search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driver arrested"

    அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் 2 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர்.
    நாகூர்:

    நாகையை அடுத்த நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் நேற்று காலை கங்களாஞ்சேரி சாலை தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை மறித்து சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.

    தொடர்ந்து லாரியில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் லாரி டிரைவர்கள் கீழ்வேளூர் கோகூர் மெயின் ரோட்டை சேர்ந்த சிவகுமார் (வயது 48), சிக்கல் குற்றம்புரிந்தானிருப்பு சிவன் கோவில் தெருவை சேர்ந்த செல்லதுரை (36) ஆகியோர் என்பதும், இவர்கள் உரிய அனுமதியின்றி வலங்கைமான் பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து மணல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமார், செல்லதுரை ஆகிய 2 பேரையும் கைது செய்ததுடன், 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
    சுரண்டையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து டிரைவரை கைது செய்தனர்.
    சுரண்டை:

    சுரண்டை வரகுணராமபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் மாடசாமி (வயது 45). விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது நண்பரான அதே ஊரை சேர்ந்த பால்சாமி (50) என்பவருடன் பரங்குன்றாபுரத்தில் உள்ள நண்பரை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அவர்கள் சுரண்டை இலந்தைகுளத்தில் வந்த போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த மணல் லாரி பைக் மீது மோதியது. இதில் மாடசாமியும், பால்சாமியும் பலத்த காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சுரண்டை இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி மற்றும் போலீசார் விரைந்து சென்று காயமடைந்த இருவரையும் மீட்டு தென்காசி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் நேசமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனுக்கு பண்ருட்டி பகுதி தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்தல் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் மேற்பார்வையில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், பாக்கியலட்சுமி, பால சுப்பிரமணியன் மற்றும் போலீசார் பண்ருட்டி பகுதியில் மணல் கடத்தல் தடுப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது புலவனூரில் இருந்து மாட்டுவண்டிகளில் மணல் அள்ளி வந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து மாட்டுவண்டிகளை ஓட்டி வந்த தட்டாம்பாளையத்தை சேர்ந்த சிவராமன்(வயது 35), தட்சிணாமூர்த்தி(52), சந்திரவேல்(39) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் மேல்குமாரமங்கலம் தென்பெண்ணையாற்றங்கரை அருகே மாட்டுவண்டிகளில் மணல் கடத்தி வந்த மேல்குமாரமங்கலத்தை சேர்ந்த பொன்மன்னன்(40), அம்பிகாபதி(27), லோகநாதன்(27), காசிநாதன்(37), அழகுநாதன்(45), ராமமூர்த்தி(40), கிருஷ்ணமூர்த்தி(53), லட்சுமணன்(48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் இவர்களிடம் இருந்து 11 மாட்டுவண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    மத்தூர் அருகே அனுமதியின்றி டிப்பர் லாரியில் மணல் அள்ளிய டிரைவரை கைது செய்த போலீசார் லாரியின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை அடுத்த நடுப்பட்டு ஆற்றில் மர்ம நபர்கள் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக மத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு டிப்பர் லாரியை வழிமறித்து சோதனையிட்டனர். அதில் 3 யூனிட் மணல் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். 

    இதில் வேலூர் மாவட்டம் காக்கங்கரையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் லாரியை ஓட்டி வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் லாரியின் உரிமையாளர் கோபி என்பவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 
    மதுரையில் வாகன சோதனையின்போது லாரியை ஏற்றி போலீசாரை கொல்ல முயன்றதாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை:

    மதுரை ஒத்தக்கடை போக்குவரத்து பிரிவு போலீஸ்காரர்கள் தினேஷ், மரியஅருண். இவர்கள் நேற்று மாலை மேலூர் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் லாரியை டிரைவர் மெதுவாக ஓட்டி வந்தார். உடனே போலீஸ்காரர்கள் லாரியின் முன் பகுதிக்கு சென்று விசாரிக்க முயன்றனர்.

    இதையடுத்து திடீரென்று வேகத்தை அதிகரித்த டிரைவர், போலீஸ்காரர்கள் மீது லாரியை ஏற்றிக் கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ்காரர் தினேஷ் ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சிலைமானை சேர்ந்த பெரியசாமி (44) என்பவரை கைது செய்தனர். லாரியையும் பறிமுதல் செய்தனர். #tamilnews

    திருவாரூர் அருகே அனுமதியின்றி லாரியில் மணல் ஏற்றிவந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவின்படி மணல் திருட்டை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் சோதனை நடத்தப்பட்டு மணல் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் திருவாரூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் தலைமையில் போலீசார் பவித்திரமாணிக்கத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரியை போலீசார் மறித்து சோதனை மேற்கொண்டனர். அதில் அனுமதியின்றி லாரியில் மணல் ஏற்றிவந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து குடவாசல் பூங்காவூரை சேர்ந்த டிரைவர் மாரிமுத்துவை (வயது 25) கைது செய்தனர்.

