என் மலர்
நீங்கள் தேடியது "யுபிஎஸ்சி"
- நிதியுதவியுடன் மட்டுமல்லாமல், 'நான் முதல்வன்' குழு சிறந்த ஆசிரியர்களின் ஒத்துழைப்பையும் வழங்குகிறது.
- இது ஒரு நீண்டபயணம். இப்போது சாத்தியமாகி உள்ளது.
2025-ஆம் ஆண்டிற்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப்பணித் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் முதல் 10 இடங்களில் இடம்பெற்றிருந்தனர். அதில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடம்பிடித்தவர்தான் மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே. இவர் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சிப் பெற்றவர்.
இந்நிலையில் தனது இந்த வெற்றித் தொடர்பாக பேசியுள்ள அவர்,
"இந்திய அளவில் இரண்டாம் இடம்பிடித்தது ஆச்சரியமாக இருந்தது. நான் 2018-ல் கல்லூரி முடித்தேன். இது ஒரு நீண்டபயணம். இப்போது சாத்தியமாகி உள்ளது.
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்திற்கு நன்றிக்கூரவேண்டும். நான் இந்த திட்டத்தின் முதல் பேட்ச் மாணவி. 2024-ல், முதல்நிலைத் தேர்விற்கான (Prelims) நிதியுதவி வழங்கப்பட்டவர்களில் நானும் ஒருவளாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது 10 மாதங்களுக்கு மாதம் 7,500 ரூபாய் வழங்கினர். பின்னர், 2025-ல் நான் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, முதன்மைத் தேர்விற்காக (Mains) பயிற்சி பெற்றேன்; அப்போது சுமார் 25,000 ரூபாயும், நேர்முகத் தேர்விற்கு 50,000 ரூபாயும் நிதியுதவி அளித்தனர்.
இந்த நிதியுதவியுடன் மட்டுமல்லாமல், 'நான் முதல்வன்' குழு சிறந்த ஆசிரியர்களின் ஒத்துழைப்பையும் வழங்குகிறது. தமிழ்நாட்டில் கல்வி சார்ந்த ஆதரவு மிகப்பெரியது. நான் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். எனது அப்பா ஒரு தொழிலதிபர். என் அம்மா துணை கணித பேராசிரியர். " என தெரிவித்தார்.
- முதன்மைத் தேர்வு ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 31, 2025 வரை நடைபெற்றது.
- நேர்காணல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
2025ஆம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முதன்மைத் தேர்வை தொடர்ந்து நேர்காணல் முடிந்தநிலையில், இன்று முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு மொத்தம் 958 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்காக (IAS, IPS, IFS)பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். தேர்வு முடிவுகளின்படி, அனுஜ் அக்னிஹோத்ரி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் முதல் பத்து இடங்களில் இடம்பெற்றுள்ளனர். மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே 2ஆம் இடமும், ராஜா மொகைதீன் 7ஆம் இடமும் பிடித்துள்ளனர். கடந்தாண்டு சென்னையைச் சேர்ந்த பி. சிவச்சந்திரன் அகில இந்திய அளவில் 23-வது இடத்தைப் பிடித்து தமிழ்நாடு அளவில் முதலிடம் பெற்றார்.
தேர்வர்கள் தங்கள் முடிவுகளை யுபிஎஸ்சி-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (upsc.gov.in) பார்க்கலாம்.
- இன்று முதல் வரும் 24ம் தேதி வரை தேர்வாணைய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
- மே 24ம் தேதி முதல்நிலைத் தேர்வும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 21ம் தேதி முதன்மைத் தேர்வும் நடக்க உள்ளது
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2026-ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 933 பணியிடங்களுக்கான தேர்வுக்கு இன்று முதல் வரும் 24ம் தேதி வரை upsconline.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
விண்ணப்ப அறிவிப்பு வெளியீட்டுடன், 2026-ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வின் மூலம் நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, தேர்வு முறை மற்றும் இதர விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. யுபிஎஸ்சி தேர்வு அட்டவணைப்படி, முதல்கட்ட தேர்வு மே.24ஆம் தேதியும், முதன்மைத் தேர்வு (Mains) ஆகஸ்ட் 21-ம் தேதியும் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து நேர்காணல் நடைபெறும்.
