர்க ளுக்கு பல்வேறு உயர்கல்வி வாய்ப்புகளில் சேருவ தற்கான ஆணைகள் வழங்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 3 வருவாய் கோட்டங்களில் உயர்வுக்கு படி நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள் ளது. ஏற்கனவே அருப்புக் கோட்டை, சிவகாசி கோட்டங்களில் நடத்தப்பட்டு, தற்போது சாத்தூர் கோட்டத்தில் நடைபெறுகிறது.

    விருதுநகர் மாவட்டம் பள்ளி தேர்ச்சி விகிதத்தில் தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக தொடர்ந்து வருகிறது. அதுபோல் உயர்கல்வி பயிலும் மாண வர்களின் எண்ணிக்கையில் சிறந்த மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமைச்சர்கள் செயலாற்றிவருகிறார்கள்.

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மாவட்டத்திற்கு ஒரு போட்டித்தேர்வு பயிற்சி மையம் உருவாக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர்களின் முயற்சியினால் 2 போட்டித் தேர்வு மையங்கள் செயல் பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சிறை அலுவலர் (ஆண் மற்றும் பெண்) பதவிக்கான போட்டித் தேர்வு நாளை நடக்கிறது.
    • விதிமுறைகளை முழுமையாக படித்து கடைபிடிக்குமாறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    தருமபுரி,

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிறை அலுவலர் (ஆண் மற்றும் பெண்) பதவிக்கான போட்டித் தேர்வு நாளை நடக்கிறது.

    இது குறித்து கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிறை அலுவலர் (ஆண் மற்றும் பெண்) பதவிக்கான கொள்குறிவகைத்தேர்வு நாளை 26-ந்தேதி (திங்கட்கிழமை) முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இருவேளைகளில் பென்னாகரம் வட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இணையவழி முறையில் (Computer Based Exam) நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 410 தேர்வர்கள் தேர்வு எழுதவிருக்கின்றனர்.

    தேர்வு மையத்தில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன.

    தேர்வு மையத்தில் பேருந்துகள் நின்று செல்லும் வகையிலும், சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு முன்னதாக தேர்வு மையத்திற்கு செல்லவும், கடைசிநேர அலைச்சல்களை தவிர்க்குமாறும், தேர்வா ணைய விதிமுறைகளை முழுமையாக படித்து கடைபிடிக்குமாறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    • கலெக்டர் அரவிந்த் தகவல்
    • எஸ்.எஸ்.சி. தேர்விற்கு விண்ணப்பிக்க ஜனவரி 4-ந் தேதி கடைசி நாள்.

    நாகர்கோவில்:

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் எஸ்.எஸ்.சி. தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பணிகளுக்கான 4500 காலிப்பணியிடங்கள் உள்ளன.

    இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க ஜனவரி 4-ந் தேதி கடைசி நாள்.

    மேலும் அடுத்த ஆண்டு மத்திய அரசு பணியாளர் தேர்வாைணயத்தால் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராக விரும்பும் தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த 12 -ந் தேதி தொடங்கப்பட்டுள்ளது .

    இந்த பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது . மேலும் வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது . இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு போட்டோ மற்றும் ஆதார் கார்டு நகலுடன் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் அரவிந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • சென்னையில் 503 மையங்களில் 1 லட்சத்து 56 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள்.
    • தாமதமாக வந்தவர்களை தேர்வு எழுத அனுமதிக்காததால் மறியலில் ஈடுபட முயன்றனர்.

    சென்னை:

    அரசு துறைகளில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 301 குரூப்-4 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவித்து இருந்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வை 22 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகளும் தேர்வு எழுதினார்கள். அவர்களில் மொத்தம் 131 பேர் விண்ணப்பித்து இருந்தார்கள்.

    இந்த தேர்வு தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 639 மையங்களில் நடந்தது. சென்னையில் 503 மையங்களில் 1 லட்சத்து 56 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள்.

    லட்சக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் தேர்வு எழுத வந்ததால் அவர்கள் வசதிக்காக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மாநகரம், நகர்ப்புறங்களில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன.

    சென்னையில் வழக்கமான ஞாயிற்றுக்கிழமைகளில் 2500 பஸ்கள் இயக்கப்படும். இன்று 3 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வு மையங்கள் வழியாக சென்ற அனைத்து பஸ்களும் அந்த பகுதியில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.


    தேர்வு எழுத வந்தவர்களுக்கான கட்டுப்பாடுகள், விதிமுறைகள் முன்கூட்டியே தேர்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. தேர்வு 9 மணிக்கு தொடங்கும். ஆனால் 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வந்து விட வேண்டும். 8.59 மணிக்கு பிறகு வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பல இடங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் 9 மணிக்கு பிறகு தேர்வு எழுத வந்தார்கள் அவர்களை தேர்வு கூடத்துக்குள் அனுமதிக்கவில்லை.

    திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மற்றும் பொன்னேரியில் உள்ள உலக நாதன் கல்லூரி, ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி, பாரத் மெட்ரிக் பள்ளி, வேலம்மாள் பள்ளிஆகிய மையங்களில் தாமதமாக வந்தவர்களை அனுமதிக்காததால் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் எச்சரித்து விரட்டி விட்டனர்.

    சென்னை புதுக்கல்லூரி, நீலாங்கரையிலும் தாமதமாக வந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்களை அனுமதிக்கவில்லை. அவர்கள் தேர்வு எழுத முடியவில்லையே என்ற தவிப்புடன் சென்றனர்.

    காலை 9.30 மணி முதல் பகல் 12.30 வரை தேர்வு நடந்தது. முன்கூட்டியே தேர்வை எழுதி முடித்தவர்களும், 12.30 மணிக்கு பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.

    தேர்வு எழுதி முடித்த பிறகு ஓ.எம்.ஆர். தாளில் இடது கை பெருவிரல் ரேகையை ஒவ்வொரு வரும் பதிவு செய்தனர்.

    தேர்வில் முறைகேடுகளை தடுக்க 7689 மையங்களிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது.

    7689 தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் 1,10,150 கண்காணிப்பாளர்கள் 534 பறக்கும் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தார்கள். 

    ×