search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிரைவரிடம் 9 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு கொடுத்து வாலிபர் நூதன மோசடி
    X

    டிரைவரிடம் 9 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு கொடுத்து வாலிபர் நூதன மோசடி

    • டிப்-டாப் வாலிபர் காரில் ஏறியதும் கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள மதுபாருக்கு சென்று மது குடித்தார்.
    • கோயம்பேடு பஸ்நிலைய போலீசார் டிரைவர் சுதிரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த மர்மநபர் ஒருவர் தான் கீழ்ப்பாக்கம்அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் என்றும் ஆன்மிக சுற்றுலா செல்ல வேண்டும் என்றும் கூறி ஆந்திர மாநிலம் கூடூரில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் காரை பதிவு செய்தார். இதையடுத்து டிரைவர் சுதிர் என்பவர் காருடன் கீழ்ப்பாக்கம் பகுதிக்கு வந்தார். அங்கு தயாராக நின்ற டிப்-டாப் வாலிபர் காரில் ஏறியதும் கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள மதுபாருக்கு சென்று மது குடித்தார். மேலும் உடன் வந்த டிரைவர் சுதிருக்கு ஏராளமான அசைவ உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட வைத்தார்.

    சிறிது நேரத்தில் அவர், தன்னுடன் பணிபுரிந்து வரும் பெண் டாக்டர் ஒருவருக்கு அவசர தேவைக்காக உடனே "கூகுள் பே" மூலம் ரூ.9ஆயிரம் அனுப்ப வேண்டும். ஏ.டி.எம்.ல் பணம் எடுத்து தந்து விடுகிறேன் என்று கூறினார். இதையடுத்து சுதிர் தனது உரிமையாளரிடம் போன் செய்து வாலிபர் கொடுத்த எண்ணிற்கு "கூகுள் பே" மூலம் ரூ.9 ஆயிரம் அனுப்பினார்.

    பின்னர் வெளியே சென்ற அந்த நபர் பணத்துடன் திரும்பி 500 ரூபாய் நோட்டுக்களாக ரூ.9 ஆயிரம் பணத்தை டிரைவர் சுதிரிடம் கொடுத்தார். சிறிது நேரத்தில் அவர் அங்கிருந்து நைசாக சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து பாரில் மதுகுடித்த பில் தொகை ரூ.2 ஆயிரம் கட்ட வேண்டும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர். உடனே சுதிர் தன்னிடம் இறந்த ரூ.500 நோட்டுகளை கொடுத்தபோது அவை கள்ளநோட்டுகள் என்பது தெரிந்தது. டாக்டர் போல் நடித்து நூதனமுறையில் கள்ளநோட்டுகளை கொடுத்துவிட்டு டிப்-டாப் வாலிபர் தப்பி சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து கோயம்பேடு பஸ்நிலைய போலீசார் டிரைவர் சுதிரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரிடம் இருந்த கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×