search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "employees"

    • போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 150-க்கும் மேற்பட்ட பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை பைபாஸ் ரோடு அரசு போக்குவரத்துக்கழக தலைமையகம் முன்பு அனைத்து ஊழியர் சங்கங்களின் சார்பில் இன்று அதிகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.டி.பி. சங்கத்தின் பொருளாளர் தங்கையா தலைமை தாங்கினார்.

    எல்.பி.எப். சங்கம் இளங்கோ ,பி.எம்.எஸ். சங்கம் விஜயகுமார், சி.ஐ.டி.யு. துணை பொதுச் செயலாளர் செல்வராஜ், டி.டி.எஸ்.எப். சங்க பீமராஜ், டி.யூ.சி.சி. சங்கம் வேல்முருகன், ஐ.என்.டி.யூ.சி. ஜான், ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்தின் மணிசேகர் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் கனகசுந்தர், துணை பொதுச்செய லாளர் டி.கே. முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு போக்குவரத்து புறநகர் கிளையில் ஏற்க னவே கொடுத்து கொண்டு இருந்த பணி நேரத்தை குறைக்கக்கூடாது. அனைத்து பணி நேரங்க ளையும் பணி நேரமாக வழங்க வேண்டும். பணி குறைப்புக்கு வவுச்சராக வழங்கக்கூடாது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் 150-க்கும் மேற்பட்ட பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
    • அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

    தஞ்சாவூர்:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

    அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும்.

    சத்துணவு ஊழியர்கள், அங்க ன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கணினி இயக்கு னர்கள், எம். ஆர் .பி. செவிலியர்கள் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

    மாவட்டத் துணைத் தலைவர்கள் தமிழ்வாணன், ரவிச்சந்திரன், முருகன், கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு ஆரம்பம் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்த லைவர் ரவிச்சந்திரன் பேரணியை தொடக்கி வைத்தார்.

    மாவட்டச் செயலாளர் ரங்கசாமி கோரிக்கை குறித்து விளக்க உரையாற்றினார்.

    இந்த பேரணியானது பனகல் கட்டிடத்தில் முடிவடைந்தது.

    இதில் மாநில செயலாளர் ஹேமலதா நிறைவுரை ஆற்றினார்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

    இதில் ஏராளமான நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
    • அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணி சுமையை தளர்த்த வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் பேபி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் லதா, சி.ஐ.டி.யூ மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் உள்ளூர், வெளியூர் பணி மாறுதல் உடனே வழங்கிட வேண்டும், காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் அளிக்கப்படும் பணி சுமையை தளர்த்திட வேண்டும் என்பது உள்பட 13 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் தலைவி பாண்டிமா தேவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் தலைவி பாண்டிமா தேவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அதிகமாக உள்ள காலிப் பணியிடங்களால் ஒரு ஊழியர் 2, 3 மையங்களை பொறுப்பு பார்க்கும் நிலை உள்ளது. 5 ஆண்டு பணி முடித்த குறு மைய ஊழியர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஒப்பந்தம், உத்தரவின் விபரத்தை வழங்க வேண்டும்.
    • தினக்கூலியை ரூ.550 லிருந்து 650 ஆக உயர்த்தி கொடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட தூய்மை பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் கலியபெருமாள் தலைமையில் நூற்றுக்கும் அதிகமான தூய்மை பணியாளர்கள் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    அப்போது தூய்மை பணியாளர்களை புதிதாக டெண்டர் எடுத்த நிறுவனம் அல்லது முகமை யார் என்பதை அறிவிக்க வேண்டும்.

    ஒப்பந்தம், உத்தரவின் விபரத்தை வழங்க வேண்டும்.

    தஞ்சை மாநகர தூய்மை பணியாளர்கள் சார்பில் தினக்கூலியை ரூ.550 லிருந்து 650 ஆக உயர்த்தி கொடுக்க மாவட்ட ஆட்சியரின் செயல்முறை ஆணையை உடனே வழங்கிட வேண்டும்.

    மாநகர தூய்மை பணியா ளர்கள் நலச்சங்கத்திற்கு தெரிவிக்காமல் புதிய தூய்மை பணியாளர்களை நியமிக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதையடுத்து போலீசார், தூய்மை பணியாளர் சங்கத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இருப்பினும் தொடர்ந்து போராட்டத்தை மேற்கொ ண்டனா். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தேவகோட்டை பகுதியில் தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த அரசு ஊழியர்கள் புகார் கொடுக்க அச்சம் அடைந்துள்ளனர்.
    • பணம் செலுத்தியவர்கள் புலம்புகின்றனர்.