    புன்னம் சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் கடவூர் அருகே, தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன் (55). இவர் தனது மோட்டார் சைக்கிளில் புன்னம்சத்திரம் அருகே பஞ்சயங்குட்டை- நடுப்பாளையம் சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இதில் பழனியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்தும் வேலாயுதம் பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

    இது குறித்து வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் நல்லையனை கைது செய்தனர்.
    ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீழ மழையூரைச் சேர்ந்தவர் பாண்டியன் (25).இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஆலங்குடி சென்று விட்டு மீண்டும் மழையூருக்கு திரும்பி கொண் டிருந்தார். அப்போது சாலையில் அதே பகுதியை சேர்ந்த காமேஸ்வரி (21) மற்றும் சரண்யா (24) தனது குழந்தை யோகப்பிரியாவுடன் நடந்து சென்று கொண்டிருந்தனர். உடனே பாண்டியன் அவர்கள் 3 பேரையும் தனது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர வைத்து மழையூருக்கு அழைத்து சென்றார். 

    ஆலங்குடியை அடுத்த மேலப்பட்டி ராசிமங்கலம் அருகே சென்ற போது வடகாட்டை சேர்ந்த சையது ஹக்கிம் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் பின்னால் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய சையது ஹக்கிமை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    திருப்பூரில் பனியன் தொழிலாளர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் இடுவம்பாளையம் தந்தை பெரியார் நகரில் உள்ள காட்டுப் பகுதியில் ஒருவர் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து பனியன் தொழிலாளர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு சப்ளை செய்வதாக வீரபாண்டி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்தில் ரகசியமாக கண்காணித்து வந்தனர், அப்போது அங்கு பனியன் தொழிலாளர்களுக்கும், வடமாநில தொழிலாளர்களுக்கும் கஞ்சா சப்ளை செய்து கொண்டிருந்த ஒருவரை கையும் களவுமாக பிடித்தனர் அவரிடமிருந்து 25 பாக்கெட் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    அவரிடம் விசாரித்தபோது அவர் மதுரையைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 39) என்பதும், தற்போது திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து ஆட்டோ டிரைவராக வேலை செய்வதும் கஞ்சாவை மதுரையில் இருந்து கொண்டு வந்து திருப்பூரில் விற்பதும் தெரியவந்தது இதையடுத்து அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
    வேடசந்தூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளியது தொடர்பாக லாரி பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை தேடி வருகின்றனர்.
    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருகேயுள்ள நல்லமனார்கோட்டை, கோட்டைமந்தை உள்ளிட்ட பகுதிகளில் வரட்டாற்றில் மர்ம கும்பல் அனுமதியின்றி மணல் அள்ளி செல்கிறது. மேலும் மணல் அள்ளுவதை தடுக்க முயற்சிக்கும் விவசாயிகளை அந்த கும்பல் மிரட்டுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து மணல் அள்ளும் கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கோட்டைமந்தை முனியப்பன் கோவில் அருகே ஒரு மினிலாரி மணல் ஏற்றி கொண்டு வந்தது. ஆனால், போலீசார் வருவதை கண்டதும் மினிலாரியை நிறுத்தி விட்டு, டிரைவர் தப்பியோடி விட்டார். இதையடுத்து மினிலாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மினிலாரியை ஓட்டி வந்தது சொட்டமாயனூரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 38) என்பது தெரியவந்தது. எனவே, அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    காரைக்குடி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் அள்ளி வந்த லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    காரைக்குடி:

    செட்டிநாடு போலீசார் நேமத்தான்பட்டி சோதனைச் சாவடி அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியே வந்த லாரியை மறித்து நிறுத்தினர். அந்த லாரியை போலீசார் சோதனை செய்த போது, எவ்வித ஆவணமின்றி லாரியில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து சூசையப்பர்பட்டினத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது 22), மரக்காத்தூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (33) பள்ளிதம்மம் பகுதியை சேர்ந்த செந்தில் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மணலுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல வடக்கு போலீஸ் சரகம் என்.ஜி.ஓ. காலனி அருகே போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது காரைக்குடி பகுதியை சேர்ந்த மணிவேல் (40) என்பவர் அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்த காரைக்குடி வடக்கு போலீசார் மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.

    இதுபோன்று பள்ளத்தூர் போலீசார் கல்லூர் சாலையில் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஸ்ரீராம் நகரை சேர்ந்த குமார் (22) என்பவரை போலீசார் கைது செய்து, லாரியுடன் மணலை பறிமுதல் செய்தனர். 
    நொய்யல் அருகே சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் விவசாயி சம்பவ இடத்திலேயே பலியானர். பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    வேலாயுதம்பாளையம்: 

    கரூர் மாவட்டம் பாலத்துறை அருகே திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 83), விவசாயி. இவர் நேற்று முன்தினம்  பாலத்துறை அருகே உள்ள வெற்றிலை தோட்டத்திற்கு சென்றார். பின்னர் தோட்ட வேலைகளை முடித்துவிட்டு இரவு தனது சைக்கிளில் வீட்டிற்கு கிளம்பினார். அப்போது சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, அவரின் பின்னால் வந்த அரசுப்பேருந்து சைக்கிள் மீது மோதியது.

    இதில் பெரியசாமியின் தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

    இது குறித்து பெரியசாமி மகன் செந்தில் நாதன் (40) வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அரசுப்பேருந்து ஓட்டுனர் சேலம் மாவட்டம் கண்டக் காப்பட்டியை சேர்ந்த நல்ல தம்பி என்பவரை கைது செய்தனர். மேலும் விபத்தில் இறந்த பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    ×