கடந்த ஆண்டு, 979 காலியிடங்களை ஆணையம் வழங்கியது . 2024 ஆம் ஆண்டில், 1,105 காலியிடங்கள் நிரப்பப்பட்டன. மொத்த காலியிடங்களில், 33 காலியிடங்கள், அடிப்படை மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில், ஏழு காலியிடங்கள் கண்பார்வையற்றோர் மற்றும் குறைந்த பார்வைத்திறன் உடையோர்க்கும், 11 காலியிடங்கள் காது கேளாதோர் மற்றும் குறைவான கேட்கும் திறன் உடையோர்க்கும், இயக்கக் குறைபாடு (Locomotor disability) உள்ளவர்களுக்கு எட்டு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன; இதில் பெருமூளை வாதம், தொழுநோய் குணமானவர்கள், உயரம் குறைந்தவர்கள், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தசைச் சிதைவு நோய் உள்ளவர்களும் அடங்குவர். இன்னும் பிற குறைபாடு உள்ளவர்களுக்கு ஏழு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- கடந்த ஆகஸ்ட் மாதம் யுபிஎஸ்சி தேர்வு நடைபெற்றது.
- நடப்பு ஆண்டில் தேர்ச்சி விகிதம் 13.97 சதவீதம் அதிரித்துள்ளது.
யுபிஎஸ்சி 2025 பிரதான தேர்வு முடிவுகள் இணையத்தில் இன்று வெளியாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்ச்சி விகிதம் 13.97 சதவீதம் அதிரித்துள்ளது.
அதன்படி, யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளை http://upsc.gov.in என்ற முகவரியில் பார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வில், தமிழ்நாட்டில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 155 பேர் யுபிஎஸ்சி பிரதான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு 136 பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பயிற்சி பெற்று வரும்போது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான அனைத்து வசதிகளையும் கேட்டதாக புகார்.
- புகாரை விசாரிக்கும்போது UPSC தேர்வுக்கான விண்ணப்பத்தில் முறைகேடு செய்தது கண்டுபிடிப்பு.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த பூஜா கெத்கர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.ஏ.எஸ். ஆனார். புனேயில் பயிற்சி பெற்று வரும்போதே ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான அனைத்து வசதிகளையும் கேட்டதாக புகார் எழுந்தது.
அதனைத் தொடர்ந்து ஐஏஎஸ் தேர்வுக்கு முறைகேடாக ஓபிசி மற்றும் உடல் ஊனம் சான்றிதழ் பெற்றதாக அவர் மீது அடுத்தடுத்து புகார்கள் கூறப்பட்டன. விசாரணை முடிவில் யுபிஎஸ்சி (Union Public Service Commission) பூஜா கெத்கரின் ஐஏஎஸ்-ஐ ரத்து செய்தது. மேலும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடைவிதித்தது.
டெல்லி போலீசார் பூஜா கெத்கர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதனால் தன்னை கைது செய்ய வாய்ப்புள்ளதாக கருதிய அவர், டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார். டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.
இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீடு மனு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, சதீஷ் சந்திரா சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் "பூஜா கெத்கர் விசாதணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதேவேளையில் அவருக்கு முன்ஜாமின் வழங்கப்படுகிறது" என உத்தரவிட்டனர்.
அத்துடன் "பூஜா கெத்கர் செய்த பெரிய குற்றம் என்ன?. அவர் போதைப்பொருள் தலைவனோ அல்லது பயங்கிரவாதியோ அல்ல. அவர்கள் கொலை குற்றத்தில் ஈடுபடவில்லை. அவர் NDFS குற்றத்தில் ஈடுபடவில்லை. அவர் எல்லைவற்றையும் இழந்து விட்டார். எங்கேயும் அவர் வேலை பெற முடியாது.
வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியிருக்க வேண்டிய பொருத்தமான வழக்கு இது" எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
- ஏப்ரல் 29ம் தேதி யுபிஎஸ்சி தலைவர் பிரீத்தி சூடானின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.
- அஜய்குமார் இந்த பொறுப்பில் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது அடையும்வரை நீடிப்பார்.
யுபிஎஸ்சி தலைவராக, பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் அஜய்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அஜய்குமார் இந்த பொறுப்பில் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது அடையும்வரை நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 29ம் தேதி யுபிஎஸ்சி தலைவர் பிரீத்தி சூடானின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் அஜய் குமாரின் நியமனத்திற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அனுமதி அளித்துள்ளார்.