    தேவகோட்டை

    விருதுநகரை தலைமை இடமாக கொண்டு செயல் பட்டு வரும் தனியார் நிதி நிறுவனம் நியோ மேக்ஸ் இந்நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி பொது மக்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

    மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் 3 இயக்குநர்கள் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் அனை வரும் முன் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் இவர்க ளது முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப் பட்டது.

    மேலும் இவர்கள் 68 போலி நிறுவனங்கள் நடத்தி பணம் வசூலித்து உள்ள தாகவும், இதுவரை 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. இதுவரை சுமார் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளதாக தெரிகிறது.

    தேவகோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இந்நிறுவனத்தில் சுமார் 15 ஆயிரம் முகவர்களை கொண்டு பொதுமக்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் இந்நிறுவனத்தில் பெரும்பா லும் அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பணம் முதலீடு செய்துள்ளனர்.

    இந்தப் பகுதியில் உள்ள முகவர்கள் தங்கள் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை விற்று பணமாக பதுக்கி வருவதாக தகவல்கள் பரவி வருகிறது.இந்த நிலையில் அந்த நிதி நிறுவனம் இது சம்பந்தமாக யாரும் புகார் அளிக்க கூடாது. மீறி புகார் அளித்தால் நீங்கள் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காது என மிரட்டி வருவதாக நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்கள் புலம்புகின்றனர். முகவர்களை காவலில் எடுத்து விசாரித்து யார் யார் பெயரில் சொத்துக்கள் உள்ளது எங்கெல்லாம் சொத்துக்கள் உள்ளது. பினாமிகள் உறவுக்கா ரர்கள் யார் என்பதை கண்டறிந்து அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற னர்.

    தேவகோட்டை பகுதி களில் பல நிதி நிறுவ னங்கள் இது போன்று பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி அதிக வட்டி தருவதாக செயல் பட்டு வருகிறது. அவர்க ளையும் அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அந்நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் பணத்தை காப்பாற்ற முடியும்.

    • ராராமுத்திரகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வருவாய் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் மீட்கப்பட்டது.
    • மீட்கப்பட்ட அரசு நிலத்தில் வரப்பு அமைக்கும் பணி நடைபெற்றது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வருவாய் கிராமத்தில் பல வருஷமாக தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்த 30 லட்சம் மதிப்பிலான 50 சென்ட் அரசு நிலம் ஊராட்சி மன்ற தலைவர் சோழன் முயற்சியால் மண்டல துணை வட்டாட்சியர் விவேகானந்தன், நில அளவையர் அழகேசன்.

    வருவாய் ஆய்வாளர் கமலி, கிராம நிர்வாக அதிகாரி சதீஷ்குமார் ஆகியோரை கொண்ட வருவாய்குழுவினர் மற்றும் ஊராட்சிதுறையினர் மூவம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் மீட்கப்பட்டது.

    பின்னர் மீட்கப்பட்ட அரசு நிலத்தை தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை கொண்டு வரப்பு அமைக்கும் பணி நடைபெற்றது.

    இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் புனிதாபிரகலாதன், ஊராட்சி செயலாளர் அசோக் பணிதல பொறுப்பாளர்கள்.

    தேசிய ஊரக வேலைதிட்ட பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    அரசு நிலத்தை மீட்க நடவடிக்கைஎடுத்த ஊராட்சி மன்ற நிர்வாகிகளுக்கும், வருவாய்துறையினருக்கும் கிராமமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • கடந்த 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கூட்டுத் தணிக்கை மேற் கொள்ளப்பட்டது.
    • மதுபான சில்லரை விற் பனைக் கடை அருகே கள்ள மார்க்கெட்டில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட சுந்தர்ராஜன் என்பவரை குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கமலக் கண்ணன் தலைமையில் கலால்துறை உதவி கமிஷனர் மற்றும் போலீசாருடன் கடந்த 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கூட்டுத் தணிக்கை மேற் கொள்ளப்பட்டது.

    அப்போது மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்த பரமத்திவேலூர், மோகனூர், செங்கப்பள்ளி, கபிலர்மலை, திம்மநாய்க்கன் பட்டி, மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, மெட்டாலா மற்றும் செங்கப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை பணியாளர்களுக்கு ரூ.70 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும், அனுமதியின்றி இயங்கி வந்த மதுபானக் கூடங்கள் மூடப்பட்டன. மதுபான சில்லரை விற் பனைக் கடை அருகே கள்ள மார்க்கெட்டில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட சுந்தர்ராஜன் என்பவரை குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.

