search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driver"

    • சுமார் 70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
    • தலைமறைவாக இருந்த பிரபாகரனை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கிராமப் பகுதியை சேர்ந்த சுமார் 70 வயது மூதாட்டி ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரது மகன் பிரபாகரன் (38), என்பவர் கடந்த 9ந் தேதி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த பிரபாகரனை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சிறிது நேரத்தில் தீ மளமளவென பஸ்முழுவதும் பரவி பற்றி எரிந்தது.
    • டிரைவர் சாமர்த்தியமாக உடனடியாக கீழே இறங்க கூறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    மாதவரம்:

    ஆந்திராவில் இருந்து மாதவரம் பஸ் நிலையம் நோக்கி நேற்று மாலை ஆந்திரா அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. சுமார் 30 பயணிகன் இருந்தனர். புழல், சைக்கிள் ஷாப் அருகே சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் வந்தபோது பஸ்சின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறங்குமாறு தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்தபடி பஸ்சில் இருந்து கீழே இறங்கினர்.

    சிறிது நேரத்தில் தீ மளமளவென பஸ்முழுவதும் பரவி பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்த தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது.

    பஸ்சில் இருந்து புகை வந்ததும் பயணிகளை டிரைவர் சாமர்த்தியமாக உடனடியாக கீழே இறங்க கூறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    • போக்குவரத்து நெரிசல் காரணமாக தனியார் பஸ்களுக்கு வழி கொடுக்க முடியாமல் அரசு பஸ் சென்றது.
    • தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    கும்பகோணத்தில் இருந்து 2 தனியார் பஸ்கள் தஞ்சை புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது.

    அப்போது தஞ்சை பழைய பஸ் நிலையத்திலிருந்து வல்லத்திற்கு நகர அரசு பஸ் புறப்பட்டது.

    நகரப் பஸ்சை ஓட்டுனர் கனகராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

    போக்குவரத்து நெரிசல் காரணமாக தனியார் பஸ்களுக்கு வழி கொடுக்க முடியாமல் அரசு பஸ் சென்றதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் தனியார் பஸ்சுக்கு வழி கொடுக்காதால், ஆத்திரமடைந்த தனியார் பஸ் கண்டக்டர்கள் அரசு பஸ்சை ஆற்றுப்பாலம் அருகே வழிமறித்து ஓட்டுனர் கனகராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அரசு பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் சாலையில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் தாக்குதல் நடத்திய தனியார் பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    இதுகுறித்து போக்குவரத்து காவல்து றையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மார்க்கெட் சிக்னல் வளைவில் திரும்புவதற்காக பிரேக் போட்டுள்ளார்.
    • அப்போது எதிர்பாராத விதமாக ஆறுமுகம் ஆட்டோவில் இருந்து தவறி சாலையில் விழுந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஆவுடை யார்புரம் பாலவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 35). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஸ்டாண்டில் இருந்து ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    சாலை விபத்து

    இவர் மார்க்கெட் அருகே உள்ள பகுதியில் பயணியை இறக்கி விட்டு விட்டு மீண்டும் பழைய பஸ் நிலைய ஸ்டாண்டை நோக்கி ஆட்டோவை ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது மார்க்கெட் சிக்னல் வளைவில் திரும்புவதற்காக பிரேக் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆறுமுகம் ஆட்டோவில் இருந்து தவறி சாலையில் விழுந்தார்.

    அதே நேரத்தில் அவர் ஓட்டி வந்த ஆட்டோவும் அவர் மீது கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை அங்கிருந்தவர்கள் மீட்ட தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஆறுமுகம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    போலீசார் விசாரணை

    இது குறித்து மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஆறுமுகத்திற்கு திருமணம் ஆகவில்லை. இவர் மீது கொலை, கொலை முயற்சி உட்பட ஏராளமான வழக்குகள் தூத்துக்குடியில் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு குற்ற பதிவேட்டில் ரவுடி பட்டியலில் இருந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். 