1985ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அஜய்குமார், 2019 முதல் 2022 வரை பாதுகாப்புத்துறைச் செயலாளராக பணியாற்றினார்
- மாணவர்கள் தங்கள் லட்சியத்தில் வெற்றி பெற ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்.
- நீங்கள் வென்றால் மட்டும் போதாது, மற்ற மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் நடக்க வேண்டும்.
சென்னை பசுமை வழிச்சாலையில் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
* தி.மு.க. ஆட்சியில் கல்வியை மேம்படுத்தி மாணவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டோம்.
* எப்படிப்பட்ட தேர்வாக இருந்தாலும் அதனை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என நினைத்தோம்.
* மாணவர்கள் தங்கள் லட்சியத்தில் வெற்றி பெற ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்.
* மாணவர்கள் மீதும், நான் முதல்வன் திட்டத்தின் மீதும் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை.
* நான் முதல்வன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் சிறப்பாக நிறைவேறி வருவதில் மகிழ்ச்சி.
* சாமானிய வீடுகளில் இருந்து வந்து வென்ற உங்களை பாராட்டுவதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்
* நீங்கள் வென்றால் மட்டும் போதாது, மற்ற மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் நடக்க வேண்டும்.
* யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிகள் குறைந்த நேரத்தில் நீங்கள் கவலையை தீர்த்துள்ளீர்கள்.
* அதிகாரம் என்பது அனைவருக்கும் சமம், அதிகாரம் உங்கள் கையில் இருக்கிறது, அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேசிய அளவில் 23 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
- தேர்ச்சி பெற்றுள்ள அனைவரும், தங்கள் பல ஆண்டு கால கடின உழைப்பின் பலனைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டு எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-
இன்று வெளியாகியுள்ள UPSC தேர்வு முடிவுகளில், தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் தேசிய அளவில் 23 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
தேர்ச்சி பெற்றுள்ள அனைவரும், தங்கள் பல ஆண்டு கால கடின உழைப்பின் பலனைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் பணியில் முன்வரிசையில் செயல்படவிருக்கும் அனைவரும், தங்கள் துறைகளில் வெகு சிறப்பாக பணிபுரிய மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- இறுதித் தேர்வு முடிவுகள் https://upsc.gov.in/ இணையதளத்தில் இன்று வெளியாகி உள்ளது.
- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 134 பேரில் 50 பேர் 2024 யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் இன்று(ஏப்ரல் 22) வெளியிடப்பட்டுள்ளன.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஐஆா்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வருடந்தோறும் தேர்வு நடத்தி வருகிறது.
இந்த தேர்வு, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் கொண்டது.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் https://upsc.gov.in/ இணையதளத்தில் இன்று வெளியாகி உள்ளது. அதன்படி இந்த தேர்வில் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர் சிவச்சந்திரன் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார். இவர் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயின்றவர் ஆவார். இதுபற்றி சிவச்சந்திரன் கூறுகையில், "யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. தேர்வில் வெற்றிபெற நான் முதல்வன் திட்டம் உதவிகரமாக இருந்தது" என்றார்.
அதேபோல, இந்திய அளவில் 39ஆம் இடம் பிடித்த மோனிகா என்பவரும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர் ஆவார்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 134 பேரில் 50 பேர் 2024 யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 50 பேரில் 18 பேர் முழுநேர உறைவிட பயிற்சி மேற்கொண்டவர்கள் ஆவர். மேலும்
தமிழில் தேர்வு எழுதிய காமராஜ், தங்கபாண்டியன் ஆகிய இருவரும் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- தமிழகத்தில் சிவச்சந்திரன் என்ற மாணவர் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார்.
- 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயின்ற 50 பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் இன்று(ஏப்ரல் 22) வெளியிடப்பட்டுள்ளன.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆா்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தேர்வுகள் நடத்துகிறது. இந்த தேர்வு, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் கொண்டது.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் https://upsc.gov.in/ இணையதளத்தில் இன்று வெளியாகி உள்ளது. அதன்படி இந்த தேர்வில் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சக்தி துபே என்ற மாணவி முதலிடம் பெற்றுள்ளார். ஹர்ஷிதா கோயல் என்பவர் இரண்டாமிடமும் டோங்க்ரே அர்ஷித் பராக் என்பவர் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்றவர்களில் 335 பேர் பொதுப்பிரிவினர், 109 பேர் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், 318 பேர் ஓபிசி, 160 பேர் எஸ்சி, 87 பேர் எஸ்டி, 45 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர்.