    மேலும், கடை மேற் பார்வையாளர் சுப்புராஜா மற்றும் விற்பனையாளர் செல்வராஜ் ஆகியோர் மீது போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை யொட்டி 2 பணியாளர்கள் தற்காலிகமாக சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    • இ-சேவை மையத்தில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • ஆயிரத்திற்கும்ய மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    கீழக்கரை

    கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்க நகர் செயலாளர் தாஜுல் அமீன், மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவில் 75 ஆயிரத்திற்கும்ய மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. 10-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த 58 கிராமங்கள் உள்ளன. இங்குள்ள சேவை மையத்தில் புதிதாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பித் தல், ஆதார் கார்டு பிழை திருத்தம் செய்தல், பயோ மெட்ரிக் புதுப்பித்தல், முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை உள்ளிட்ட சேவை களுக்கு கூடுதல் பணியாளர் இல்லாமல் மக்கள் நீண்ட நேரம் காத்து இருக்கும் நிலை உள்ளது. ஆகவே மக்கள் தேவைகளை துரித மாக நிறைவேற்ற கூடுதல் பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

    • ரெயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • முடிவில் கோட்ட துணைத்தலைவர் வினோத் பாபு நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை கோட்ட ரெயில்வே தொழிலாளர் சங்கமான தக்சின் ரெயில்வே ஊழியர்கள் யூனியன் சார்பில் மதுரை ரெயில் நிலைய மேற்கு நுழைவுவாயில் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. துணை பொதுச்செயலாளர் கார்த்திக் சங்கிலி தலைமை தாங்கி னார்.

    கோட்ட பொருளாளர் சரவணன் முன்னிலை வகித்தார். துணை பொதுச்செயலாளர் சிவக்குமார், கோட்ட உதவி தலைவர் ஜெயராஜசேகர், கோட்ட இணை செயலாளர்ஆர்.சங்கரநாராயணன், ஏ.ஐ.எல்.ஆர்.எஸ்.ஏ. கோட்ட துணை தலைவர் கண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

    100 ஆண்டுகளுக்கு மேல் சேவை செய்த ராயபுரம் ரெயில்வே அச்சகத்தை மூடும் முடிவை கைவிட வேண்டும். காலி பணி யிடங்கள் போர்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். முன்னாள் ராணுவத்தினரை ஒப்பந்த கேட் கீப்பர்களாக நியமிக்கக் கூடாது. தொழிலாளர்க ளுக்கு அலவன்ஸ் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    முடிவில் கோட்ட துணை தலைவர் வினோத் பாபு நன்றி கூறினார்.

    • ரெயில்கள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் தனியார் மயமாக்கலை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன.

    ஈரோடு:

    கோவை-ஷீரடி விரைவு ரெயிலை தனியாருக்கு விடுவதை உடனடியாக கைவிட வேண்டும். நாடு முழுவதும் விரைவு ரெயில்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    ராமாயண யாத்திரை என்ற பெயரில் டெல்லி-நேபால் ரெயிலை ஐ.ஆர்.சி.டி.சி-க்கு விற்றதை வாபஸ் பெற வேண்டும். பாரத் கவுரவ் என்ற பெயரில் சுற்றுலா ரெயில்கள் என்ற பெயரில் 100 விரைவு ரெயில்களை தனியாருக்கு விற்கும் முடிவை உடனே கைவிட வேண்டும்.

    உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் ஈரோடு கிளை சார்பில் இன்று கறுப்பு தினமாக கடைபிடித்து ஈரோடு ரெயில்வே பணிமனையில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் வினோத்குமார், செயலாளர் தர்மராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    நிர்வாகிகள் முனிச்சந்த் மீனா, பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் தனியார் மயமாக்கலை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன. இதில் ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
     
    தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ஏழை, எளிய விவசாயிகளுக்கு தொடர்ந்து பயிர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் அரசு வழிகாட்டுதல் படி வழங்கப்படுகிறது. 
     
    இந்த நிலையில் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட்டது. 
    அதன்படி கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் பரிந்துரை செய்தனர். சில கடன்கள் தள்ளுபடிக்கு பொருந்தாது என சரிபார்ப்பு அலுவலர்களால் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. 

    தற்போது பணி ஓய்வு பெற உள்ள மற்றும் பணிபுரிந்து வரும் பல ஊழியர்களுக்கு, பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் விதிமீறல் என்ற குற்றச்சாட்டு ஆணை வழங்கப்பட்டு உள்ளது. 

    இதனால் பணியாளர்கள் மன உளைச்சலுடன் பணிபுரிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஊழியர்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×