    • விருதுநகர் அருகே நடந்த விபத்தில் டிரைவர், வாலிபர் பலியானார்கள்.
    • கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காளையார் குறிச்சி மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச் சாமி (வயது63), டிரைவர். இவர் சரக்கு வேனில் நிலக்கோட்டையில் லோடு இறக்கிவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். திருமங்கலம் மேலக்கோட்டை அருகே வந்தபோது வேனை நான்கு வழிச்சாலையின் சாலையில் ஓரமாக நிறுத்திவிட்டு எதிர்புறம் இருந்த ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். சாப்பிட்டு முடித்து விட்டு நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் ஒரு வடமாநில தொழிலாளி வந்து கொண்டிருந்தா. எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் வெள்ளைச்சாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வெள்ளைச்சாமி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் வடமாநில தொழி லாளியும் காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். தகவலறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெள்ளைச்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சுவாமி மல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி(45), இவர் சிவரக்கோட்டை நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தார். பின்னர் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது விருதுநகரில் இருந்து திருமங்கலம் நோக்கி கொண்டிருந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    ஆனால் செல்லும் வழியிலேயே மலைச்சாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குறைவான பேட்டரி திறன் மற்றும் சார்ஜிங் பிரச்சினைகளால் சரியாக ஆட்டோ ஓட்ட முடியவில்லை.
    • தினமும் ரூ.1,500 வரை சம்பாதிக்க முடிவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

    ஒடிசாவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் பட்ரா. 35 வயதான இவர் ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் அருகே நாயாகார்க் பகுதியில் கடந்த 15 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் தனது 3 சக்கர எலெக்ட்ரிக் ஆட்டோவை சோலார் ஆட்டோவாக மாற்றி உள்ளார். ஆரம்பத்தில் டீசலில் இயங்கும் ஆட்டோவை ஓட்டிய இவருக்கு தினமும் ரூ.400 வரை எரிபொருள் செலவாகியதால் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு எலெக்ட்ரிக் ஆட்டோ வாங்கி உள்ளார்.

    ஆனால் குறைவான பேட்டரி திறன் மற்றும் சார்ஜிங் பிரச்சினைகளால் சரியாக ஆட்டோ ஓட்ட முடியவில்லை. அப்போது அவரது 11 வயது மகனின் அறிவுரைப்படி எலெக்ட்ரிக் ஆட்டோவை சோலார் ஆட்டோவாக மாற்றி உள்ளார். இதன்மூலம் சிங்கிள் சார்ஜில் 140 கிலோ மீட்டர் தூரம் வரை ஆட்டோ இயங்குவதாகவும், இதனால் தினமும் ரூ.1,500 வரை சம்பாதிக்க முடிவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

    • சிவகங்கை மாவட்டத்தில் டிரைவர் உள்பட 2 பேர் மாயமாகினர்.
    • சிவகங்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தனியார் செங்கல் சூளையில் விருதுநகரை சேர்ந்த சிவா என்பவர் ஜே.சி.பி. டிரைவராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்ைல. இதுகுறித்து அவரது மனைவி மாதா கொடுத்த புகாரின்பேரில் மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை அருகே உள்ள முலாக்குளம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமரன். இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது31). இவர் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சம்பவத்தன்று ஆஸ்பத்திரியில் இருந்து ராஜேஸ்வரி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயணிகளை ஏற்றி செல்லும் டிரைவர்கள் பணியை தவிர இதர வேலைகளை மேற்கொள்ள டிரைவர்கள் இல்லாததால் டெப்போக்களில் பற்றாக்குறை ஏற்பட்டது.
    • புதிதாக டிரைவர்கள் நியமிக்கபட்டதால் தொ.மு.ச. உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கங்களும் அதிருப்தியில் உள்ளன.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 3233 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் 32 லட்சம் பேர் பயணம் செய்கிறார்க்ள. கொரோனா பாதிப்புக்கு பிறகு தற்போது தான் பஸ் பயணிகளின் எண்ணிக்கை கடந்த கால அளவை எட்டியுள்ளது.