தமிழகத்தில் சிவச்சந்திரன் என்ற மாணவர் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார். இவர் தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயின்ற 50 பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- அகில இந்திய அளவில் இஷிதா கிஷோர் முதலிடம் பிடித்துள்ளார்.
- யுபிஎஸ்சி தேர்வில் முதல் 4 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர்.
புதுடெல்லி:
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற பணியிடங்களுக்கும், குரூப்-ஏ, குரூப்-பி பிரிவில் உள்ள பிற பணியிடங்களையும் நிரப்புவதற்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் போட்டித்தேர்வை நடத்துகிறது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வின் இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த தேர்வில் மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 4 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர். அகில இந்திய அளவில் இஷிதா கிஷோர் முதலிடம் பிடித்துள்ளார். கரிமா லோகியா இரண்டாம் இடமும், உமா ஹராதி மூன்றாமிடமும், ஸ்மிருதி மிஷ்ரா நான்காம் இடமும் பிடித்தனர்.
தேர்ச்சி பெற்றவர்களில் 345 பேர் பொது பிரிவைச் சேர்ந்தவர்கள், 99 பேர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள், 263 பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள், 154 பேர் எஸ்சி பிரிவையும், 72 பேர் எஸ்டி பிரிவையும் சேர்ந்தவர்கள்.
- இருவரும் சிவில் சர்வீசஸ் தேர்வு விதிகளுக்கு முரணாக செயல்பட்டுள்ளதாக யுபிஎஸ்சி கூறி உள்ளது
- யுபிஎஸ்சி-யின் கட்டமைப்பு வலுவானது மற்றும் முறைகேடாக பயன்படுத்த முடியாது.
புதுடெல்லி:
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய (யுபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் தேர்வின் இறுதி முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இதில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிஷா மக்ரானி, பீகாரைச் சேர்ந்த துஷார் ஆகியோர் தேர்வானதாக கூறியிருந்தனர். உண்மையிலேயே தேர்ச்சி பெற்ற இரண்டு நபர்களின் பெயர்களைப்போன்றே அவர்களின் பெயர்களும் இருந்ததால் அந்த பெயர்களை காட்டி அது தாங்கள்தான் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது. யுபிஎஸ்சி தேர்வு முறையில் குளறுபடி நடந்திருக்கலாம் என்ற சர்ச்சையும் எழுந்தது.
ஆனால் யுபிஎஸ்சி நிர்வாகம், ஆவணங்களை சரிபார்த்ததில் ஆயிஷா மக்ரானி, துஷார் இருவரும் தேர்வாகவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, தேர்வானதாகக் கூறப்படும் இரண்டு நபர்களுக்கு எதிராக கிரிமினல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக யுபிஎஸ்சி பரிசீலித்து வருகிறது.
இதுதொடர்பாக யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேர்வானதாக இருவரும் கூறியது உண்மையல்ல. அவர்கள் தங்களுக்கு சாதகமாக போலியான ஆவணங்களைத் தயாரித்துள்ளனர். அவ்வாறு செய்வதன் மூலம், ஆயிஷா மக்ரானி மற்றும் துஷார் இருவரும் சிவில் சர்வீசஸ் தேர்வு விதிகளுக்கு முரணாக செயல்பட்டுள்ளனர்.
எனவே, தேர்வு விதிகளின் விதிகளின்படி, அவர்களின் மோசடி செயல்களுக்கு எதிராக கிரிமினல் மற்றும் ஒழுங்குமுறை சட்ட நடவடிக்கை ஆகிய இரண்டையும் மேற்கொள்ள யுபிஎஸ்சி பரிசீலித்து வருகிறது. யுபிஎஸ்சி-யின் கட்டமைப்பு வலுவானது மற்றும் முறைகேடாக பயன்படுத்த முடியாது. எனவே அத்தகைய தவறுகள் நடக்க சாத்தியமில்லை.
பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் இதுபோன்ற உரிமைகோரல்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கு முன், யுபிஎஸ்சி-யிடமிருந்து உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






