search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பு.புளியம்பட்டி அருகே முள்காட்டில் கஞ்சா விற்ற பெண் கைது
    X

    பு.புளியம்பட்டி அருகே முள்காட்டில் கஞ்சா விற்ற பெண் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புஞ்சை புளியம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முள்காட்டில் கஞ்சா விற்ற பெண்ணை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.

    ஈரோடு:

    புஞ்சை புளியம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சொலவனூர் மேடு அருகில் உள்ள ஒரு முள்ளுக்காட்டில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த பெண் சொலவனூர் பகுதியை சேர்ந்த ராதா (வயது 45) என்பதும், கஞ்சா விற்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராதாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிராம் எடையுள்ள 100 பாக்கெட் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×