என் மலர்

  நீங்கள் தேடியது "cannabis sale"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புஞ்சை புளியம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முள்காட்டில் கஞ்சா விற்ற பெண்ணை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.

  ஈரோடு:

  புஞ்சை புளியம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

  அப்போது சொலவனூர் மேடு அருகில் உள்ள ஒரு முள்ளுக்காட்டில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.

  விசாரணையில் அந்த பெண் சொலவனூர் பகுதியை சேர்ந்த ராதா (வயது 45) என்பதும், கஞ்சா விற்றதும் தெரிய வந்தது.

  இதையடுத்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராதாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிராம் எடையுள்ள 100 பாக்கெட் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.

  இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூரில் பனியன் தொழிலாளர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
  திருப்பூர்:

  திருப்பூர் இடுவம்பாளையம் தந்தை பெரியார் நகரில் உள்ள காட்டுப் பகுதியில் ஒருவர் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து பனியன் தொழிலாளர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு சப்ளை செய்வதாக வீரபாண்டி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்தில் ரகசியமாக கண்காணித்து வந்தனர், அப்போது அங்கு பனியன் தொழிலாளர்களுக்கும், வடமாநில தொழிலாளர்களுக்கும் கஞ்சா சப்ளை செய்து கொண்டிருந்த ஒருவரை கையும் களவுமாக பிடித்தனர் அவரிடமிருந்து 25 பாக்கெட் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

  அவரிடம் விசாரித்தபோது அவர் மதுரையைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 39) என்பதும், தற்போது திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து ஆட்டோ டிரைவராக வேலை செய்வதும் கஞ்சாவை மதுரையில் இருந்து கொண்டு வந்து திருப்பூரில் விற்பதும் தெரியவந்தது இதையடுத்து அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றுலா தலங்களான கொடைக்கனால், பழனி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
  திண்டுக்கல்:

  திண்டுக்கல் மாவட்டத்தில் மலைப்பாங்கான பகுதிகள் அதிகமாக உள்ளதால், மலை அடிவார பகுதிகளில் கஞ்சா எனப்படும் போதை பயிர் வளர்க்கப்பட்டு வருகிறது. கஞ்சா பயிருக்கு ஏற்ற சீதோசனம் வருடம் முழுவதும் நிலவுவதால் இந்த பகுதிகளில் கஞ்சா பயிரிடப்படுகிறது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா எளிதாக கிடைக்க கூடிய பொருளாக உள்ளது.

  கன்னிவாடி, சிறுமலை அடிவாரம், அய்யலூர், பழனி குதிரையாறு அணை பகுதி, கொடைக்கானல் மேல்மலை கிராமமான பள்ளங்கி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் கஞ்சா பயிரிடப்பட்டு விற்பனை அனுப்பபட்டு வருகிறது. இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலையங்களில் புகார்களும் பதிவாகி உள்ளது.

  இதில் சுற்றுலா தலங்களான கொடைக்கனால், பழனி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. இளைஞர்கள், சுற்றுலா பயணிகளை குறிவைத்து இந்த கஞ்சா விற்பனை அதிகளவு நடந்து வருகிறது. சிறிய பெட்டிக் கடைகள் மட்டும் அல்லாது நகர்ந்து கொண்டே விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொடைக்கானல் பகுதிக்கு உசிலம்பட்டி, வருசநாடு பகுதிகளிலிருந்து கஞ்சா வரத்து அதிகமாக கொண்டு வரப்படுகிறது.

  திண்டுக்கல் நகர் பகுதிகளில் சர்வ சாதாரணமாக கஞ்சா விற்பனை நடந்தேறிக் கொண்டு இருக்கிறது. கொடைக்கானல் பகுதியில் பஸ் நிலையம், மற்றும வட்டகாணல், பள்ளங்கி கோம்பை, மற்றும மேல் மலை பகுதிகள், பழனியில் நெய்காரப்பட்டி, பாப்பம்பட்டி, அடிவாரம், குதிரையாறு டேம், சத்திரபட்டி உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. சத்திரப்பட்டி போலீசார் 6 மாத காலத்தில், 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

  வேடந்தூர் தாலுகா பகுதிகளான எரியோடு, வடமதுரை, அய்யலூர் உள்ளிடட பகுதிகளில் கஞ்சா சாதராணமாக கிடைத்து வருகிறது. நத்தம் தாலுகா சாணார்பட்டி, அஞ்சு குழிபட்டி, கோபால்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. வத்தலகுண்டு பெத்தாணியபுரம் பகுதியில் விற்பனை சூடுபிடித்து நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கமர்கட்டு விற்பது போல், கஞ்சா விற்பனை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அடிமையாகி வருகின்றனர்.

  எனவே இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூரில் கஞ்சா விற்பனை தொழில் செய்துவந்த பெண் வியாபாரி, பெண்கள் போராட்டம் நடத்துவதை அறிந்து தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் தலைமறைவாகிவிட்டார்.

  திருப்பூர், செப்.18-

  பொதுமக்கள் போராட்டம் காரணமாக பெண் கஞ்சா வியாபாரி குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.

  திருப்பூர் குமாரசாமி நகர் பகுதியை சேர்ந்த பாபு மற்றும் அவரது மனைவி சுப்புலட்சுமி ஆகியோர் பல ஆண்டுகளாக வீட்டில் வைத்தே கஞ்சா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

  இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்புலட்சுமியை பல முறை கைது செய்துள்ளனர். ஆனால் மீண்டும் கஞ்சா விற்பனை செய்வதை அவர் முழு நேர தொழிலாக செய்து வந்ததாக கூறப்படுகிறது.

  இதனால் ஆத்திரம் அடைந்த அப் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து பிச்சம் பாளையம் புதூர் நால் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

  தகவல் அறிந்து அங்கு வந்த அனுப்பர் பாளையம் போலீசார் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது பெண்கள் சிலர் கஞ்சா வியாபாரி சுப்புலட்சுமி வீட்டிற்கு சென் று முற்றுகையிட்டனர்.

  மேலும் சுப்புலட்சுமியின் வீட்டின் இரு பக்க கதவுகளில் சங்கிலியுடன் கூடிய பூட்டை போட்டு பூட்டினார்கள்.

  பெண்கள் போராட்டம் நடத்துவதை அறிந்த கஞ்சா வியாபாரி சுப்புலட்சுமி தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் தலை மறைவாகி விட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள் 3 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் தங்கிய விடுதியில் இருந்து 35 பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
  மதுரை:

  மதுரையில் கஞ்சா புழக்கம் அதிகரித்து உள்ளது. இதை தடுக்கும் வகையில் மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் சிறப்பு தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார்.

  இந்த நிலையில் மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் தனிப்படை போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களிடம் போலீசார் சோதனை நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  போலீஸ் விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த ஜாக்சன் சாமுவேல் (வயது 20), கீழவைத்தியநாதபுரம் ஆகாஷ் (20) என்பது தெரிந்தது.

  இதில் ஜாக்சன் சாமுவேல் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டும், ஆகாஷ், மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.

  இவர்களுக்கு கோரிப்பாளையம் தனியார் கல்லூரியில் படிக்கும் பெரியகுளத்தைச் சேர்ந்த மாணவர் சூர்யா (19) கஞ்சா பொட்டலங்களை விற்றுள்ளார்.

  இதைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்துக்கு சென்ற போலீசார் அங்கு விடுதியில் சூர்யா மற்றும் அவரது நண்பர் பிரேம் (20) ஆகியோரது அறையில் சோதனை நடத்தினர்.

  இதில் 35-க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சூர்யா, ஜாக்சன் சாமுவேல், ஆகாஷ் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
  ×