search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. புதிய பிரதமரை தேர்வு செய்யும் - ஆ.ராசா
    X

    தி.மு.க. புதிய பிரதமரை தேர்வு செய்யும் - ஆ.ராசா

    • 2024 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. புதிய பிரதமரை தேர்வு செய்து நீட் தேர்வை ஒழிக்கும் என்று பெரம்பலூரில் ஆ.ராசா தெரிவித்துள்ளார்
    • தி.மு.க. இளஞைரணி சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பேச்சு

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் நீட்தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் புதுபஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரும், நகராட்சி துணை தலைவருமான ஹரிபாஸ்கர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தங்ககமல், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட மருத்துவ அணி மாநில துணை செயலாளர் டாக்டர் வல்லபன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார் ஆகியோர் பேசினர்.

    திமுக துணை பொதுச்செயலாளர் ராஜா எம்.பி. கலந்து கொண்டு பேசுகையில், மத்தியில் தர்பார் ஆட்சி நடத்தும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா கும்பலை வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் விரட்டியடிப்போம், புதிய பிரதமரை தேர்வு செய்யும் இடத்தில் தி.மு.க. இருக்கும். அப்போது நீட் ஒழிக்கப்படும் என தெரிவித்தார்.

    மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் துரைசாமி, மாவட்ட அவை தலைவர் நடராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர், நூருல்ஹிதா, மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜ்குமார், ஜெகதீசன், நல்லதம்பி, மதியழகன், ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் முகுந்தன், அண்ணாதுரை, டாக்டர் செங்குட்டுவன், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் மாரிக்கண்ணன், நகராட்சி தலைவர் அம்பிகா, யூனியன் சேர்மன் மீனாம்பாள், ராமலிங்கம், பிரபா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல்கரீம் வரவேற்றார். முடிவில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ரினோபாஸ்டின் நன்றி கூறினார்.


    Next Story
    ×