    மகளிர் இலவச பயணத்திற்கு 1559 பேருந்துகள் விடப்பட்டுள்ளன. இவற்றில் பயணம் செய்யும் பெண்கள் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் வரை தினமும் 10 லட்சம் பெண்கள் இலவசமாக பயணித்த நிலையில் தற்போது 11.5 லட்சமாக உயர்ந்துள்ளது.

    பயணிகள் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்தாலும் கூட பஸ் டிரைவர், கண்டக்டர் பற்றாக் குறையால் முழுமையான அளவு பேருந்துகளை இயக்க முடியாத நிலைஏற்பட்டது.

    பயணிகள் பஸ்களை தவிர டெப்போவில் டீசல் பிடித்தல், பஸ்களை முறைப்படுத்தி விடுதல், உதிரி பாகங்கள் வாங்க செல்லுதல், தண்ணீர் லாரி இயக்குதல், வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு எப்.சி.க்கு கொண்டு செல்லுதல் போன்ற பணிகளில் டிரைவர்கள் பயன்படுத்தப் படுகிறார்கள். இதனால் டிரைவர்கள் பஸ்களை இயக்க முடியாத நிலை உருவானது.

    பயணிகளை ஏற்றி செல்லும் டிரைவர்கள் பணியை தவிர இதர வேலைகளை மேற்கொள்ள டிரைவர்கள் இல்லாததால் டெப்போக்களில் பற்றாக்குறை ஏற்பட்டது.

    இந்த பணிகளை மேற்கொள்வதற்கு 500 டிரைவர்கள் ஒப்பந்த அடிப்படியில் நியமிக்க போக்குவரத்துகழகம் அரசின் அனுமதி பெற்று டெண்டர் கோரியது. அதன்பேரில் ஒரு நிறுவனத்துக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டு 500 டிரைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணியில் சேர்ந்த டிரைவர்கள் மூலம் டிரைவர்கள் பற்றாக்குறை பிரச்சினை தற்காலிகமாக தீர்வு செய்யப்பட்டுள்ளது. இதர பணிகளில் ஈடுபட்டு வந்த டிரைவர்கள் இனி முழுமையாக பயணிகள் பஸ்களை மட்டும் இயக்குவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் முதல்முறையாக டிரைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சம்பளத்துடன் தொழிலாளர் வைப்பு நிதி, இன்சூரன்ஸ் மற்றும் இதர சலுகைகள் உள்பட ரூ. 22 ஆயிரம் சம்பளம் அந்த நிறுவனம் வழங்குவதாக உறுதி அளித்துள்ளது.

    இந்நிலையில் ஒப்பந்த டிரைவர்கள் நியமிக்க கூடாது என போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. புதிதாக டிரைவர்கள் நியமிக்கபட்டதால் தொ.மு.ச. உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கங்களும் அதிருப்தியில் உள்ளன.

    • போக்குவரத்து விதி மீறிய தனியார் பஸ் டிரைவர்- கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • தேவகோட்டை போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை-திருப்பத் தூர் சாலையில் ஒத்தக்கடையில் இருந்து ராம்நகர் வரை மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவல கங்கள், நீதிமன்றங்கள் உள்ளன. இதனால் இந்தபகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பஸ் நிறுத் தங்களை போலீசார் சில மாற்றங்களை செய்தனர். மேலும் நகர் இன்ஸ்பெக்டர் சரவணன், போக்குவரத்து சார்பு ஆய்வாளர் அகிலன் ஆகியோர் சாலையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அவ்வப் போது அபராதம் விதித்து வருகின்றனர்.

    இந்த சாலையில் தனியார் பஸ்கள் அதிவேகமாக வரு வதாகவும், போக்குவரத்து விதிகளை பின்பற்றுவ தில்லை எனவும் புகார்கள் வந்ததன் அடிப்படையில் ராம்நகரில் இன்ஸ்பெக்டர் சரவணன், போக்குவரத்து சார்பு ஆய்வாளர் அகிலன், ஏட்டு யோகராஜா ஆகியோர் சோதனை நடத்தினர்.

    அப்போது போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் இயக்கப்பட்ட தனியார் பஸ்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் டிரைவர்கள், கண்டக்டர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • 3 பேர் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றனர்.
    • விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவர் தாக்கப்பட்டது தெரியவந்தது.

