என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
- மார்க்கெட் சிக்னல் வளைவில் திரும்புவதற்காக பிரேக் போட்டுள்ளார்.
- அப்போது எதிர்பாராத விதமாக ஆறுமுகம் ஆட்டோவில் இருந்து தவறி சாலையில் விழுந்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஆவுடை யார்புரம் பாலவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 35). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஸ்டாண்டில் இருந்து ஆட்டோ ஓட்டி வருகிறார்.
சாலை விபத்து
இவர் மார்க்கெட் அருகே உள்ள பகுதியில் பயணியை இறக்கி விட்டு விட்டு மீண்டும் பழைய பஸ் நிலைய ஸ்டாண்டை நோக்கி ஆட்டோவை ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது மார்க்கெட் சிக்னல் வளைவில் திரும்புவதற்காக பிரேக் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆறுமுகம் ஆட்டோவில் இருந்து தவறி சாலையில் விழுந்தார்.
அதே நேரத்தில் அவர் ஓட்டி வந்த ஆட்டோவும் அவர் மீது கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை அங்கிருந்தவர்கள் மீட்ட தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஆறுமுகம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
போலீசார் விசாரணை
இது குறித்து மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஆறுமுகத்திற்கு திருமணம் ஆகவில்லை. இவர் மீது கொலை, கொலை முயற்சி உட்பட ஏராளமான வழக்குகள் தூத்துக்குடியில் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு குற்ற பதிவேட்டில் ரவுடி பட்டியலில் இருந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.






