search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை போக்குவரத்து கழகத்தில் 500 டிரைவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம்- தொழிற்சங்கத்தினர் கடும் அதிருப்தி
    X

    சென்னை போக்குவரத்து கழகத்தில் 500 டிரைவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம்- தொழிற்சங்கத்தினர் கடும் அதிருப்தி

    • பயணிகளை ஏற்றி செல்லும் டிரைவர்கள் பணியை தவிர இதர வேலைகளை மேற்கொள்ள டிரைவர்கள் இல்லாததால் டெப்போக்களில் பற்றாக்குறை ஏற்பட்டது.
    • புதிதாக டிரைவர்கள் நியமிக்கபட்டதால் தொ.மு.ச. உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கங்களும் அதிருப்தியில் உள்ளன.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 3233 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் 32 லட்சம் பேர் பயணம் செய்கிறார்க்ள. கொரோனா பாதிப்புக்கு பிறகு தற்போது தான் பஸ் பயணிகளின் எண்ணிக்கை கடந்த கால அளவை எட்டியுள்ளது.

    மகளிர் இலவச பயணத்திற்கு 1559 பேருந்துகள் விடப்பட்டுள்ளன. இவற்றில் பயணம் செய்யும் பெண்கள் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் வரை தினமும் 10 லட்சம் பெண்கள் இலவசமாக பயணித்த நிலையில் தற்போது 11.5 லட்சமாக உயர்ந்துள்ளது.

    பயணிகள் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்தாலும் கூட பஸ் டிரைவர், கண்டக்டர் பற்றாக் குறையால் முழுமையான அளவு பேருந்துகளை இயக்க முடியாத நிலைஏற்பட்டது.

    பயணிகள் பஸ்களை தவிர டெப்போவில் டீசல் பிடித்தல், பஸ்களை முறைப்படுத்தி விடுதல், உதிரி பாகங்கள் வாங்க செல்லுதல், தண்ணீர் லாரி இயக்குதல், வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு எப்.சி.க்கு கொண்டு செல்லுதல் போன்ற பணிகளில் டிரைவர்கள் பயன்படுத்தப் படுகிறார்கள். இதனால் டிரைவர்கள் பஸ்களை இயக்க முடியாத நிலை உருவானது.

    பயணிகளை ஏற்றி செல்லும் டிரைவர்கள் பணியை தவிர இதர வேலைகளை மேற்கொள்ள டிரைவர்கள் இல்லாததால் டெப்போக்களில் பற்றாக்குறை ஏற்பட்டது.

    இந்த பணிகளை மேற்கொள்வதற்கு 500 டிரைவர்கள் ஒப்பந்த அடிப்படியில் நியமிக்க போக்குவரத்துகழகம் அரசின் அனுமதி பெற்று டெண்டர் கோரியது. அதன்பேரில் ஒரு நிறுவனத்துக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டு 500 டிரைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணியில் சேர்ந்த டிரைவர்கள் மூலம் டிரைவர்கள் பற்றாக்குறை பிரச்சினை தற்காலிகமாக தீர்வு செய்யப்பட்டுள்ளது. இதர பணிகளில் ஈடுபட்டு வந்த டிரைவர்கள் இனி முழுமையாக பயணிகள் பஸ்களை மட்டும் இயக்குவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் முதல்முறையாக டிரைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சம்பளத்துடன் தொழிலாளர் வைப்பு நிதி, இன்சூரன்ஸ் மற்றும் இதர சலுகைகள் உள்பட ரூ. 22 ஆயிரம் சம்பளம் அந்த நிறுவனம் வழங்குவதாக உறுதி அளித்துள்ளது.

    இந்நிலையில் ஒப்பந்த டிரைவர்கள் நியமிக்க கூடாது என போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. புதிதாக டிரைவர்கள் நியமிக்கபட்டதால் தொ.மு.ச. உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கங்களும் அதிருப்தியில் உள்ளன.

    Next Story
    ×