    கோவை,

    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் 22 வயது வாலிபர். இவர் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    வாலிபர் தினசரி கீரணத்தம் மற்றும் பீளமேட்டில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை அழைத்து செல்வது வழக்கம். அப்போது வாலிபருக்கு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் குனியமுத்துரைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். அப்போது வாலிபர் இளம்பெண்ணுக்கு ரூ. 3 ஆயிரம் கடன் கொடுத்துள்ளார். அதை திருப்பி கேட்ட போது அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் இளம்பெண் வாலிபருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார். சம்பவத்தன்று வாலிபர் கீரணத்தம் தொழில்நுட்ப பூங்கா அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து வாலிபர் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவர் தாக்கப்பட்டது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிப்-டாப் வாலிபர் காரில் ஏறியதும் கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள மதுபாருக்கு சென்று மது குடித்தார்.
    • கோயம்பேடு பஸ்நிலைய போலீசார் டிரைவர் சுதிரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த மர்மநபர் ஒருவர் தான் கீழ்ப்பாக்கம்அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் என்றும் ஆன்மிக சுற்றுலா செல்ல வேண்டும் என்றும் கூறி ஆந்திர மாநிலம் கூடூரில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் காரை பதிவு செய்தார். இதையடுத்து டிரைவர் சுதிர் என்பவர் காருடன் கீழ்ப்பாக்கம் பகுதிக்கு வந்தார். அங்கு தயாராக நின்ற டிப்-டாப் வாலிபர் காரில் ஏறியதும் கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள மதுபாருக்கு சென்று மது குடித்தார். மேலும் உடன் வந்த டிரைவர் சுதிருக்கு ஏராளமான அசைவ உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட வைத்தார்.

    சிறிது நேரத்தில் அவர், தன்னுடன் பணிபுரிந்து வரும் பெண் டாக்டர் ஒருவருக்கு அவசர தேவைக்காக உடனே "கூகுள் பே" மூலம் ரூ.9ஆயிரம் அனுப்ப வேண்டும். ஏ.டி.எம்.ல் பணம் எடுத்து தந்து விடுகிறேன் என்று கூறினார். இதையடுத்து சுதிர் தனது உரிமையாளரிடம் போன் செய்து வாலிபர் கொடுத்த எண்ணிற்கு "கூகுள் பே" மூலம் ரூ.9 ஆயிரம் அனுப்பினார்.

    பின்னர் வெளியே சென்ற அந்த நபர் பணத்துடன் திரும்பி 500 ரூபாய் நோட்டுக்களாக ரூ.9 ஆயிரம் பணத்தை டிரைவர் சுதிரிடம் கொடுத்தார். சிறிது நேரத்தில் அவர் அங்கிருந்து நைசாக சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து பாரில் மதுகுடித்த பில் தொகை ரூ.2 ஆயிரம் கட்ட வேண்டும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர். உடனே சுதிர் தன்னிடம் இறந்த ரூ.500 நோட்டுகளை கொடுத்தபோது அவை கள்ளநோட்டுகள் என்பது தெரிந்தது. டாக்டர் போல் நடித்து நூதனமுறையில் கள்ளநோட்டுகளை கொடுத்துவிட்டு டிப்-டாப் வாலிபர் தப்பி சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து கோயம்பேடு பஸ்நிலைய போலீசார் டிரைவர் சுதிரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரிடம் இருந்த கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் குமாா் என்பவருக்கும் இடப்பிரச்னை தொடா்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது
    • இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது

    காங்கயம்:

    காங்கயம், காமராஜா் நகரைச் சோ்ந்தவா் லோகநாதன் (55). இவா் சிற்றுந்து (மினி பேருந்து) ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். இவருக்கும், பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் குமாா் என்பவருக்கும் இடப்பிரச்னை தொடா்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் குமாரின் மகன் மணிகண்டன் (24) லோகநாதனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, லோகநாதன் அளித்த புகாரின் பேரில் காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனா்.

    ×